இஸ்லாமியர்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரம்
என்று கூறி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டு தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டி விட்டு தமிழகத்தை இரத்தகாடாக்க சதி செய்த தினமலர் பத்திரி்கையின் மீது பல்வேறு பட்ட வழக்குகளை தமிழகமெங்கும் மனித நீதி பாசறை என்ற அமைப்பு தொடுத்தது. இந்த வழக்குகளில் தங்களை கைது செய்யாமலிருக்க தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வெங்கடாபதி (வயது 78) ஆர். ராகவன் (வயது 76) சததியமூர்த்தி (வயது 73) ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு செய்திருந்தனர். கடந்த 5.09.2008 அன்று விசாரனைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறை அமைப்பினர் குறுக்கீடு செய்து வாதாடலாம் என்ற உத்தரவுடன் 10.09.2008 க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது!
மீண்டும் 10ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கும் பின்னர் 15ம் தேதிக்கும் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது 15ம் தேதி விசாரனைக்கு வந்த இவ்வழக்கில் மனித நீதிப் பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கர சுப்பு அவர்கள் வாதாடினார்கள். தினமலர் பத்திரிகை இந்த புனித ரமழான் மாதத்தில் இது போன்ற பிரச்சினைக்குறிய கேலிச்சித்திரங்களை வெளியிட்டு இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்தி மதன கலவரத்தை தூண்டக்குடிய நடவடிக்கை என்றும் ஆகவே இவ்வழக்கில் தெர்ர்புடைய தினமலர் நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிட் வேண்டும் என்றும் அவர்களுக்கு கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் வழங்க கூடாதென்றும் வாதிட்டார்.
தினமலர் சார்பாக வாதாடிய அதன் வழக்கறிஞர், தினமலர் இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லையென்றும் இதன் பததிரிகைகளில் ரமழான் மாதத்தில் அதன் சிறப்புக்களை பற்றிய செய்திகளை தினமும் வெளியிடுவதாகவும், இன்னும் லைலத்துல் கத்ரு பற்றிய செய்திகளையும் வெளியிட்டு வருவதாகவும் இன்னும் இந்த கேலிச்சித்திர விசயமானது தங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டு பிரசுரமாகிவி்ட்டது என்றும் அதற்காக தங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வருத்தம் தெறிவித்து செய்தி வெளியிட்டதாகவும் வாதிட்டார்.
இடையில் குறுக்கிட்ட மறியாதைக்குறிய நீதிபதி ரகுபதி அவர்கள் தினமலரின் வழக்கறிஞரை பார்த்து " நீங்கள் இது போல் வாதிடாதீர்கள்...உங்கள் விளக்கம் பொறுப்பற்றதாக உள்ளது" என்று கடிந்து கொண்டார்.
இடையில் குறுக்கிட்ம மனித நீதிப்பாசறையின் வழக்கறிஞர் திரு. சங்கரசுப்பு அவர்கள் தினமலரின் வழக்கறிஞர் கூறுவது போல் இல்லை தினமலர் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புன்படுத்துவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளது என்றும். ஒருதலைப்பட்சமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு முஸ்லிம்களை குற்றவாளிகளாகவும், தீவிரவாதிகள் என்றும் சித்தரித்து தொடாந்து செய்திகளை வெளியிட்டு வருவதை தனது வாடிக்கையான செயல்களில் ஒன்றாகவே கொண்டுள்ளது என்றும் வாதிட்டார்.
இன்னும் தினமலரை போன்றே இந்த கேலிச்சித்திரத்தை டென்மார்க்க பத்திரிகை பிரசுரித்த காரனத்தால் எழுந்த மேதல்களில் 150 க்கும் அதிகமான உயிர்கள் பலியானதையும், தொடர்ந்து தினமலர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தறித்து அவதூறு பரப்பி நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சித்து வருவதையும் இதற்காக மனித நீதிப்பாசறை பதிவு செய்துள்ள தினமலருக்கெதிரான பல்வேறு வழக்குகளையும் சுட்டிக்காட்டி தினமலரின் நிர்வாகிகளுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அவர்கள் தினமலரின் நிர்வாகிகள் தங்களை கைது செய்யாமலிருக்க பதிவு செய்திருந்த முன்ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்து அவர்களுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என்று கூறி உத்தரவிட்டார்.
அல்ஹம்துலில்லாஹ் தினமலருக்கெதிராக நமது சமுதாயத்தின் பிரதிநிதிகளாக மனித நீதிப் பாசறையினர் நடத்திய சட்ட போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இன்சா அல்லாஹ் இத்துடன் நின்றுவிடாது நமது அமைப்புகள் அனைத்தும் விடாது ஒருங்கினைந்து போராட்டங்களை நடத்தி தினமலரின் நிர்வாகிகளை அரசு கைது செய்யும் வரை போராடி அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தர வேண்டும்.
courtesy http://adiraipost.blogspot.com/
உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது: -இப்னு மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் என்னுடைய உடைகளும் என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா? என்று கேட்டார். அதற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். (ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி)
ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனபதியில் நுழையாதவர்கள்: -அல்லாஹ் கூறுகிறான்: -
‘எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா. மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்’ (அல்குர்ஆன்: 7:40)
மிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல!அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு. (அல்-குர்ஆன் 28:83)
அகப்பெருமைக்காரர், ஆணவம் கொண்டோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்: -‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)
அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்: -ஹாரிஸா இப்னு வஹப் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)
தற்பெருமை கொள்பவனுக்கு உவமானம்!அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)
தற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்:-நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)
ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்பவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான்: -நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
”எவன் தனது ஆடையைப் பூமியில் பெருமையுடன் இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் பார்க்க மாட்டான்.” (ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி)
பெருமையடிக்கும் ஏழையுடன் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்: -நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
பெருமை அல்லாஹ்வுக்கே உரியது: -”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்” என அல்லாஹ் கூறியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)
---------------------