இஸ்லாமியர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள் தான் என்று இத்தனை காலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் உரத்த குரல் எழுப்பி வந்தன.
நடைபெற்ற நாசவேலைகளுக்கெல்லாம் அவர்கள்தான் அச்சாணி என்ற வாதம் நமது சிந்தனைக்கு வேலை கொடுத்தது.
சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவிற்கு சற்று முன்னர் டெல்லியில் முகூர்த்தக்கால் நடுவார்கள். `என்கவுன்ட்டர்' என்ற நேரடி மோதலில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற சேதி வரும். அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று காஷ்மீர் கடந்து வந்தவர்கள் என்ற தகவலும் சொல்வார்கள். அதுதான் முகூர்த்தக்கால். வாஜ்பாய் அரசு அமைந்தபோது அரங்கேறிய இந்த நேரடி மோதல் நாடகங்கள் தொடருகின்றன.
அதற்காக நாம் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புக்களைக் குறைவாக மதிப்பிடவில்லை. அந்த அமைப்புகள் செயல்படுகின்றன, அந்த அமைப்புகளின் பயிற்சித் தளம் பாகிஸ்தானாகவும், ஆப்கனிஸ்தானாகவும் இருக்கின்றன. அதன் செயல்பாடுகளை அறிவதிலும் அடக்குவதிலும் நமது ராணுவமும் உளவுத் துறைகளும் அரும் பெரும் சேவைகள் செய்கின்றன. அதே சமயத்தில் தீவிரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள்தான் என்ற பி.ஜே.பி.யின் வாதத்தை அதன் அமைப்புகளே சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கின்றன. தண்ணீரில் பிறந்த உப்பு தண்ணீரில் கரைவதுதானே இயல்பு?
சத்வி பிரக்யாசிங் தாகூர் என்ற நாமகரணம் கொண்ட ஓர் அம்மணி. அவர் இப்போதெல்லாம் காவி உடைதான் அணிகிறார். இந்துத்வா சாமியாரிணி. அவரையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நால்வரையும் மராட்டிய பயங்கரவாத எதிர்ப்புக் காவல்படை கைது செய்திருக்கிறது. அந்த அம்மணியின் பாழடைந்த மனக் குகை வெடிகுண்டுகளின் சேமிப்புக் கிடங்கு என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த சாமியார் அம்மணியின் நரம்பு மண்டலங்களே பயங்கரவாத நாற்றங்கால்கள் என்றும் சொல்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் முதல் வாரம் மராட்டிய நகரமான மலேகானிலும் குஜராத் மொடாசாவிலும் குண்டுவெடிப்புக்கள் நடந்தன. வழக்கம் போல் அதற்கும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள்தான் காரணம் என்று சொன்னார்கள். உண்மையில் அந்த நகரங்களை நெருப்பில் நீராட்டியது காவி அம்மணியும் அவரோடு சேர்ந்த சங் பரிவாரங்களும்தான். குண்டு வெடிப்புக்கள் இஸ்லாமிய குடியிருப்புக்களில் நடந்தன.
இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவர், வெடிகுண்டுகள் செய்வது எப்படி - வெடிக்கச் செய்வது எப்படி என்று இவர்களுக்கும் இன்னபிற சங்பரிவாரங்களுக்கும் பயிற்சி அளித்தவர் என்று புகார் எழுந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இப்போது நாம் தெரிந்து கொள்வது என்ன? பயங்கரவாதம் - தீவிரவாதம் என்பதெல்லாம் ஒரு மதத்தின் பிறப்புரிமை அல்ல. அதற்கு மதமே கிடையாது என்பதுதான். இத்தனை ஆண்டுகளாக தீவிரவாதம் என்றால் இஸ்லாம் - இஸ்லாமியர்களின் ரகசிய ஆயுதம் என்று சொல்லி வந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் இப்போது என்ன சொல்கின்றன?
தீவிரவாதி என்று ஓர் இஸ்லாமியப் பெண் கைது செய்யப்பட்டதில்லை. ஆனால், தீவிரவாதி என்றும் வெடிகுண்டு விளையாட்டில் மேதை என்றும் சங் பரிவார் அம்மணி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் காலப் புயலாம். ஆகவே அவரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் சிவசேனா பால்தாக்கரே.
அந்த அம்மணி கல்லூரிப் பருவத்தில் பி.ஜே.பி. மாணவர் அணியின் முன்னணிச் செயலாளராகச் செயல்பட்டவர். அம்மணி ஒரு தீவிரவாதி என்பதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய மையங்களில் நடந்த குண்டுவெடிப்புக்களுக்கும் அவர்தான் சூத்திரதாரி என்றும் தகவல் வெளியானது. பி.ஜே.பி. பதற்றம் கொண்டது. அவசர அவசரமாக `அம்மணி யாரோ தெரியாது' என்று அறிக்கை வெளியிட்டது.
அம்மணியின் பாதார விந்தங்களில் இன்றைய பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் அமர்ந்திருக்கும் அரிய புகைப்படங்கள் வெளியாகின. தனிப்பட்ட முறையில் யாரோ வெடிகுண்டு விளையாட்டு விளையாடியதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று இப்போது தப்பிக்கப் பார்க்கிறார்கள். அதே சமயத்தில், அந்த அம்மணியையும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களையும் ஜாமீனில் எடுக்க முனைகிறார்கள்.
டெல்லியில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு தொடர்பாக இரு இஸ்லாமிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அப்பாவிகள் என்று ஜமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அவர்களை ஜாமீனில் எடுக்க முயன்றார். `ஐயோ! இது என்ன அநியாயம்? பயங்கரவாதத்திற்குத் துணைவேந்தரே ஆதரவா' என்று பி.ஜே.பி. கண்டனக் கணைகளை ஏவியது. ஆனால் இன்றைக்கு பயங்கரவாத அம்மணியையும் அவரது ஆஸ்.எஸ்.எஸ். சீடர்களையும் காக்க சட்ட வல்லுனர்களின் உதவியை நாடுகிறது.
எந்த வடிவில் எந்த மதத்தின் பின்னணியில் பயங்கரவாதம் தலை தூக்கினாலும் அதனை மனித சமுதாயம் கண்டிக்க வேண்டும். அப்பாவி மக்களின் உயிரோடும் உடைமைகளோடும் விளையாடும் பயங்கரவாதிகள் மனிதநேயத்திற்கு மரண சாசனம் எழுதுபவர்கள்.
ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்றால் நெருப்பு மழைபொழியும். இந்துத்வா பயங்கரவாதம் என்றால் மலர்மாரி பொழியும் என்று சங்பரிவாரங்கள் வாதாட வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளாகவே மராட்டிய மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில், மசூதிகளில் குண்டுகள் வெடித்திருக்கினறன. இந்தக் கோரத் திருவிளையாடல்களுக்கும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உறுதியாகத் தொடர்பிருக்க வழியில்லை. எனவே, உண்மையான சமூக விரோதிகளைக் கண்டுபிடியுங்கள் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அறிவுறுத்தின. ஆனால், அந்த எலிகளைப் பிடிக்க மராட்டிய அரசுப் பூனை மறுத்துவிட்டது. என்றாலும் அந்த இருட்டறை சுந்தரிகள் மீது எப்படியோ வெளிச்சம் பாய்ந்துவிட்டது. எனவே, கைது செய்திருக்கிறார்கள். இனி சட்டம் சரியாகச் செயல்படவேண்டும்.
மராட்டிய மலேகானிலும் குஜராத் மொடாசாவிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இஸ்லாமிய குடியிருப்புக்களில் குண்டுகள் வெடித்தன. இதிலிருந்து என்ன தெரிகிறது? வெடிகுண்டு விளையாட்டுக்களை இந்தியா முழுமையும் நிகழ்த்த ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார பயங்கரவாத அமைப்புகள் தயாராகிவிட்டன என்று அர்த்தம்.
வளர்க்கப்படும் வகுப்புவாத உணர்வுகள்- செயல்கள் அபாய எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. அங்கே பயங்கரவாதம் கோரமுகத்தோடு எழுகின்றது. அதற்கு நியாயம் கற்பிப்பவர்களும் ஆதரவு தருபவர்களும் பயங்கரவாதிகளைவிட மோசமானவர்கள்தான். அவர்கள் தேச விரோதிகள். இந்த வாதம் இருதரப்பினருக்கும் பொருந்தும்.
SOLAI

கடந்த 2006
ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3
இடங்களில் குண்டுவெடிப்பு, 2006
ல் மும்பை இரயில்களில் 7
குண்டு வெடிப்புகள், 2006
மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007
ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008
ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008
பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008
செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6
இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்;
சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு,
நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த,
சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும்,
முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு,
ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து,
சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு,
அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006
ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும்,
ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு,
பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும்,
முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும்,
அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.கடந்த 4
வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை,
அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில்,
தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு,
அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி,
குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் '
நாங்கள் 10
நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்'
என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவன்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு '
தேசநலன்,
தீவிரவாதிகள்'
என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி,
அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ?
அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30
பேர்கள் பலியாக்கப்பட்டும், 100
ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.கோப்புகளை மூடுவதற்காக,
குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா,
அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர்,
தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து,
பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால்,
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும்,
முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்?
இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால்,
நாக்பூரிலும்,
மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும்,
செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும்,
இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.
மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும்,
துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து,
நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்?
என்பதும் வெட்டவெளிச்சமாகும்.இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில்,
டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;,
பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும்,
பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும்,
தமிழக காவல்த்துறையுமே சாரும்.தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா,
சிமி,
இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா?
நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.நன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை
முஸ்லிம்களின் மத உணர்வை கருத்தில் கொண்டு, அவர்களின் வீடுகளில் சோதனைக்கு அழைத் துச் செல்லப்படும் மோப்ப நாய்க ளுக்கு இனி, ஷூ அணிவிக்க, பிரிட்டன் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நாய்களை அசுத்தமான விலங்காக முஸ்லிம்கள் கருதுகின் றனர். நாய்கள் தங்களை தொடுவதற்கும், வீடுகளுக்குள் நுழைவதற்கும் அவர்கள் அனுமதிப்பதில்லை. பயங்கரவாதிகளையும், வெடிகுண்டுகளையும் கண்டுபிடிப்பதற்காக, பிரிட்டன் போலீசாரும், பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரும் மோப்ப நாய்களை பயன் படுத்துகின்றனர். ஆனால், இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்களை நாய்கள் முகர்ந்து பார்ப்பதற்கும், தொடுவதற்கும் அவர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். உடமைகளை மோப்ப நாய்கள் சோதனையிடுவதற்கும் கூட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், முஸ்லிம்களையும், அவர்கள் உடமைகளையும் தொடாத வகையில் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தப் படுகிறது. ஏற்கனவே, மசூதிகளில் மோப்ப நாய்கள் சோதனையிடும் போது, அவற்றின் கால்களில் ரப்பர் ஷூக்கள் அணிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், முஸ்லிம்களின் வீடுகள், நிறுவனங்களில், போதை மருந்து அல்லது வெடிமருந்து சோதனை நடத்த நேரிட்டால், மோப்ப நாய்களின் கால்கள் அங்கு படாத வகையில் அவற்றுக்கு ரப்பர் காலணிகள் அணிவிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ஆனால், "முஸ்லிம் சட்டப்படி, நாய்களை அசுத்தமானவையாக சித்தரிக்கப்படவில்லை. நாய்களில் இருந்து வழியும் எச்சில் மட்டுமே அசுத்தமானதாக கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டப் பள்ளிகளில் பெரும்பாலானவையும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் வீடுகளுக்குள் நாய்களை கொண்டு செல்ல வேண்டுமானால், அதில் தவறு இல்லை,' என்று, பிரிட்டனை சேர்ந்த இமாம் இப்ராகிம் மோக்ரா கருத்துக் கூறியுள்ளார்.