As-salamu `alaykum. This is in reference to what was published in Murcurynews.com about the attitude of the airport authorities in Minneapolis toward Muslim cabbies who refuse to transport passengers with alcohol because of religious concerns.The airport authorities stated that the response was overwhelmingly negative, and some taxi companies feared that people would switch to other forms of ground transportation. The authorities stated that taxi drivers who refuse passengers with alcohol will continue to forfeit their place in the taxi queue and return to the back of the line, which often means a three-hour wait for another fare.The question now is this: Is the attitude of these Muslim cabbies who refuse to carry passengers with alcohol in line with the teachings of Islam? Are cabbies required to inquire about the items passengers carry and whether they contain alcohol or not? Or should cabbies refuse to carry passengers when they see pictures of alcoholic beverages on the stuff they may carry? How can they, as Muslims, react to such procedures by the airport authorities?
Date 31/May/2007 Name of Mufti Mohamed El-Moctar El-Shinqiti Topic Morals & Manners, Social Manners, Morals & Values
Answer
Wa `alaykum as-salamu wa rahmatullahi wa barakatuh. In the Name of Allah, Most Gracious, Most Merciful. All praise and thanks are due to Allah, and peace and blessings be upon His Messenger. Thanks for your important question, and we implore Allah earnestly to guide us all to the best of acts in this world and reward us with the highest reward in the hereafter. Ameen.First of all, we would like to stress that Muslims, especially those living in Muslim-minority countries, should try their best to be excellent ambassadors of their religion. If they are faced with uneven circumstances, such as the one referred to in the question, then they should solve the problems while applying wisdom and fair exhortation, making use of the civil liberties that guarantee respect for everyone's beliefs . On the other hand, the taxi companies responsible should help ease the problems Muslims might face as a result of religious concerns. Responding to the question, Sheikh Mohamed El-Moctar El-Shinqiti, director of the Islamic Center of South Plains, Lubbock, Texas, states the following: First of all, Muslims in general should not keep themselves too much concerned about non-Muslims abiding by Islamic laws and ethics because non-Muslims are not required to follow the Shari`ah (Islamic Law) and rules of conduct. Throughout Islamic history, non-Muslims lived in Muslim countries and they used to drink alcohol without being punished for doing that, even though the act itself is punishable when done by a Muslim, according to Islamic Law.Moreover, the relationship between the cabbie and the passenger is based on a deal to transport the passenger from one place to another regardless of what they carry, except for items that are to be avoided for safety measures (guns, knifes, drugs, etc.). Therefore, in normal circumstances the cabbie is not supposed to investigate what the passenger is carrying, because it is a matter of privacy for the passenger, which the cabbie has no right to interfere in, as it falls beyond the boundaries of the contract they have struck together.Having said that, I should add that for some committed, practicing Muslims, carrying items such as alcohol and the like is an issue that goes against what appeals to their religious conscience because not only is drinking alcohol forbidden in Islam, but any form of supporting the process such as serving, buying, selling, etc. is forbidden as well. Therefore, neither the company nor the people should take this as an offense or interpret it as an act of discrimination since it is a purely religious, ethical concern.What is compatible with legal traditions in North America, which were established upon the respect for everyone's beliefs and civil liberties, people should understand very well. The company should try to accommodate the Muslim cabbies' demands as much as possible. For example, if a Muslim cabbie is waiting in the line and he does not feel comfortable taking a fare, then the next driver in line should take over while the former should continue to wait in the queue rather than going to the end of the line, because that would be unfair.
இறைவன் கடமையாக்கி இருக்கின்ற மற்றொரு வழிபாடு நோன்பாகும். தொழுகையைப் போல இந்த வழிபாடும் ஆரம்பத்திலிருந்து எல்லாத் தூதர்களின் மார்க்கங்களிலும் கடமையாகவே இருந்து வந்திருக்கிறது. முதலில் தோன்றிய சமுதாயத்தவர்களும் நோன்பு பிடித்துக் கொண்டிருந்தார்கள். என்றாலும், நோன்பின் சட்டங்கள், அதன் எண்ணிக்கை, அது நீடிக்க வேண்டிய நேரம் ஆகியவற்றில் ஒரு மார்க்கத்தும் மற்றொரு மார்க்கத்துக்கும் இடையில் வேற்றுமை இருந்து வந்தது. இன்றும் கூட பெரும்பாலான மதங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில் நோன்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் தம் சார்பில் பலவற்றை இணைத்து அதன் வடிவத்தை கெடுத்திருந்தாலும் சரி! திருக்குர்ஆன் கூறுகிறது:
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
இதிலிருந்து நீங்கள் சிந்திக்கவேண்டும். எல்லாக் காலத்திலும் இந்த இறைவழிபாட்டைக் கடமையாக்குவதற்கு நோன்பில் என்னதான் இருக்கிறது?
நோன்பை தவிர்த்து மற்ற இறை வழிபாடுகள் எல்லாம் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிப்படையான செயல்களாகவே நிறைவேற்றப்படுகின்றன. உதாரனமாக தொழுகை, ஹஜ் போன்ற இறைவழிபாடுகள் பார்வைக்கு மறையாதவை. நீங்கள் நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அது மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது. நீங்கள் நிறைவேற்றாவிட்டாலும் தெரிந்து விடுகிறது.
ஆனால் நோன்பு நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் தெரிய முடியாது. ஒரு மனிதன் எல்லோருக்கும் எதிரில் 'ஸஹ்ரில்' சாப்பிட்டு நோன்பு பிடிக்கலாம். நோன்பு திறக்கும் நேரம்வரை அவன் வெளியில் தெரியும்படி சாப்பிடாமலும் குடிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஒளிந்து மறைந்து தண்ணீர் குடித்தால் அது இறைவனைத்தவிர வேறு யாருக்கும் தெரிய முடியாது. அவன் நோன்போடு இருக்கிறான் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவன் நோன்பாளி அல்லன்.
உறுதியான நம்பிக்கையின் அடையாளம்
நோன்புக்குறிய இந்தத் தனித்தன்மையை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் சிந்தனை செய்யுங்கள்; ஒரு மனிதன் உண்மையாகவே நோன்பு நோற்கிறான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதில்லை; குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்ட நிலையிலும் அவன் ஒரு துளி தண்ணீர் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண் பார்வை குன்றிப்போனாலும் அவன் ஒரு கவளம் உணவும் உண்ண நினைப்பதுமில்லை.
அந்த மனிதனுக்கு இறைவன் எல்லா மர்மங்களும் தெரிந்தவன் என்பதில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது! தன்னுடைய செயல்கள் முழு உலகத்துக்கும் மறைந்து விட்டாலும் இறைவனின் பார்வையிலிருந்து மறைய முடியாது என்று எவ்வளவு உறுதியாக அவன் நம்புகிறான்!
மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் ஏற்றுக் கொள்கிறான்; ஆனால், இறையச்சத்தால் தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்க வேண்டும்!
இந்த இடைக்காலத்தில் மறுமை குறித்து ஒரு வினாடி கூட அவன் மனதில் எவ்விதச் சந்தேகமும் தோன்றுவதில்லையென்றால், மறுமையில் கிடைக்கும் நற்கூலிகள், தண்டனைகள் பற்றி அவனுக்கு எவ்வளவு திடமான நம்பிக்கை இருக்க வேண்டும்! 'மறுமை வருமா வராதா? அதில் நற்கூலியும் தண்டனையும் உண்டா இல்லையா? என்று அவன் மனதில் சிறிதளவாகிலும் சந்தேகம் ஏற்பட்டு விட்டால், அவனால் தனது நோன்பை என்றைக்கும் நிறைவேற்றவே முடிந்திருக்காது.
சந்தேகம் ஏற்பட்ட பிறகு இறைக்கட்டளையைச் செயற்படுத்துவதற்கென்று எதையும் சாப்பிடக்கூடாது; எதையும் அருந்தக் கூடாது எனும் எண்ணத்தில் மனிதன் நிலையாக இருப்பது சாத்தியமான ஒன்று அல்ல.
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் முழுமையாக ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால்போல் முஸ்லிம்களின் இறை நம்பிக்கைக்கு தேர்வு வைக்கிறான் இறைவன். இந்த தேர்வில் மனிதன் எந்த அளவு வெற்றி பெற்றுக்கொண்டே போகிறானோ, அந்த அளவுதான் அவனுடைய இறை நம்பிக்கை வலிமை பெற்றுக்கொண்டே போகும். இது தேர்வுக்குத் தேர்வு போன்றது, பயிற்சிக்குக் பயிற்சி போன்றது.
யாரேனும் ஒருவரிடம் ஒரு பொருளை நீங்கள் அமானிதமாக ஒப்படைத்திருந்தால், அவருடைய நாணயத்தை பரிட்சை செய்து பார்க்கிறீர்கள். இந்த பரிட்சையில் அவர் முழுவெற்றி வெற்றியடைந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற பொருளுக்குத் துரோகம் செய்யவில்லை என்றால் அமானிதம் சுமையைத் தாங்குவதற்குறிய தகுதி இன்னும் அதிகமாக அவருக்கு வந்துவிடும். அவருடைய நாணயம் மேலும் வளர்ந்துகொண்டே போகும். இந்த பரிட்சையில் நீங்கள் தேர்ந்துவிட்டால், இறைவனுக்கு பயந்து மற்றப் பாவங்களிலிருந்தும் ஒதுங்கும் மனப்பக்குவம் உங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுவிடும்.
அனைத்து மர்மங்களையும் இறைவன் நன்கு அறிகின்றான் என நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இறைக்கட்டளையை மீறுவதிலிருந்து விலகி நிற்கிறீர்கள். யாரும் உங்களை பார்க்கது இருந்தாலும் சரியே! மேலும் வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மறுமை நாள் உங்கள் நினைவிற்கு வந்து விடுகிறது. அன்றைய நாளில் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகிவிடும்.
செய்யும் நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் யாதொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் கிடைக்கும் என்ற எதார்த்த உண்மையை நீங்கள் உணர்கிறீர்கள். எனவே இறையச்சம் உள்ளவர்களாக திகழ முழு முயற்சி மேற்கொள்கிறீர்கள்.
1. Who are amongst the people that must fast in the blessed month of Ramadan, and those that are not obliged to fast in this month?
Those who must fast: All mature and sane Muslims, male and female. Those who are exempted: The sick, the travelers, those too old to fast, women in child birth, women with periods, pregnant women whose heath is endangered, breast feeding women whose health is endangered.
2. What is said about performing supererogatory acts in the blessed month of Ramadan in comparison to obligatory acts performed at any other time than Ramadan?
A supererogatory ( Nafil) act in Ramadan merits the same reward as an obligatory act in any other month.
3. What facts about the month of Ramadan have been related by hadith in regards to what takes place related to heaven and hell?
The gates of heaven are opened and the gates of hell are shut.
4. This ayah from the Qur’an is in reference to what night in this blessed month of Ramadan, “.......which is better than a thousand months”.
Lailatul Qadr (The Night of Power) Surah al-Qadr, surah number 97
5. What did Sayyidina ‘Umar ibn al-Khattab Rady Allahu ‘Anhu say about the tarawih salah? How many rak’ah did he set the salah to be?
He said what a good bid’a (innovation) it is. 20 raka’ah.
6. What is one of the sunnahs when a Muslim, for a valid reason cannot keep fast?
Not to eat in the presence of a fasting person. Repay it by fasting the number of days missed after Ramadan or Give kaffara equal to the amount of one Sadaqa tul Fitr in charity to the poor for each day missed.
7. What connection does the Qur’an and the blessed month of Ramadan have that makes the month very important and sacred?
The Qur’an was revealed in Ramadan.
8. It is said that the odour of a fasting Muslim is more fragrant to Allah Sub’hanahu wa Ta’ala than what?
Musk
9. How is the month of Ramadan a significant part of the five pillars of Islam?
It is the fourth pillar of Islam Of the five pillars of Islam, the declaration of Shahadah, salah and Fasting can be done by all Muslims while Zakah can be given and Haj performed only by those with the means to do so. It teaches us to be more humble, pious, patient and charitable.
10. What are some of the lessons taught through Ramadan in regards to food and how we should eat and drink during Ramadan?
Be moderate in eating food, never lavish. Never waste food. Be grateful to Allah for providing you food and drink. Make sure your neighbour is not going hungry.
11. Hadrat Jibril ‘Alayhissalam used to bring revelation to the beloved Nabi Sallallahu ‘alaihi wa Sallam but in the month of Ramadan, he visited him for another specific purpose. What was that?
To recite to him the Qur’an
12. What are the duas for keeping and breaking the everyday fast in Ramadan. Write their meanings as well.
Du’a for keeping the fast (made the night before) Nawaytu sawma ghadin min shahri Ramadan
I intend to fast during the day in the month of Ramadan Du’a for breaking the fast
Allahumma laka sumtu wa bika amantu wa ‘alayka tawakkaltu wa ‘alaa Rizqika aftartu
O Allah! I fasted for Your sake and I believe in You and I put my total trust in You and I break my fast with the food provided by You.
13. List the days other than in Ramadan when Muslims fast.
a) Six days in Shawwal after ‘Eid ul Fitr. The 9th of Dhul Hijjah : Yaum ul ‘Arafah 9th and 10th of Muharram. On the 10th of Muharram Nabi Musa ‘Alayhissalam was saved from the army of Fir’awn d) 15th Sha’ban : Nisf Sha’ban e) The 13th, 14th and 15th of each Muslim (lunar) month, called Ayyam ul Beed (The White Days) f) On Mondays, as the beloved Prophet Sallallahu ‘alayhi wa sallam was born on Monday g) On Thursdays, which is also the sunnah of our beloved Prophet Sallallahu ‘alayhi wa sallam
14. List three important events in the history of our Nabi Sallallahu ‘alaihi wa Sallam that occured in the month of Ramadan?
The Qur’an was revealed The Battle of Badr The Victory (fat’h) of Makkah
15. In which year was fasting in Ramadan enjoined on the Muslims?
2 A.H. ; 623 C.E
16. It is said that the month of Ramadan is in three parts. List them and describe the special blessings of each part.
First 10 days: Brings Allah’s mercy 2nd 10 days : Brings Allah’s forgiveness 3rd 10 days : Brings emancipation from hell-fire
17. What is Sadaqa tul Fitr?
Charity given in Ramadan and before ‘Eid salah for each person in the family. The amount to be given per person is 2.45 kg of wheat or barley or the value of the barley in cash.
18. How is the month of Ramadan concluded and what is the significance of this day?
After Ramadan comes ‘Eid ul Fitr which is a day of rejoicing as Allah rewards Muslims for their fasting. There is salatul ‘Eid, takbeerat, visiting relatives, the sick and the graveyard to pray for the dead.
19. What are the names of the Islamic months before and after Ramadan.
Month before Ramadan : Sha’ban
Month after Ramadan : Shawwal
20. Zhikr is one of the best things you can do. What is zhikr?
Rememberance of Allah
21. Generally, at what age does fasting in Ramadan become compulsary?
When someone attains puberty, at the age of 13 or 14
22. If you recite one juz everyday, how many times can you complete the recitation of the Holy Qur’an in the month of Ramadan?
Once
23. In which month of the Islamic Calendar does Ramadan fall and what is it based on?
Ramadan falls in the ninth month of the Islamic Calendar. The Islamic calendar, like the solar calendar has twelve months. The Islamic calendar is based on the moon (Lunar), while the solar calendar is based on the sun (Solar).
The solar calendar months are made of 30 or 31 days except for February. The Lunar calendar months are made of 29 or 30 days. Ramadan is sometimes 29 days and sometimes 30 days. Ramadan is a very important month for the Muslims.
http://www.islamicvoice.com
இனிய நினைவூட்டல --------------------
இன்ஷா அல்லாஹ் இன்னும் மிக மிக அருகில் பாவங்கள் போக்கி அருள் தரும் குரானின் மாதம் ரமலான் நம்மை நோக்கி விரைந்து வந்துகொண்டுள்ளது.அதற்கான நற் பணிகளில் தயாராவோம்.மேலும் ஏழைகளுக்கான ஸஹர் தேவைகள்,இப்த்தார் எனும் நோன்பு திறத்தல்,(நோன்புக்கஞ்சி போன்ற)தேவைகள்,பித்ரா விநியோகம் போன்ற பணிகளில் சகோதர,சகோதரிகளை கலந்து இப்போதே தயாராகிவிட்டாள் இறைவன் அல்லாஹ் இட்ட பணியை செவ்வனே நிறைவேற்றிட சுலபமாகும். -------------------------------------------------------------- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ 2:183
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். 2:183
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)
நோன்பின் நோக்கம் யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் அவரிடம் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் 'நான் நோன்பாளி' என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ
நோன்பின் சிறப்பு ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் நூறு மடங்குவரை கூலி கொடுக்கப்படுகின்றது. 'நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம், அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறு மணத்தை விட சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ
சுவர்க்கத்தில் 'ரய்யான்' என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் (மட்டும்) அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். யார் அதில் நுழைகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ
காலம் முழுவதும் நோற்றாலும் ஈடாகாது அல்லாஹ் அனுமதித்த காரணங்களின்றி எவர் வேண்டுமென்றே ரமழானின் ஒரு நோன்பை விட்டாலும் அதற்குப் பகரமாக காலம் முழுதும் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது. ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜ்ஜா
நோன்பு நோற்க கடமைபட்டவர்கள், நோன்பிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பை) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை (அல்குர்ஆன் 2:185)
பயணம் மேற்கொண்டதும் அவர் நோன்பை விட்டுவிடும் சலுகையைப் பெறுகிறார்.
பழைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூபுஸ்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுடன் கப்பலில் ஏறினேன். அவர்கள் புறப்படலானார்கள். பிறகு காலை உணவைக் கொண்டு வரச் செய்து 'அருகில் வாரும்' என்றார்கள். அபோது நான் நீங்கள் ஊருக்குள்ளே தானே இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சுன்னத்தை (வழிமுறையை) நீர் புறக்கணிக்க போகிறீரா என்று திருப்பிக் கேட்டார்கள் என உபைத் பின் ஜப்ர் என்பார் அறிவிக்கிறார்கள். நூல்கள்:அஹமது, அபூதாவூத்
மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன் பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் "அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!" என்று கூறினர். (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம், திர்மிதீ)
"இதன் பிறகு நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் பிரயாணத்தில் நோன்பு நோற்றிருக்கிறோம்" என்று அபூஸயீத் அல் குத்ரீُ அறிவிக்கும் ஹதீஸ் நூல்கள்: முஸ்லிம், அஹமது, அபூதாவூத்
மக்கா வெற்றிக்கு பின்னர் மேற்கொண்ட பிரயாணத்தில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நோன்பு நோற்றதாக அபூஸயீத் அல் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ குறிப்பிடுவதால் பிரயாணத்தில் நோன்பு வைக்கத் தடையில்லை என்பதையும் பிரயாணத்திற்குரிய சலுகையே இது என்பதையும் அறியலாம்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா
கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் நோன்பிலிருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் சலுகையளித்தனர். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், நஸயீ, அஹமது, இப்னுமாஜ்ஜா
சலுகை என்பது ரமளானில் விட்டு விட்டு வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
நோயாளிகள், முதியவர்கள்
நோன்பு நோற்க இயலாத நோயாளிகளும் நோன்பை விட்டுவிட சலுகை வழங்கப்பட்டுள்ளர். முதியவர்களும் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளனர். நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் மீது ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற வசனம் பற்றி இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறும்போது, இது மாற்றப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியிழந்த முதிய கிழவரும், கிழவியும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர். நூல்: புகாரி
நோன்பின் நேரம்
சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹு நேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும்.
ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள், பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். (2:187)
ஸஹர் உணவு நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள், ஏனெனில் ஸஹர் உணவில் நிச்சயமாக பரகத் உள்ளது என்பது நபிமொழி. அறிவிப்பவர்:அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ
நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு பிறகு (சுப்ஹு) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறினார்கள். (ஸஹர் முடித்து சுப்ஹு வரை) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு (நேரம்) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, திர்மிதீ
(ஐம்பது வசனங்களை நிறுத்தி நிதானமாக ஓத பத்து நிமிடங்களுக்கு மேல் செல்லாது.)
ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்
மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் மக்களுக்கு இது பற்றி அறிவிப்புச் செய்து விழிக்கச் செய்வது நபி வழியாகும்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் பிலால் رَضِيَ اللَّهُ عَنْهُ, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தும் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆகிய இரண்டு முஅத்தின்களை நியமனம் செய்திருந்தார்கள். பிலால் அவர்கள் ஸஹரின் கடைசி நேரத்தில் பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கானது அல்ல. மக்கள் ஸஹர் செய்வதற்கான அறிவிப்பாகும். அதன் பின்னர் பஜ்ரு நேரம் வந்ததும் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் மற்றொரு பாங்கு சொல்வார். இது பஜ்ரு தொழுகைக்கான அழைப்பாகும்.
பிலாலின் பாங்கு உங்களை ஸஹர் செய்வதிலிருந்து தடுக்காது. அவர் நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே இரவில் பாங்கு சொல்வார். நபிமொழி அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
பிலால் இரவில் பாங்கு சொல்வார். இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்வது வரை நீங்கள் உண்ணுங்கள்! பருகுங்கள்!. ஆயிஷா வழியாகவும், இப்னு உமர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
பாங்கு மூலம் மக்களை விழித்தெழச் செய்யும் இந்த சுன்னத் இன்று நடமுறையில் இல்லை. முஸ்லிம்கள் இந்த சுன்னத்தை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும்.
விடி ஸஹர்
விடி ஷஹர் என்ற பெயரில் சிலர் உறங்கிவிட்டு சுப்ஹு நேரம் வந்ததும் விழித்ததும் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு நோன்பு நோற்கிறார்கள். இது நோன்பாகாது. இந்தப் பழக்கம் தவறானதாகும். ஏனெனில் பஜ்ரு நேரம் வந்து விட்டால் எதையுமே சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் கட்டளை உள்ளது. எனவே தாமதமாக விழிப்பவர்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் நோன்பைத் தொடர வேண்டும்.
பசி முன்னிற்கும்போது
உங்களில் ஒருவர் உணவில் இருக்கும்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டாலும் உணவுத் தேவையை முடிக்கும் வரை தொழுகைக்கு விரையவேண்டாம். என்பது நபிமொழி அறிவிப்பவர்: இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி
மலஜலத்தை அடக்கிய நிலையிலும் உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்
மறதியாக உண்பதும், பருகுவதும்
ஒருவர் நோன்பாளியாக இருக்கும்போது மறந்து சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான். நபிமொழி அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா
வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்
வேண்டுமென்றே நோன்பை முறிப்பவர்கள் அந்த நோன்புக்கு ஈடாக ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும். இயலாதவர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும். அதற்கும் இயலாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
ஒரு மனிதர் صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்" என்றார். என்ன அழிந்து விட்டீர்? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம் கேட்டார்கள். "ரமலானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்" என்று அவர் கூறினார். ஒரு அடிமையை விடுதலை செய்ய இயலுமா? என்று அவரிடம் நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அவர் 'இயலாது' என்றார். அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர் இயலாது என்றார். அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கும் இயலாது என்றார்.
பின்னர் அவர் (அங்கேயே) அமர்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்களிடம் பேரிச்சம் பழம் நிரம்பிய சாக்கு ஒன்று கொண்டு வரப்பட்டது. நபி صلى الله عليه وسلم அவர்கள் அதை அவரிடம் வழங்கி 'இதை தர்மம் செய்வீராக' என்றனர். அதற்கவர் "எங்களைவிட ஏழைகளுக்கா? இந்த மதீனாவுக்குள் எங்களைவிட ஏழைகள் எவருமில்லையே" என்றார். அதை கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரித்தார்கள். நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக எனவும் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜ்ஜா
குளிப்பு கடமையானவர் நோன்பு நோற்பது
நபி صلى الله عليه وسلم அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டு குளிக்காமலே நோன்பு நோற்பார்கள். சுபுஹ் வேளை வந்ததும் தொழுகைக்காக குளிப்பார்கள்; என்று கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன.
நபி صلى الله عليه وسلم அவர்கள் உடலுறவின் மூலம் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹூ நேரத்தை அடைவார்கள். ரமழானில் நோன்பு நோற்பார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஸா رَضِيَ اللَّهُ عَنْهُ, உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நோன்பாளி குளிக்கலாம், பல் துலக்கலாம்
நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
நபி صلى الله عليه وسلم அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னால் எண்ணிச் சொல்ல முடியாத அளவு பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்: அமீர் பின் ரபிஆ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ
இரத்தம் குத்தி எடுத்தல்
ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரைக் கடந்து சென்ற நபி صلى الله عليه وسلم அவர்கள் இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர் என்றார்கள். பிறகு நோன்பாளி இரத்தம் கொடுப்பதை அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: தாரகுத்னீ
நபி صلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் நோன்பாளி இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களா? என்று அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் "பலவீனம் ஏற்படும் என்பதனாலேயே அதனை வெறுத்தோம்" என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: ஸாபித் அல் புன்னாளி நூல்கள்: புகாரி
மருத்துவ போன்ற காரனங்களுக்காக நோன்பாளி இரத்தம் கொடுத்தால் நோன்பு முறியாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நோன்பு துறத்தல்
நோன்பு துறத்தலை (தாமதமின்றி) விரைந்து செய்யும்வரை மக்கள் நன்மையைச் செய்பவர்களாகிறார்கள் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
உங்களில் ஒருவர் நோன்பு துறக்கும்போது பேரித்தம் பழத்தின் மூலம் நோன்பு துறக்கவும்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கவும்! ஏனெனில் தண்ணீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னத் அஹ்மத்.
670 ''ஓரிரு நாட்கள் நோன்புடன் ரமளானை எதிர் கொள்ளாதீர்கள். எவரேனும் வேறு நோன்பு நோற்பவராக இருப்பின் அவர் நோற்றுக் கொள்ளட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
671 ''சந்தேகத்திற்குரிய நாளில் எவர் நோன்பு நோற்றாரோ, அவர், அபுல் காஸிமுக்கு (எனக்கு) மாறு செய்தார்'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என, அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவிக்கிறார்.
இது புகாரியில் 'முஅல்லக்' எனும் தரத்திலும், மவ்ஸூல் எனும் தரத்திலும், இப்னு குஸைமா, அஹ்மத், அபீதாசீத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸாயீ ஆகிய நூல்களில் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
672 ''பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். இன்னும் பிறையைப் பார்த்து நோன்பை முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது மேகம் சூழ்ந்திருந்தால் அதற்காக (நாட்களைக்) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் ''உங்களுக்கு மேகமூட்டதால் சந்தேகம் ஏற்படுமாயின் அதற்காக முப்பது (நாட்களைக்) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று முஸ்லிமிலும், ''முப்பது நாட்களை பூர்த்தியாக்கிக் கொள்ளுங்கள்'' என்று புகாரியிலும் உள்ளது.
673 புகாரியுடைய மற்றோர் அறிவிப்பில், அபூஹுரைரா(ரலி) வாயிலாக, ''ஷஅபானுடைய முப்பது நாட்களைக் பூர்த்தியாக்கிக் கொள்ளுங்கள்'' என்று உள்ளது.
674 மக்கள் பிறையைப் பார்த்தார்கள். நபி அவர்களிடம் நானும் பார்த்தாகச் செய்தி கொடுத்தேன். (அதனால்) நபி அவர்கள் நோன்பு நோற்றார்கள். மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத் இது ஹாம்கி மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 675 நபி அவர்களிடம் ஒரு நாட்டுப் புறத்தார் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பிறையைப் பார்த்து விட்டேன்'' என்று கூறினார். அதற்கு, ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என, நீ சாட்சி கூறுகிறாயா?'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இது இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 676 ''ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் எவர் நோன்பிற்கான நிய்யத் (எண்ணம்) கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என ஹஃப்ஸர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.திர்மிதீ மற்றும் நஸயீயில் இது மவ்கூஃப் எனும் தரத்தைப் பெற்றுள்ளது. இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் மர்ஃபூஃ ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ''இரவில் எவர் (நோன்பிற்கான) நிய்யத் செய்யவில்லையோ, அவருக்கு நோன்பு இல்லை' எனும் வாசகம் தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது.
677 ஒருநாள் நபி அவர்கள் என் வீட்டில் நுழைந்து ''(உண்பதற்கு) ஏதாவது உள்ளதா?'' என்று கேட்டார்கள். நாங்கள் ''இல்லை'' என்றோம். அப்போது அவர்கள், ''நான் நோன்பாளியாக உள்ளேன்'' என்று கூறினார்கள். பின்னர் மறுநாள் நபி அவர்கள் வந்தார்கள். ''அன்பளிப்பாக மாவு கொஞ்சம் வந்துள்ளது'' என்று நான் கூறினேன். ''அதைக் கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள். பின்னர் அதை உண்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் 678 ''நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சவுத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் 679 ''ஆரம்பநேரத்தில், (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ 680 ''ஸஹர் செய்யுங்கள் (சாப்பிடுங்கள்) ஏனெனில், அதில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் 681 ''உங்களில் எவரேனும் நோன்பைத் துறந்தால், அவர் பேரிச்சம்பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். அது அவருக்குக் கிடைக்கவில்லை எனில், தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானது'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என சுலைமான் இப்னு ஆமிர் அள்ளப்பிய்யி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் இது ஸஹீஹ் என்னும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 682 அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை செய்தார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவர், ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டதற்கு, ''உங்களில் யார் என்னைப் போன்றுள்ளார்? என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான். நீர் புகட்டுகின்றான்'' என்று சொன்னார்கள். தொடர் நோன்பைக் கைவிட அவர்கள் மறுத்த போது அவர்களுடன் சேர்ந்து ஒரு நாள் தொடர் நோன்பு நோற்றார்கள். மறுநாளும் நோற்றார்கள். பின்னர் பிறையைக் கண்டார்கள். பின்னர் பிறையைக் கண்டார்கள். அப்போது நபி அவர்கள், ''பிறை தெரியத் தாமதமாம் இருந்தால் நான் இன்னும் அதிகமாக உங்களை நோன்பு நோற்கச் செய்திருப்பேன்'' என்று அவர்கள் தொடர் நோன்பை கைவிட மறுத்ததைக் கண்டிப்பது போல் கூறினார்கள். புகாரி, முஸ்லிம் 683 ''எவர் பொய் சொல்வதையும், அதன்படி செயல்படுவதையும், செயல்படுவதையும், முட்டாள் தனத்தையும் விட்டுவிடவில்லையோ அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவது அல்லாஹ்விற்குத் தேவை இல்லை'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, அபூ தாவூத் 684 நபி அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் 685 நபி அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள். இன்னும் நபி அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள் என்று இப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். புகாரி 686 நபி அவர்கள் பகீஃ எனும் இடத்தில் ரமளான் மாதத்தில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் வந்து ''இரத்தம் குத்தி எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் நோன்பை முறித்துக் கொண்டார்'' என்று கூறினார்கள் என, ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாசீத், நஸாயீ, மற்றும் இப்னுமாஜா
அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. 687 ஜஃபர் இப்னு அபீதாலிப் அவர்கள். நோன்பு நோற்ற நிலையில் இரத்தம் குத்தி எடுக்கும் போது, நபி அவர்கள் அவரைக் கடந்து செல்கையில், ''இருவரும் நோன்பை முறித்துக் கொண்டனர்'' என்று கூறினார்கள். (அப்போது இரத்தம் குத்தி எடுப்பது தடுக்கப்பட்டிருந்தது). அப்போது தான் நான் நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வது, விரும்பத் தகாததாக ஆக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். பின்னர் நபி அவர்கள் நோன்பாளிகளுக்கு இரத்தம் குத்தி எடுத்துக் கொள்ள சலுகை அளித்து விட்டார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் அனஸ்(ரலி) அவர்கள், இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள் என்று அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். தாரகுத்னி
இது பலமான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸாகும்.
688 நபி அவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையில் சுர்மா போட்டுக் கொண்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எந்த ஒரு ஹதீஸும் ஸஹீஹ் எனும் தரத்தில் இல்லையென திர்மிதீயில் உள்ளது. 689 எவர் நோன்பிருக்கும் நிலையில் மறதியாக உண்ணுகிறாரோ, பருகுகிறாரோ அவர் தம்முடைய நோன்பைப் பூர்த்தியாக்கிக் கொள்ளட்டும். (நோன்பை முறித்து விட வேண்டாம்). ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணச் செய்தான்டி பருகச் செய்தான் என நபி கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் 690 ''எவர் ரமளான் மாதத்தில் மறதியாக நோன்பை முறித்து விட்டாரோ, அவர் மீது களாவும் இல்லைடி பாpகாரமும் இல்லை'' என்று ஹாம்மில் இடம் பெற்றுள்ளது. மேலும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 691 எவருக்கு (நோன்பு நோற்ற நிலையில்) அவரையும் மீறி வாந்தி வந்ததோ அவர் மீது (நோன்பு)களா இல்லை. இன்னும் எவர் (நோன்பு நோற்ற நிலையில் வேண்டுமென்றே வாந்தி எடுத்து விட்டாரோ, அவர் மீது (நோன்பு)களாவாகும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
அஹ்மதில் இது 'மஃலூல்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாரகுத்னீயில் 'பலமானது' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 692 நபி அவர்கள் மக்கா வெற்றி கொண்ட ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கி வெளியேறினார்கள். அப்போது 'குரா உல் கமீம்' எனும் இடத்தை அடையும் வரை நோன்பு நோற்றார்கள். மக்களும் நோன்பு நோற்றார்கள். பின்னர் நபி அவர்கள் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதை உயர்த்தினார்கள். மக்களனை வரும் அதைப் பார்த்தனர். நபி அவர்கள் அதனைக் குடித்து விட்டார்கள். அதற்குப் பின்னரும் சிலர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் என்ற செய்தி அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு ''அவர்கள் பாவிகள்! அவர்கள் பாவிகள்!'' என நபி அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்.
693 (அப்போது) நிச்சயமாக அந்த மக்களுக்கு நோன்பு நோற்பது கஷ்டமாக இருக்கிறது. அவர்கள், (நபியாகிய) தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நபி அவர்களிடம் கூறப்பட்டது. உடனே, நபி அவர்கள் அஸர் தொழுகைக்குப் பின் அதைக் குடித்தார்கள் என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
694 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பயணத்திலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவனாக இருக்கிறேன். அதனால் என் மீது குற்றமாகுமா?'' என்று நான் கேட்டதற்கு, ''இது அல்லாஹ்விடம் இருந்து வந்துள்ள சலுகையாகும். எவர் அதை எடுத்துக் கொண்டாரோ அவர் சிறப்படைந்தார். இன்னும் எவர் நோன்பு நோற்க விரும்பினாரோ அவர் மீது குற்றமில்லை'' என்று நபி அவர்கள் கூறியதாக ஹம்ஸா இப்னு அம்ர் அல் அஸ்லமீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஹம்ஸா இப்னு அம்ர்رَضِيَ اللَّهُ عَنْهُ கேட்டதாக ஆயிஷா(ரலி) வாயிலாக புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. 695 ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக, ஓர் ஏழைக்கு ஸஹர் மற்றும் இப்தார், உணவு உண்ணச் செய்ய வேண்டும். களா செய்ய வேண்டியது இல்லை என்று வயோதிகர்களுக்கு நபி அவர்களால் சலுகை அளிக்கப்ட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னி, ஹாகிம்
இரண்டிலும் இது ''ஸஹீஹ்'' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
696 ஒரு மனிதர் நபி அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்'' என்று கூறியதற்கு, ''எது உன்னை அழித்தது?'' என்று நபி அவர்கள் கேட்டார்கள். ''ரமளானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்'' என்று கூறினார். ''உன்னால் ஒர் அடிமையை விடுதலை செய்ய இயலுமா?'' என்று நபி அவர்கள் கேட்டார்கள். அவர், ''இயலாது'' என்றார். ''அப்படியானால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா?'' என்று கேட்டார்கள். அதற்கும் ''இயலாது'' என்றார்.
பின்னர் (அங்கேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபி அவர்களிடம் ஒரு தட்டு கொடுக்கப்பட்டது. அதில் பேரிச்சம் பழங்கள் இருந்தன. (அதை அவரிடம் வழங்கி) ''இதை தர்மம் செய்வீராக!'' என்றனர். அதற்கவர், ''எங்களை விட ஏழைகளுக்கா? இந்த மதீனாவிற்குள் எங்களை விட ஏழைகள் எவரும் இல்லையே?'' என்றார். அதைக் கேட்ட நபி அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள். ''நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக!'' என்றும் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, மற்றும் இப்னு மாஜா.
இங்கு முஸ்லிமின் வாசம் இடம் பெற்றுள்ளது.
697 நபி அவர்கள் உடலுறவு கொண்டு, குளிப்பு கடமையான நிலையில் காலை நேரத்தை அடைந்து பின்னர் குளிப்பார்கள். மேலும் நோன்பு நோற்பார்கள் என்று ஆயிஷா மற்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார் புகாரி, முஸ்லிம்
'அவர்கள் களாச் செய்யமாட்டார்கள்' எனும் வாசகம் உம்மு ஸலமா(ரலி) வாயிலாக முஸ்லிமில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 698 ''தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் எவர் இறந்து விடுகிறாரோ அவருடைய நோன்பை அவருடைய பொறுப்பாளர் நோற்கட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்.
புலுகுல் மராம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.......
பாவங்கள் போக்கி,நம்மை பரிசுத்தமாக்கி வைக்கும் ரமலான் நம்மை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது.எனவே,நோன்பு குறித்த குரான் ஹதீஸ் இங்கு பரிமாரிக்கொண்டால்,நான் உட்பட அனைவருக்கும் பயனாகுமே எனும் நோக்கில்,இன்ஷா அல்லாஹ் இனி நோன்பின் மாண்புகள் பற்றி அறியலாம்.
அரட்டை அரங்கில் நிறைய்ய பேர் அக்கப்போர் பற்றி அலசும் அதே நேரம்,ஒரே ஒரு சகோ ஜகாங்கீர் அவர்கள் மட்டும் கடந்த இரு மாதங்கள் மேலாக நோன்பு குறித்து எழுதி,ஆர்வமூட்டினார்.அவருக்கு இத்தருணத்தில் நன்றி.
ரமழானில் அல்லாஹ்வுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்
நோன்பாளி செய்யக் கூடாதவை எவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும், விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி
நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி" என்று கூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்
நோன்பின் தற்காலிக சலுகைகள் நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)
எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்
நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூது, திர்மிதீ
நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது
நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும், ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும் செய்திருக்கின்றான். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்
சஹர் செய்தல் நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்
ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீ
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்
நோன்பு திறப்பது அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீ, அபூதாவூது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.......
இன்றைய இளவல்கள் நாளைய தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள். இன்றைய இளைஞர்களின் அறிவுத் தேடல்கள் எதனை நோக்கிச் செல்கின்றன, இன்னும் அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய கல்வியின் பரிமாணங்களை அவர்கள் எந்த அளவு உள்வாங்கிச் செயல்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, நாளைய உலகத்தை அவர்கள் எவ்வாறு அமைப்பார்கள் மற்றும் அதன் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூற முடியும்.
இன்றைய கல்விக் கொள்கையில் மேற்கத்தியப் போக்குகள் மிகுந்து விட்டதன் காரணமாக, இளம் குறுத்துக்களில் இருந்து பல்கலைக் கழகங்கள் வரைக்கும் இந்த மேற்கத்திய போக்கினால் தீர்மானிக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் தான், அவர்களின் மூளைகளில் ஏற்றி வைக்கப்படுகின்றன. இதே போக்கிலே முஸ்லிம்களும் காலம் காலமாக இந்த மேற்கத்திய சிந்தனை வழிக் கல்வியினூடாகப் பயணம் செய்ததன் விளைவு, அவர்கள் தங்களை அறியாமலேயே தங்களது சுய அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடிய பிற்போக்குத் தனத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது தான் பரிதாபமான செய்தியாகும்.
காரணம் என்னவெனில், இந்த உலக வாழ்வின் தேவைகளுக்காக அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அவர்களது மறுமையையும், இன்னும் உயிரினும் மேலான இறைநம்பிக்கையையும் போக்கி விடக் கூடிய, தலைமுறை தலைமுறையாக கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாம் அவர்களிடமிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருவதை அவர்கள் உற்று நோக்கத் தவறியதன் விளைவை இன்று அனுபவித்து வருகின்றார்கள்.
இழந்த அந்த பாதையை மீளக் கட்டியமைப்பதற்கு இன்றைய சமூகம் முயற்சிக்கும் பொழுது, பிற்போக்குவாதத்தை மீளக் கட்டியமைக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு, அவ்வாறு ஈடுபடுபவர்கள் உள்ளாவதோடு, ஊடகங்களின் செல்வாக்கின் காரணமாக அவர்கள் தங்களது முயற்சியின் நிராசையடைந்து விடக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விடுகின்றன. இஸ்லாத்தினையும் இஸ்லாமியக் கல்விக் கொள்கையையும் மீளக் கட்டியமைக்க முயற்சிக்கும் அனைவருக்கும் இக்கட்டுரை ஒரு உற்சாக டானிக்காக அமைந்தால், அதுவே இக்கட்டுரையின் நோக்கம் நிறைவேறியதாகவும் அமையும். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!
கல்வியில் இஸ்லாமியப் பாரம்பரியம் எவ்வாறிருந்ததெனில்...!
கி.பி.1048 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...
தொடர்ந்து படிக்க அதிரை போஸ்ட் வலைதளத்திற்கு செல்லவும்...
தொழுகை,நமக்கு அல்லாஹ் தந்த அருட்கொடை.அதை பேணி நடப்பதில்தான் வெற்றி இருக்கிறது.தொழுவதன் மூலம் இறைவனின் பரிசும ,தொழுகை இல்லாதவனுக்கு நரகமும் கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே.அதே போன்று இன்ன தொழுகை விட்டால்,இன்ன தண்டனை இருக்கிறது என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
இது பஜ்ர் தொழுகை விடுவதால் ஏற்படும் தண்டனை குறித்த விளக்கப் படம்.எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் தொழுகையாளிகளாக ஆக்கி,நம்மை பொருந்திக்கொள்வானாக!
http://www.youtube.com/watch?v=q-mM4EGc9jM
இன்று பொதுவாக பல பேரிடம் தற்பெருமை,கர்வம்,அகம்பாவம் போன்ற செயல்கள் காணப்படுகின்றன.இது எந்தளவுக்கு மிகவும் கவனிக்கப்படவேண்டியவை,பேணப் படவேண்டியவை,சீர்தூக்கிப்பார்த்து சீர்திருந்த வேண்டியவை என கீழ் காணும் ஹதீஸ் மூலம் நாம் கற்று,திருந்தவேண்டும்,இன்ஷா அல்லாஹ்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்
அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)
அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)
நான் அண்ணல் நபி அவர்கள் கூறக் கேட்டேன்: “இறை நம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு “அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் ”என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)
அறிவிப்பாளர்: இப்னு உமர்
அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். ( கருணைப் பார்வை பார்க்கமாட்டான் )”
அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: “நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா? ” அதற்கு அண்ணலார், “இல்லை, நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். என்று பதிலளித்தார்கள். (புகாரி)
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்
அண்ணல் நபி அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)
விளம்பரம் இன்றி தொழில் மட்டுமல்ல,எதுவும் மக்களை சென்றடைவதில்லை.பளிச்சென்ற பற்களை காட்டித்தான் டூத் பேஸ்ட் விற்கமுடியும்!இது மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டுமல்ல-நாளிதழ்கள்,மாத இதழ்கள் போன்ற பிரிண்ட் மீடியாக்களுக்கும் பொருந்தும்.(பெஸ்ட் கண்ணா பெஸ்ட்,புதுசு கண்ணா புதுசு,ஹிஹி,இது குங்குமம் விளம்பரங்கோ)இது அதிரை எக்ச்பிரசுக்கும் பொருந்தும்.(அட்லீஸ்ட் வாய் வழி விளம்பரமாவது).ஆக,விளம்பரம் அவசியம்.(அடடே இது விளம்பர உலகமப்பா).
இன்று விளம்பரம் தொலைக் காட்சி,இன்டர்நெட்,பத்திரிக்கை,ரேடியோ,படங்கள்,கட் அவுட்கள்,பிட் நோடிஸ்கள்,சுவர்,மற்றும் டிஜிடல் என விளம்பரம் எல்லா வகையிலும் வியாபித்துள்ளன.சரி,சரி,அதுக்கு என்ன ? என கேள்விகள் எழலாம்.இதன் விடை,இந்த விளம்பர யுகத்தை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது?இஸ்லாத்தின் அழகிய நெறியை பாரெல்லாம் பரப்ப,இவ்விளம்பரத்தை நாமும் ஏன் பயன்படுத்தக்கூடாது?
பொதுவாக,தொலைக் காட்சி,இன்டர்நெட்,ரேடியோ,பத்திரிகைகள்,என இஸ்லாம் குறித்த விவரங்கள் உலா வருவது நாம் அறிந்ததே.நான் சொல்ல விழைவது,"சுவர் விளம்பரங்கள்" பற்றியதே.
உதாரணமாக நம் ஊரை எடுத்துக்கொண்டால்,ஒரு தெருவில் பல சீர்கள்(லைன்கள்) இருக்கும்.ஆக,அந்த லைனில் உள்ள ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து,வீட்டாரின் முன் அனுமதி பெற்று,நல்ல அழகு கையெழுத்தில்,பெரிய எழுத்துக்களில் ஆயில் பெயிண்டிங் கொண்டு திருக் குரான்,ஹதீஸ் வசனங்களை எழுதி வைத்தால்,அப்பக்கம் போவோர் வருவோர் கண்களில் பட்டு குரான்,ஹதீஸ் வசனங்கள் மனனம் ஆகும்,மேலும் அல்லாஹ்வின் அச்சமும்,உதாரணமாக,விபச்சாரம்,குடி,வட்டி,ஷிர்க் வைத்தல்,தர்கா வழிபாடு போன்ற செயல்களால் அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டு,நரகம் கிடைக்கும் என்பதையும்,தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ்,போன்ற கடமைகளை செய்வதன் மூலம் கிடைக்கும் கூலியும் அதன் பால் வரும் சொர்க்கம் போன்ற கருத்துக்களையும் மக்களிடம் விளம்பரப் படுத்தினால் இன்ஷா அல்லாஹ்,இதன் மூலம் பயன் கிடைக்கும்.
நம் ஊரின் விசாலமான தெருக்களும்,அந்த தெருக்களினூடே உள்ள லைன்களையும் கணக்கிட்டால் நிறைய குரான் ஹதீஸ் எழுத முடியும்.அப்ப என்ன சுவர் விளம்பரம் எழுத ரெடிதானே!
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்