மத்திய அரசின் புதிய 15 அம்ச திட்டத்தின் கீழ் சிறுபான்மை வகுப்பைச்சார்ந்த 1 முதல் பத்தாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும்.
* சிறுபான்மை இனத்தவராக இருக்கவேண்டும்
* 1 முதல் பத்தாம் வகுப்புகளில் அரசினர் அல்லது தனியார்பள்ளிகளில் பயில்பவராக இருக்கவேண்டும். நிதி உதவியில் நுழைவுக்கட்டணம், கல்விக்கட்டணம் மற்றும் பராமரிப்பு படி அடங்கும்.
* அத்தடன் முந்தைய இறுதித்தேர்வில் 50% சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும்.
* 30% ஸ்காலர்சிப் சிறுபான்மை சிறுமிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது (அதாவது சிறுமிகளுக்கு கிடைப்பது அதிக வாய்ப்புள்ளது).
* பெற்றோர் அல்லது காப்பாளருடைய ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும்.
விண்ணப்பம் மற்றும் இதர விவரங்கள் அறிய
http://minorityaffairs.gov.in தளத்திற்கு செல்லவும்.
(இன்றைய சென்னை தினத்தந்தியில் (27-07-08) வந்திருக்கும் மத்திய அரசின் விளம்பரம். நமதூர் அமைப்புகள் இதில் அதிக அக்கரை காட்டி தேவையுடையோருக்கு தேடிச்சென்று உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
30% ஸ்காலர்சிப் சிறுபான்மை சிறுமிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் சிறுமிகளுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதில் அதிக வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரை எக்ஸ்பிரஸ்)
சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்க்கும் பயிற்சி திட்ட சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது.இதை நம் சமுதாய மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


Quickpost this image to Myspace, Digg, Facebook, and others!