1) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
2) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் ஆயுளின் எட்டு நிமிடங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
3) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
4) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்கள் இதயத்தை எரித்துக்கரியாக்கி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
5) நீங்கள் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் உங்களின் பொருளாதார வீழ்ச்சிக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் கொள்ளி என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
6) நீங்கள் பொது இடங்களில் பிடிக்கும் புகையின் நெடி ஆறுமணி நேரம் அந்த இடத்தை விட்டு அகலாமல் அப்பாவி மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
7) நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பார்வையில் பிடிக்கும் ஒவ்வொரு சிகரட்டும், பீடியும் அந்த இழம்பிஞ்சுகளுக்கு ஆரம்ப பாடமாக அமைகிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
8) நீங்கள் புகைப்பிடிப்பதை உங்கள் மனைவியர்கள் கூட விரும்பாமல் மனம் குமுறுவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
9) நீங்கள் புகைப்பிடிக்கும்போது உங்கள் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட உங்களை வேண்டா வெருப்போடு பார்ப்பதை பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா?
10) நீங்கள் புகைப்பிடித்து விட்டு வீசி எறியும் சிகரட் துண்டினால் எத்தனை குடிசைகளும், கிராமங்களும் எரிந்து சாம்பலாகியுள்ளது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
11) நீங்கள் புகைத்துக்கொண்டே உங்கள் செல்வக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழும் போது அந்த புகையின் நெடியால் உங்கள் பிஞ்சு மழலைகள் நஞ்சை உட்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?12) நீங்கள் புகைப்பதால் உங்களை நீங்களே அழித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
13) புகைப்பிடித்து பாதிப்புக்கு உள்ளாகி ஆண்டுதோறும் லட்சக்கணக்காண மக்கள் மரணத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?14) நீங்கள் புகைக்கும் புகையிலுள்ள நச்சுப்பொருள்கள் உங்கள் இரத்தத்தோடு கலந்து இரத்த நாளங்களை அடைக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
15) இளமையில் புகைத்து, புகைத்து தள்ளிவிட்டு முதுமையில் குரைத்து, குரைத்து அவஸ்தை படுபவர்களை பார்த்து நீங்கள் சிந்தித்தது உண்டா?
16) புகைப்பதை நிறுத்த முடியவில்லையே என்று நொண்டிக்காரணங்களை கூறுபவர்களால் இந்த உலகத்தில் வேற என்னதான் சாதிக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
17) புகைப்பிடிப்பது ஆபத்து என்று விளம்பரம் செய்துகொண்டே வளர்ந்து கொண்டிருக்கும் சிகரட் உற்பத்தியாளர்களையும், அதை புகைத்து, புகைத்து வீழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் எதிர்காலத்தை பற்றியும் நீங்கள் சிந்தித்தது உண்டா?
18) புகைப்பிடிப்பது நாகரீகம் என்ற நிலை மாறி, புகைப்பிடிப்பது அநாகரீகம் என்ற உணர்வுக்கு இளைஞர்கள் மாறி வருவதை நீங்கள் சிந்தித்தது உண்டா?19) உலகில் முன்னேறிக்கொண்டிருக்கும் நாடுகள் பலவும் புகைப்பிடிப்பதற்கு தடைபோட்டு சட்டம் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்தது உண்டா?
20) புகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வேறு பாடு இல்லை என்பதை இப்போதாவது நீங்கள் சிந்தித்து பார்ப்பீர்களா?உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் ஐந்தே ஐந்து நிமிடம் சிந்தனை செய்து புகை எனும் அரக்கனிடமிருந்து விடுதலை பெருங்கள்.
ஏற்கெனவே சென்னை சிட்டிக்குள் வாடகை உயர்வால் கதிகலங்கிப் போயிருந்தனர் சென்னைவாசிகள். இப்போது புறநகர் ஏரியாவில் தஞ்சம் புகுந்த அவர்களை பிரச்னை வேறு ஒரு ரூபத்தில் விடாமல் விரட்டுகிறது.
பல்லாவரம், பள்ளிக்கரணை, மணலி, கொடுங்கையூர் திருவொற்றியூர் ஆகிய இடங்கள்தான் பஞ்சபூதங்களாய் பப்ளிக்கை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
தோல்தொழிற்சாலைகளின் கழிவு நீரால் மாசுபடும் மண், நிறம் மாறும் நிலத்தடி நீர், மாநகராட்சி குவித்து வைக்கும் மலை மலையான குப்பைகளின் துர்நாற்றத்தால் மூச்சுத்திணறும் ஆக்ஸிஜன், அடிக்கடி வாயுக் கசிவுகளை உண்டாக்கும் ரசாயன ஃபேக்ட்ரிகள் என்று `மல்டி' சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு மரண அவஸ்தையில் தவிக்கிறார்கள்.
சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய அரசும் இதை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் மக்களின் கோபப் பார்வை அரசின் மீது திரும்பியிருக்கிறது.
தோல் தொழிற்சாலைகள் சூழ்ந்திருக்கும் பல்லாவரம் சிவசங்கர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் இயந்தரங்களின் சத்தத்தால் நிம்மதியாக உறங்கமுடியாமல் தவித்துப் போகிறார்கள். காற்று வாங்க. ஜன்னல் கதவைத் திறந்தால் அவ்வளவுதான். தோல் கழிவின் துர்நாற்றமும், அதன்மேல் அடிக்கப்படும் ஒருவித ஸ்ப்ரேயின் காற்றும் சேர்ந்து மூச்சு முட்ட வைக்கிறது. அதோடு நெஞ்சடைப்பும்.
இதுபற்றி கேட்டால், `கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு நீங்கள் சொல்லும்போது பேக்டரியை ஓட்டவோ நிறுத்தவோ முடியாது' என்பதுதான் பதிலாக வருகிறது. பகல் நேரத்தில் மட்டும் பெரிய இயந்திரங்களை இயக்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக ஏரியாவாசிகள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தைகள், பள்ளிப் பிள்ளைகள் என்று எல்லோரின் நிலையும் பரிதாபம்தான். கழிவுத் தோல்களின் மேல் வைக்கப்படும் நெருப்பினால் புகைமூட்டம் சூழ, இருமலும் மூச்சிரைப்புமாக அன்றாடமும் திண்டாட்டம்தான். அதோடு இந்தப் பகுதியிலுள்ள கிணற்று நீரின் தன்மை கடல்நீரின் உப்பை விஞ்சிவிட்டது.
152 கம்பெனிகளிலிருந்து ஒரு நாளுக்கு 2 லட்சம் லிட்டர் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. இப்படி மாதம் 50 லட்சத்திற்கும் அதிகமான லிட்டர் அளவில் தோல் கழிவு சுத்திகரிப்பு நடைபெறுகிறது. ஆனாலும் இவ்வளவு சுகாதாரக் கேட்டோடு இருக்கிறது ஏரியா.
பள்ளிக்கரணையில் டைடல் பார்க் ரேஞ்சிற்கு கம்ப்யூட்டர் கம்பெனிகள் வந்துவிட்ட போதும், மலையாக அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளால் அலுவலகம் செல்வோரெல்லாம் கண் எரிச்சலுக்கும் மூச்சுத் திணறலுக்கும் ஆளாவது பரிதாபம்.
மணலி, கொடுங்கையூர் திருவொற்றியூர் பகுதியில் வசிப்பவர்களுக்கும் இதே நிலை தான்.
``உலகம் முழுவதும் சுகாதாரத்தை ஒரு நாளாக அறிவித்துக் கொண்டாடும் அளவுக்கு விழிப்புணர்வு வந்து விட்டது. ஆனால் இங்கு இப்படிபட்ட சூழ்நிலை. அதோடு இது போன்ற பகுதியில் வாழுகிறவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்கிறவர்கள், நடுத்தர மக்கள் தான். எந்த பணக்காரர்களும், எந்த மந்திரிகளுடைய வீடும், நடிகர்களுடைய வீடும் இந்த ஏரியாவில் கிடையாது. அப்பாவிப் பொது மக்கள்தான். நிலைமை இப்படி இருக்க, சென்னை மெரினா பீச்சை அழகுபடுத்த கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்கிறார்கள்.
சமீபத்தில் மணலியில் உள்ள ஒரு ரசாயன ஃபேக்ட்ரியில் வாயுக் கசிவு ஏற்பட திருவொற்றியூர் மக்களுக்கு தொண்டையும், கண்ணும் திகுதிகுவென எரிய, ஊரே அல்லாடிப்போனது. இதை விட பரிதாபம், மணலியில் எப்போதும் மூக்கை நமநமக்கச் செய்யும் ரசாயன நெடி மற்றும் சுகாதாரக் கேட்டினாலே இங்குள்ள சில இளம் பெண்களுக்கு திருமணம் நடைபெறாமலே போயிருக்கிறது. அவர்களில் சிலர் சென்னைக்குள் குடியேறி தங்கள் பிள்ளைகளை கரை சேர்த்திருக்கிறார்கள்.
``இந்தப் பகுதியில் வாழுகிற எங்களுக்கு குறைந்தது மூணு மாசத்துக்கு ஒரு முறையாவது முழு மருத்துவ சோதனைக்கு ஏற்பாடு செய்யணும். அல்லது காற்று, நீர் இதெல்லாம் சுத்தமா இருக்கிறதான்னு பரிசோதனை மூலமா எங்களுக்கு தினமும் தெரியப்படுத்தணும். அப்படியும் இல்லேன்னா இந்த இடங்கள் மனிதர்களே வாழத் தகுதியில்லாத இடங்கள்னு அரசாங்கமே அறிவிச்சு எங்களை காலி பண்ணச் சொல்லட்டும்'' என்று கொட்டித் தீர்த்தார் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர்.
``நெருக்கடி கொடுக்கும் நெடிப் பிரச்னையிலிருந்து தப்பிக்க கரிம வேதியியல் துறை பேராசிரியர் பக்ததாஸ், ``தோல் பதனிடுதலில் குரோமியம், காரம், அமிலம் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்தாமல் போனால் நுரையீரல் பாதிக்கப்படும். ரத்தத்தில் கலப்பதால் மெல்ல உடல் முழுக்க பாதிப்புகள் ஏற்படும். குறைந்த பட்சம் மக்கள் வாழ்கிற பகுதியிலுள்ள கம்பெனிகள் வெளியேற்றும் கழிவையும், காற்றையும் பரிசோதனை செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்யலாம். உலகில் வெப்பம் உயர்ந்து வருகிற இந்த நேரத்துல இது போன்ற தற்காப்புகளும் பரிசோதனைகளும் ரொம்ப அவசியம்'' என்றார் அக்கறையாக.
இது தொடர்பாக அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் இது எங்க லிமிட் இல்லை, இது வேற ``ஏரியா'' என்கிற பதிலே வருகிறது. ஆனால் ``சென்னையோட குப்பையை மட்டும் பள்ளிக்கரணை, கொடுங்கையூர் ஏரியாவில் கொட்டுகிறார்களே இது நியாயமா?'' என்று கோபத்தோடு கேட்கிற குரல்களுக்கு பதிலை உரியவர்கள்தான் தரவேண்டும்.
thanks kumudam.
சர்க்கரை நோய் என்பது எது?
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின்தான். ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்கிறார்கள்.
புதிய ஆய்வுகள்!
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோய்க்கும் இதயம் தொடர்பான நோய்க்கும் (Cardiovascular disease CVD) உள்ள நெருக்கம் பற்றி புதிது புதிதாக ஆராய்ந்து வருகிறார்கள். பொதுவாக, இரத்தத்திற்கு வெளியே இன்சுலின் குளுக்கோஸாக மாறிய பின்னர்தான் ரத்த செல்களுக்குள் செல்லும். ஆனால், குளுக்கோஸின் அளவு கூடினால், ரத்த ஓட்டத்தில் உள்ள இன்சுலினை பயன்படுத்த முடியாமல் உடலானது பம்ப் பண்ணுவதால், சர்க்கரை நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால்தான் இதயநோய் (CVD) மாதிரியான நோய்கள் வருகின்றன.
இன்சுலின் அளவும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அநியாயத்திற்கு உயரும்போது ரத்த நாளங்களில் கொழுப்புகள் அதிகப்படியாக படிவதாலும் இதய நோய் வரலாம் என்கிறார்கள். மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வுப்படி, நடுத்தர வயதுடையவர்களில் அதிக எடையுள்ளவர்களுக்குத்தான் (over weight) இன்சுலின் சுரப்பதில் தடையும் ரத்தத்தில் அதிகளவு குளுக்கோஸும் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்குத்தான்
‘ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ராலும் (unhealthy cholesterol) உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் இருக்கும். இதனால்தான் சர்க்கரை நோய் (diabetes), இதயநோய் (Heart disease), இதயத்தாக்கம் (stroke) போன்றவற்றிற்கான நோய் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.
கீழே உள்ள சில வழிமுறைகள், உடலில் இன்சுலின் சுரப்பதில் பிரச்னை இருந்தாலோ, மற்ற நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவற்றை எதிர்த்துப் போராடி, சரிசெய்ய உதவும்.
1. நடை பயிற்ச்சி செய்தால்... டயாபடீஸை விரட்டலாம் :
அதிக எடை உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதோடு இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மிகமிக உயர்ந்த வழி. முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள். ஒரு நாளைக்கு 30 நிமிடம் என்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் நடப்பவர்கள் ஐந்து முதல் ஏழு சதவீதம் வரை உடல் எடையைக் குறைக்கமுடியும். 58 சதவீதம் சர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்கமுடியும். ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிகமிகக் குறைவு.
2. காலை உணவைச் சாப்பிட மறக்காதீர்கள்!
காலையில் எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், காலை உணவை யாரும் தவறவிடாதீர்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பது நல்லது.
3. மகிழ்வான சூழல் :
(Laugh it up)பொதுவாக நன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியும், நல்ல மூடும் உருவாகும் என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன. இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு ஏறும் குளுக்கோஸின் அளவு மிகமிக குறைவு என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஒருநாள் சீரியஸான விரிவுரையைக் கேட்க வைத்திருக்கிறார்கள். இன்னொரு நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள். சீரியஸான விரிவுரையைக் கேட்ட நாளைவிட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய்விட்டுச் சிரித்த நாளில் அவர்களின் குளுக்கோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததைக் காட்டியதாம்.
4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:
உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய், இதயத் தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள். சர்க்கரை நோய் வந்த பின்னர், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால் போதும். சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும்.
நன்றி - குமுதம்
பசி எடுத்தாலோ அல்லது உணவு உண்ட பிறகோ வயிற்றில் ஒரு வித எரிச்சல் ஏற்படும். இதைத்தான் வயிற்று எரிச்சல் என்று செல்கிறார்கள்.
வயிற்றில் புண் இருப்பதற்கான அறி குறியாகவும் இது இருக்கும்.
நேரம் தவறி உண்பதாலும், தொடர்ந்து அதிகக் காரமான உணவுகளை உண்பதாலும் வயிற்றுப் புண் வரக்கூடும்.
மேலும், வயிற்றில் உள்ள இரைப்பை, முன் சிறுகுடல், சிறுகுடல், கணையம் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் ஏதேனும் புண் அல்லது அழற்சி இருந்தால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
முக்கியமாக இரைப்பையில் தோன்றும் அமில மிகைப்பு நோயில் இந்த அறிகுறி அடிக்கடி ஏற்படும்.
இது தவிர இரைப்பை அழற்சி, இரைப்பை புண், முன் சிறுகுடல் புண், இரைப்பையும் உணவுக் குழலும் இணையுமிடத்தில் ஏற்படும் புண் போன்றவை வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்குக் காரணங்களாக இருக்கும்.
மேலும் அல்சர் வருவதற்கு முக்கியக் காரணம் கார உணவு, நேரந்தவறிய உணவு, அதீத உணவு, மசாலா நிறைந்த உணவு, அசைவ உணவு. இதைத் தவிர அடிக்கடி சாப்பிடப்படும் வலி நிவாரண மாத்திரைகளும் அல்சரை உருவாக்கலாம்.
பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து வாந்தி எடுப்பவர்களுக்கும் வயிற்றுப் புண் ஏற்படலாம்.
புகைப்படிப்பது, மது அருந்துவது போன்றப் பழக்க வழக்கங்களினாலும் வயிற்றுப் புண் வருகிறது.
அதிகமான பதற்றம், கோபம் போன்றவற்றாலும் நமது உடலில் வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது.
வாயில் எப்போது பார்த்தாலும் சுயிங்கம் போட்டு மென்று கொண்டிருப்பவர் களுக்கு இந்த அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் வர அதிக வாய்ப்புகள் உண்டு.
ஆண்டுக் கணக்கில் சுயிங்கம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் புற்று நோய் கூட வரலாம்.
சிலர் புகைப்பதை விடுவதற்காக சுயிங்கம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதுவும் தவறு.
தெடர்ந்து சுயிங்கம் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம்.வயிற்றுப் புண் வராமல் இருக்க தினமும் மூன்று வேளை உணவையும் குறிப் பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
காரமான உணவுப் பொருட்களை தவிர்த்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
சுயிங்கம், புகைப்பழக்கம், மது அருந்துவது போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
வயிறு புடைக்க உண்பதை விட பசிக்கேற்ப உண்பதே சிறந்தது.
அடிக்கடி உண்ணாமல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உண்பதும் அவசியம்.காலை மற்றும் இரவு நேரத்தில் தவறாமல் உணவு உண்பது அவசியம்.
ஏனெ னில் இரவுநேர உணவுக்கும், காலை உணவுக்கும் அதிக நேர இடைவெளி இருப்பதால் இவற்றை தவிர்ப்பது உடலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவதும் வயிற்றுக்கு ஏற்றது.
தண்ணீர் என்றால் அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியம்.
ஏனெனில் தண்ணீர் மூலமாகத்தான் பல நேய்கள் நம்மைத் தாக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வாஞ்ஜுர்
தொகுப்பு ஹாஜா
சகோ. ஹாஜாவின் உபயோகப்பூர்வமான கட்டுரைத்தொகுப்புகளை பார்த்தால் நமக்கும் வயிற்றெரிச்சல், நம்மனால இதுபோல நல்ல கட்டுரைகளை தொகுக்க முடியலையேன்னு. நல்ல முயற்சி ஹாஜா அவர்களே. வாழ்த்துக்கள்.
வாஞ்ஜூர் தளத்திற்கான முகவரி
http://vanjoor-vanjoor.blogspot.com இத்தளம் ஒரு பொக்கிஷம், தினமும் படிக்கவேண்டிய ஒரு வலைப்பதிவு.