| |
| முருங்கைக்கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். | |
| பாசிப் பருப்பை லேசாக வறுத்து ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.. | |
| வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், சீரகம், உளுந்து போட்டு தாளித்து விட்டு பூண்டை தட்டி அதனுடன் சேர்த்து வதக்கவும். . | |
| அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். | |
| அதனுடன் கழுவி தண்ணீர் வடித்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போட்டு உப்பு சேர்த்து கிளறி விடவும். கீரை நன்கு வதங்கி சுருங்கி விடும். | |
| கீரையுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஒன்றாகும்படி கிளறி விடவும். | |
| பின்னர் வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பை சேர்த்து நன்கு கிளறவும். | |
| கிளறிய பின்னர் 5 நிமிடங்கள் தீயை மிதமாக வைத்து வேக விடவும். கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடவும். முருங்கைக்கீரை பிரட்டல் தயார். இந்த முருங்கைக்கீரைக்கு துவரம் பருப்பை வேக வைத்து செய்தால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும். இதை ப்ளைன் தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். முருங்கைக்கீரை செய்யும் போது நிறைய வெங்காயம், தேங்காய் சேர்த்து பிரட்டினால் நன்றாக இருக்கும். தேங்காய் அதிகம் சேர்ப்பதற்கு பதில் பாசி பருப்பு அல்லது துவரம் பருப்பை வேக வைத்தும் சேர்க்கலாம் தொகுப்பு : உம்முஅப்துற்றஹ்மான் | |

பேச்சிலர் கிச்சன்.
வளைகுடா நாடுகளில் தனிமையில்(பேச்சிலர்) வசிக்கும் நமதூர் மக்கள் பயன்பெறும் பொருட்டு இந்த எளிய சமையல் குறிப்புகள்.
- ஃப்ரஸ் தேங்காய் கிடைக்காதவர்கள் இங்கு கிடைக்கும் உலர்ந்த தேங்காய் பூவில் கொப்பரை வாசம் வீசுவதை தவிர்க்க ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் தெளித்து 5 நிமிடம் ஊற வைக்கலாம்.
- தயிர் முடிந்துவிட்டால் அந்த கப்பில் பால் ஊற்றி வைத்துவிட்டால் 10 மணி நேரத்தில் மீண்டும் கட்டித்தயிர் ரெடி.(ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது)
- இறைச்சி ஆணம் மிஞ்சி விட்டதா. அதில் அரிசிமாவை(புட்டு மாவு) கலந்து சுவையான பிராச்சப்பம் சுடலாம்.
- சஹரில் துணைக்கறிக்கு இங்கு கிடைக்கும் சிக்கன் பர்கரை பொரித்துக் கொண்டால் உண்டக்கலியா போல் சுவையாக இருக்கும்.
- சிறிய நூடுல்ஸ் (மாகி,இந்தோமின்) வெந்ததும் வடித்து விட்டு அதில் முட்டை வெங்காயம் மிளகாய் சேர்த்து தோசைபோல் சுட்டால் திடீர் முர்தபா ரெடி.
ஃபாஸ்ட் நோன்புக்கஞ்சி:
ஒரு கரண்டி எண்ணெயில் பாதி வெங்காயம் பாதி தக்காளி ஒரு கரண்டி இஞ்சி-பூண்டு கலவை சிறிதளவு கொத்துக்கறி(கீமா) விட்டு வதக்கி இரண்டு கப் நீர் விட்டு ஒரு கரண்டி ஓட்ஸ் தூவி கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பர் கறிகஞ்சி தயார்.
ஒரு கொசுறு தகவல்: இந்த வருட ரமழான் ஆங்கில மாதம் மற்றும் நாளில் வந்திருக்கிறது. ரமழானும் செப்டம்பரும் ஒன்பதாவது மாதங்கள். தேதியும் ஒன்றே ரமழான்-1 செப்டம்பர் -1. இதற்குமுன் எப்போதாவது வந்திருக்கிறதா?
தொகுப்பு - அபூஸமீஹா
--
Peace be on You
Abubaker