சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது ""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.
மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது. குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.
இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.
முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.
கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.
வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?
1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.
1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.
""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.
""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.
முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?
வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.
இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.
இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.
நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?
முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.
நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.
வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.
போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?
ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.
""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.
புதிய ஜனநாயகம் -
2006
இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்!
வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசியர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவர்கள், அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.
கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூத்து தந்தவர்கள் நினைக்கலாம் ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.
(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.
மாவீரன் திப்பு சுல்தான்:
''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து லி ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க லி அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் 'இது ஒரு கற்பனைக் கதை' என்ற வரிகNள்hடு தான் தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?
பேகம் ஹஜ்ரத் மஹல்:
டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய்! இதை எப்படி மறந்தார்கர்கள்? (மறைத்தார்கள்!)
அஸ்வ குல்லா கான்:
பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கிடப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது?
வேலூர் சிப்பாய்க் கலகம்:
சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?
மாவீரன் கான் சாஹிப்:
மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.
மாப்பிளா மார்கள் போராட்டம்:
1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!)
காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.
கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்?
அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?
காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்
அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்ம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே!
இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு
இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.
வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.
19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்ம்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.
காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:
1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை)
2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்)
3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.)
4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்)
5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்)
6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்)
7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்)
8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.)
9. அப்துல் ஹமீது
10. மௌலானா அப்துல் காதர்
1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலிம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு:
பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காரிவிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம் ô
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரகப்பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்
தொகுப்பு-யூசுப் கான்
http://www.tntj.net/article/Suthanthirathil_Muslimgalin_Pangu.asp
courtesy: www.tntj.net
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, ""மக்களின் ஆரோக்கியத் தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?'' என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் "சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.
அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.
""எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி'' என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். ""எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது'' என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.
திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. ""விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்'' என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
""தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்'' என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.
""ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்'' என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: ""சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.''
1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: ""இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்.'' ""தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.'' — இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.
மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.
தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.
""நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.''
வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. ""விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்'' என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?
திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். "சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.
காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? "உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் ""ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்'' என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.
இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு. ""மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்'' என்று பதறுகிறான் அவருடைய பணியாள். ""முட்டாள்... வாயை மூடு'' என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! ""ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்'' என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
""நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை பார்க்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.''
""மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா''
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.
தகவல் உதவி அபு ஜுலைஹா
***********************************************************************************
சுதந்திர தினமான இன்று சிறப்புக் கட்டுரையாக இதையும் வெளியிட்டு,இத்துடன் இனிதே முற்று பெறுகிறது.இதுவரை சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டு,தன் இன்னுயிரை ஈந்த தீரர் திப்புவின் வரலாறை அறிந்தோம்.அந்த மாவீரருக்கு அல்லாஹ்விடம் துவா செய்வோம்,இன்ஷா அல்லாஹ்.மேலும் அதிரை எக்ஸ்பிரஸ்,அதன் வாசகர்கள்,உலகெங்கும் உள்ள அதிரை மற்றும் இந்திய சகோதரர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள்.நன்றி.
இந்திய விடுதலைக்கு சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர் களிலும் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975)
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கு முன்பாக, இந்தியாவை ஆண்டவர்கள் முகலாய முஸ்லிம் மன்னர்கள். ஒளரங்கசீப் அவர்கள் தான் அகண்ட பாரதத்தை உருவாக்கி யவர். இன்றைய ஆப்கான், பாகிஸ் தான், பங்களாதேஷ் மற்றும் இன்றைய இந்தியாவில் காஷ்மீர் முதல் மதுரை வரையிலும் அவர் ஆட்சி நடந்தது. அவருக்குப் பின்னால் முகலாய பேரரசு பலவீனம் அடைந் தது. அதன் வீழ்ச்சிதான் ஆங்கிலேயர் கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர் கள், போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்தனர். இதில் 95 சதவீத இந்தியாவை ஆக்கிரமித்த வர்கள் ஆங்கிலேயர்கள். இவர்கள் அனைவருக்கும் எதிராக வீரம் செறிந்த போர்களை முதலில் தொடங்கியவர்கள் முஸ்லிம்களே! அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை துணுக்குகளாக வாசகர் களுக்கு வழங்குகிறோம்.
குஞ்சாலி மரைக்காயர்கள்
போர்ச்சுகீசியர்கள்தான் முதன் முதலில் இந்தியாவை நோக்கி படை யெடுத்தவர்கள். அவர்கள் கேரளாவின் கடலோரப் பகுதிகளை கடற்படையுடன் முற்றுகையிட்ட போது, கேரளாவின் பகுதிகளை ஆட்சி செய்து வந்த குஞ்சாலி மரைக்காயர்கள்தான் அவர்களை படு தோல்வி அடையச் செய்தனர். முதலாம் குஞ்சாலி மரைக்காயர், இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என தலைமுறை யாக தொடர்ந்த முதல் விடுதலைப் போரில் அனைவரும் தங்கள் இன்னுயிர் களை நீத்தனர். 16ஆம் நூற்றாண்டி லேயே விடுதலை தீபத்தை ஏற்றிவைத்து முதலில் உயிர்த்தியாகத்தை அர்ப்பணம் செய்தவர்கள் இவர்களே.
சிராஜுத் தௌலா
17ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிளாசி என்ற இடத்தில் கடும் போர் நடத்தி ஆங்கிலேயர்களை திணறடித்தவர் சிராஜுத் தௌலா. சூழ்ச்சிகள் மூலம் துரோகிகளின் துணையுடன் சிராஜுத் தௌலா கைது செய்யப்பட்டார். அவரைப் பணியவைக்க ஆங்கிலேயர் கள் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. அந்த மாவீரனை கல்கத்தா துறைமுகத் தில் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டு கொன்றனர்.
மருதநாயகம்
பிரெஞ்சுக்காரர்கள் படையில் சாதாரண வீரனாக இருந்து தம் திறமைகளால் படைத் தளபதியானவர் மருதநாயகம். இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்ட யூசுப்கான் என்ற அடையாளத் துடன் பின்னாளில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரப்போர் புரிந்தார். நவீன ஆயுதங்களுடன் கூடிய ஆங்கிலப் படை மருதநாயகத்தின் வீரத்தின் முன் பலமுறை மண்டியிட்டது. அந்த மாவீரன் பிராமணன் ஒருவனின் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர் களால் கைது செய்யப்பட்டு 15.10.1764ல் தூக்கிலிடப்பட்டார். அவரது உடலை பல பாகங்களாக வெட்டி ஆங்கிலேயர்கள் பல்வேறு இடங்களில் புதைத்தனர். இறந்த பிறகும் அவரது உடலைக் கண்டு ஆங்கிலேய தளபதிகள் குலைநடுங்கிய தையே இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
ஹைதர் அலி
17ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் விடுதலை அதிர்வுகளை முதலில் தொடங்கியவர் ஹைதர் அலி அவர்கள்தான். அவர் நடத்திய விடுதலைப் போர் 'முதலாம் கர்நாடகப் போர்' என வர்ணிக்கப் படுகிறது. ஆங்கிலேயர்களை நாலா புறமும் திணறடித்த ஹைதர் அலி இறுதியில் கொல்லப்படுகிறார். அவர் வழியிலேயே அவர் மகன் திப்பு சுல்தான் விடுதலைப் போரை தொடர்ந்து நடத்தினார்.
திப்பு சுல்தான்
'பல நாள் நாயாக வாழ்வதை விட, ஒரு நிமிடம் சிங்கமாக வாழ்ந்துவிட்டு சாவது மேல்' என கர்ஜித்த மாவீரன் திப்பு சுல்தான். ஸ்ரீரங்கப் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா என தென்னிந்தி யாவின் சரிபாதி பகுதிகளை தன் சாம்ராஜ்யத்தில் இணைத்தார். இவர்தான் இந்தியாவில் மதுவிலக்கு கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தியவர். உலக ஏவுகணை தொழில்நுட்பத்தின் முன்னோடி என அப்துல் கலாம் போன்றவர்களே வியந்து போற்றும் விஞ்ஞானி. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் தனது அரண் மனையில் பிரம்மாண்ட நூலகத்தை வைத்திருந்த ஒரே மன்னனும் திப்பு சுல்தான் தான்.
ஆங்கிலேயர்களை வீழ்த்த அவர் களின் படைகளை ஐரோப்பாவில் குலைநடுங்கச் செய்த பிரெஞ்ச் மன்னர் நெப்போலியனுடனும் ராணுவ ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்த ராஜதந்திரியும் கூட. இந்துக்களின் உரிமைகளைப் பெரிதும் மதித்த பண்பாளர். இவரது வீர வாள் சுழலும் போதெல்லாம் ஆங்கி லேயர்களின் துப்பாக்கிகள் வீழ்ந்தன. இவரது குதிரைப் படைகள் முன்னேறும் போதெல்லாம் ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் பின்வாங்கின. இறுதியில் காட்டிக் கொடுக்கும் துரோகிகளால் திப்பு கொல்லப்பட்டார். ஆனால் வரலாற்றில் இன்றும் எழுந்து நிற்கிறார் தியாகியாக! அவர் 4.5.1799 அன்று கொல்லப்பட்டார்.
திப்புவின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்ட னர். அவர்கள் தங்களது தாத்தா ஹைதர் அலி, தந்தை திப்புவின் வழியில் சிறை வைக்கப்பட்ட சூழலிலும் புரட்சியில் ஈடுபட்டு ஆங்கிலேய தளபதிகளையும், சிப்பாய்களையும் கோட்டைக்குள் கொன்றனர். இது 1806லிஆம் ஆண்டு நடைபெற்றது. இது வேலூர் புரட்சி என அழைக்கப்படுகிறது. இதில் திப்புவின் வாரிசுகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பீரங்கிகளால் துளைக்கப்பட்டு ஷஹீதுகளாய் வீழ்ந்தார் கள் வேலூரில். அவர்களது ரத்தம் வேலூரின் கோட்டையிலும், சுற்றி ஓடும் அகழியிலும் கொட்டிக் கிடக்கிறது.
இரண்டாம் பகதூர்ஷா
1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்த னர். இறுதியில் புரட்சி ஒடுக்கப்பட்டு மன்னர் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்டார். பர்மாவின் ரங்கூன் சிறையில் மனைவி ஜீனத் மஹலுடன் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார். நேதாஜி அவர்கள் பர்மா வந்ததும், பேரரசர் பகதூர்ஷாவின் கல்லறைக்குச் சென்று தன் அன்பை வெளிப்படுத்தினார். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் பர்மா சென்றபோது இவரது கல்லறைக்கு சென்று தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பாபரில் தொடங்கிய முகலாய பேரரசு இரண்டாம் பகதூர்ஷாவுடன் நிறைவுற்றது.
ஜான்சி ராணி லெட்சுமிபாய்
ஜான்சி ராணி லெட்சுமிபாய் விடுதலைப் போரில் பங்கெடுத்தார். இன்றைய உ.பி. மற்றும் ம.பி. மாநிலங் களின் சில பகுதிகள் இவரது ஆட்சியில் இருந்தது. இவரது படைத் தளபதி காஸாகான் என்பவர்தான் ஆங்கிலேயர்களை வீழ்த்தி கோட்டை யைக் கைப்பற்றி னார். ஜான்சி ராணியை ஆங்கிலேய தளபதி கேப்டன் கென் என்பவன் கொல்ல முயன்றபோது, அவனை வீழ்த்தி ஜான்சி ராணியைக் காப்பாற்றியவர் பக்ஷீஸ் அலி என்பவரா வார். ஜான்சி ராணியை ஆங்கிலேயர்கள் தாக்கியபோது, அவர்களுக்கு கடும் தோல்வியைக் கொடுத்து தன்னுயிரை ஈத்தவர் குலாம் கவுஸ்கான் என்பவ ராவார்.
முதல் இந்திய இடைக்கால அரசு
1915ல் ஆப்கானிஸ்தானில் ஆங்கி லேயப் படையை முஸ்லிம்கள் தோற் கடித்தனர். ஆப்கானிஸ்தானில் இந்தியா வுக்கு வெளியே இந்தியாவுக்கான முதல் இந்திய சுதந்திர அரசை தற்காலிகமாக அமைத்தவர்கள் முஸ்லிம்கள்தான். முதல் பிரதமராக இருந்தவர் பரக்கத்துல் லாஹ், உள்துறை அமைச்ச ராக இருந்தவர் உபைதுல்லாஹ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பத்ருதீன் தையாப்ஜி
இந்தியாவின் இன்றைய மூவர்ணக் கொடியை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் பத்ருதீன் தையாப்ஜி. இவர் 1902ல் பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர்தான் ஆர்எஸ்எஸ்காரர்கள் மதிக்கும் பால கங்காதர திலகரை விடுதலை செய்தவர். இவரது மனைவி பீபி ரஹ்மத்லிஉன்லிநபா என்பவர் இந்திய தேசிய மகளிர் சங்கத்தை உருவாக்கினார். இதுதான் இந்தியாவில் உருவான முதல் மகளிர் மேம்பாட்டுக்கான அமைப்பாகும். பத்ருதீன் தயாப்ஜியை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஒரு தெருக் கோடிக்கு கூட அவர் பெயர் சூட்டப்பட வில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.
காங்கிரஸில் முஸ்லிம்கள்
காங்கிரஸின் முதல் தலைவராக சைமன் என்ற ஆங்கிலேயர் இருந்தார். ஆங்கிலேயர்களில் சில நல்லவர்கள் தான் காங்கிரஸ் கட்சியைத் துவக்கினார். இரண்டாவது தலைவராக ரஹ்மத்துல் லாஹ் சயானி என்பவரும், மூன்றாவது தலைவராக பத்ருதீன் தையாப்ஜியும் பணியாற்றினார்கள். அப்போது காந்தி இந்தியாவுக்கே வரவில்லை, அவர் அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி 1915லில்தான் இந்தியாவுக்கு வருகை தந்தார். 1915ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மௌலானா முகம்மது அலி தேர்ந் தெடுக்கப்பட்டார். 1930ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அவர்தான் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டார்.
1935ல் காங்கிரஸின் தலைவராக அபுல்கலாம் ஆசாத் தேர்ந்தெடுக்கப் பட்டார். தனது 'அல்லிஹிலால்' என்ற இதழ் மூலம் முஸ்லிம்களிடம் விடுதலைத் தீயை மூட்டினார். முஹம்மது அலி ஜின்னாவும் ஒருமுறை காங்கிரஸ் தலைவராக பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் பெண்கள்
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் பெண்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இரண்டாம் பகதூர்ஷா ஜாபரின் மனைவி ஜீனத் மஹல், திப்பு வின் குடும்பப் பெண்கள். பேகம் ஹஜ்ரத் மஹல், அலி சகோதரர்களின் தாயார் பீபியம்மாள் எனப்படும் ஸாஹிபா பானு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அலி சகோதரர்கள்
கிலாபத் இயக்கத்திலும் ஒத்துழை யாமை இயக்கத்திலும் பங்கெடுத்த மௌலானா முகம்மது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முகம்மது அலியின் மனைவி பேகம் சாஹிபாவும், அவரது தாயார் ஸாஸியா பானுவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அந்தக் காலத்திலேயே விடுதலைப் போருக்கு ரூ.30 லட்சத்தை நிதியாகத் தந்தனர். என் பிள்ளைகள் சிறையில் இருக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஆங்கிலேயர் களிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலை யானால், அவர்களது குரல் வளையை நானே நெறித்துக் கொல்வேன் என கர்ஜித்தார் அவரின் தாயார் பீபியம்மாள்! அவரைப் போலவே அவர்களின் பிள்ளைகள் இரட்டைக் குழல் துப்பாக்கி களாக வீரத்தோடு களமாடினார்கள். இந்த வீரத்தாய் பீபியம்மாள்தான் காந்திஜிக்கு கதர் ஆடையைப் போர்த்தி கண்ணியப் படுத்தினார். (கதர் என்ற அரபுச் சொல்லுக்கு கண்ணியம் என்று அர்த்தம்). பின்னர் காந்தியால் கதர் இயக்கமாக தொடங்கப்பட்டு இன்றுவரை நீடிக்கிறது.
பகத்சிங்
மாவீரன் பகத்சிங்கிற்கு, காந்தி போன்றோர் 'தண்டனை தரவேண்டும்' என போலிக் கொள்கை பேசியபோது, பகத்சிங்கின் தூக்குத் தண்ட னையை எதிர்த்து நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர் கள் வாதாடினர். அதில் முக்கியமானவர் வழக்கறிஞர் ஆசிப் அலி என்பவராவார். இவரை ஆங்கில அரசு பல்வேறு காலக்கட்டங்களில் 13 ஆண்டுகள் சிறையில் அடைத்தது.
மதரஸாக்களின் சுதந்திர வேட்கை
சுதேசி இயக்கம் நடந்தபோது அந்நியப் பொருட்களை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். கதர் ஆடைகளையே அணிந்தனர். கதர் ஆடை உடுத்திய மணமக்களின் திருமணங்களுக்கு மட்டுமே முஸ்லிம் தலைவர்கள் வருகை தந்தனர். முஸ்லிம்கள் ஆங்கிலேய தயாரிப்புகளை தீயிலிட்டுக் கொளுத்தி னர். வேலூரில் மவ்லவி கலீலுர் ரஹ்மான் தலைமையில் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா வளாகத்தில் அந்நிய துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மதரஸாக் களிலும் சுதந்திர வேட்கை வீறிட்டு பரவியது.
முஸ்லிம் வள்ளல்கள்
இதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கு என சுதேசி கப்பல் கம்பெனியை வ.உ.சிதம்பரனார் பிள்ளை தொடங்கிய போது, அந்தக் காலத்தில் ரூ.2 லட்சத்தை தந்து உதவியவர் ஹாஜி பக்கீர் முஹம்மது ராவுத்தர் என்பவராவார். கப்பல் கம்பெனி நஷ்டத்தில் இயங்கிய போது வ.உ.சி. அவர்களுக்கு யாகூப் சேட், உமர் கத்தாப், இப்ராகிம் செய்யது ராவுத்தர், அஹமது சாஹிப், முகம்மது சுலைமான் ஆகியோர் தொடர்ந்து பல லட்சங்களை வாரி வழங்கினர். வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1912ல் வறுமையில் வாடியபோது அவருக்கு உதவிகளை செய்து மகிழ்ந்த வர் அகமது மீரான் என்பவராவார். வ.உ.சி.யின் விடுதலைக்காக வாதாடிய ஒருவரும் முஸ்லிம் வழக்கறிஞர்.
ஒத்துழையாமை இயக்கத்தில் முஸ்லிம்கள்
காந்தி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோது நாடெங்கும் முஸ்லிம்கள் களத்தில் குதித்தனர். 1920ல் காயிதே மில்லத் போன்றோர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போராட்டத்தில் குதித்தனர். ஆங்கிலக் கல்விக்கூடங்களுக்கு தங்கள் பிள்ளை களை அனுப்பாமல் ''ஆங்கிலம் படிப்பது ஹராம்'' என அறிஞர்கள் ஃபத்வா வழங்கினர்.
ஜாலியன் வாலாபாக்
இன்றைய தடா, பொடா சட்டத்திற்கு முன்னோடியான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. அப்போது பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் பெரும் கூட்டம் கூடியது. அந்த மைதானத்தில் ஒருவழிப் பாதை மட்டுமே உண்டு. அங்கே நுழைந்த ஜெனரல் டயர் என்ற ஆங்கி லேய தளபதியின் தலைமையிலான படை சுற்றி வளைத்து 1650 தோட்டாக் களை சரமாரியாகப் பாய்ச்சியது. அதில் சுமார் 1000 பேர் இறந்ததாக விசாரணைக் கமிஷன் கூறியது. அதில் சரிபாதிக்கும் மேலானோர் முஸ்லிம்கள் என்பதை அங்கிருக்கும் கல்லறைகள் சாட்சியாக கூறிக் கொண்டிருக்கின்றன.
வள்ளல் ஜமால் முஹம்மது
காந்தி அவர்கள் தமிழகம் வருகை தந்து விடுதலைப் போராட்டத்திற்கும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பிரச்சாரத் திற்கும் நிதி சேர்க்க முயன்றார். அப்போது வெற்றுக் காசோலையை காந்தியிடம் கொடுத்து நீங்கள் விரும்பும் தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என காந்திக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தவர் ஜமால் முஹம்மது. அவரது பெயரால் தான் இன்று திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி விளங்குகிறது.
காந்தியின் கதர் துணி பிரச்சாரத்திற்கு வலுவூட்ட காஜா மியான் ராவுத்தர் 50 ஆயிரம் ரூபாயில் கதர் நெசவு ஆலையை நிறுவினார். அவரது பெயர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்கு சூட்டப்பட்டிருக்கிறது.
கேரள மாப்பிள்ளைமார்கள்
1921ல் கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல். அந்தப் புரட்சியால் ஆங்கிலேயப் படைகள் சிதறி தெறித்து புறமுதுகிட்டனர். அந்தப் புரட்சி ஒடுக்கப்பட்டு மாப்பிள்ளைமார்களில் பலர் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் சன்னல்கள் இல்லாத கூட்ஸ் ரயிலில் அடைக்கப்பட்டு கோவைக்கு அனுப்பப் பட்டனர். கோவை ரயில் நிலையம் வந்ததும், கூட்ஸ் வண்டி திறக்கப்பட்டது. அதில் மூச்சுத் திணறி 65 முஸ்லிம் வீரர்கள் தம் இன்னுயிர் நீத்தனர். அவர்களது ஜனாஸாக்கள் கோவை ரயில் நிலையம் அருகில் புதைக்கப்பட்டன. இப்போதும் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று பார்த்தால் அருகில் ஒரு பள்ளிவாசல் இருக்கும். அங்கிருக்கும் அம்மண்ணறைகள் ஒன்றும் அவர்களின் தியாகத்தை சாட்சி கூறிக் கொண்டிருக்கின்றன.
தொகுப்பு: எம். தமிமுன் அன்சாரி, ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ்
"அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன; முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.
திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக்கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத் தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
தகவல் உதவி அபு ஜுலைஹா