இஸ்லாத்தின் எழுச்சி யாருக்கெல்லாம் பாதகமாக இருக்கிறதோ அவர்களெல்லோரும் ஓரணியில்கூடி இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தங்கள் ஒட்டுமொத்தச் சக்தியை ஒன்றுதிரட்டி துர்ப்பிரச்சாரம் செய்து இஸ்லாத்தின் ஜோதியை அணைக்க முனைகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் போர்கள்,கலவரங்கள் என முஸ்லிம்களின் உயிர்களை அழித்தொழிக்கவும் தயங்குவதில்லை.
இதன் தொடர்ச்சியாக முஹம்மது நபி ஸல்.அவர்களைப் பற்றி யெலன்டன் போஸ்டென் டென்மார்க் பத்திரிக்கை சிலவருடங்கள் முன்பு வெளியிட்ட கேலிச்சித்திரத்தை, விஷமத்தனமாக தினமலர் மீள்பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து தமிழக முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்புகளைப் பலமாகப் பதிவு செய்துள்ளார்கள். வழக்குகள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் தவிர்த்து மின்மடல் குழுமங்கள் மற்றும் இணைய தளங்களில் இதுகுறித்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வளைகுடா மற்றும் தமிழர்கள் அதிகமாக பணியாற்றும் மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தினமலர் இணைய தளத்தை முடக்கும் முயற்சிகள் துரிதமாக நடந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் முஸ்லிம்களின் கோரிக்கையையும் மனக் குமுறலின் நியாயத்தையும் ஏற்று தினமலரை தடைசெய்யும் பட்சத்தில் கனிசமான தமிழ், முஸ்லிம் வாசகர்களை தினமலர் இழக்கப்போவது உறுதி (இன்ஷா அல்லாஹ்!) [ தற்போதைய நிலவரப்படி அமீரகத்தில் தினமலர் இணைய தளம் தடை செய்யப்பட்டுள்ளது]
செப்டம்பர்-11, தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு உலகலாவிய அளவில் இஸ்லாத்திற்கு எதிரான எதிர்ப்பலைகளை ஊடகங்கள் வாயிலாக வேகமாகப் பரப்பப்பட்டன. அதுவரை இஸ்லாம் என்றாலே என்னவென்றே அறியாதார்கூட, இறுதி வேதமாகிய குர்ஆனின் மொழிபெயர்ப்புகளை அதிகமாக வாங்கிப்படிக்கலாயினர். இஸ்லாமிய எதிர்ப்பலை அடங்காமல், முஸ்லிம்களைப் பற்றிய அபரிமித அச்சத்தை விதைப்பதில் பார்ப்பன ஆதிக்க ஊடகங்களும் சரியாகப் பயன் படுத்திக் கொண்டதன் விளைவு! இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் முஸ்லிமல்லாதார்களிடம் ஏற்பட்டு, குர்ஆன் மொழிபெயர்ப்புகள் என்றுமில்லாதளவுக்கு விற்றுத் தீர்ந்தன.
உலக மக்களில் ஐந்தில் இருபங்கினரின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிப் போடக் காரணமான இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன முஹம்மது நபி ஸல் அவர்களைத் தூற்றுவது நபிகளார் காலத்திலிருந்தே தொடர்ந்த போதிலும் அல்லாஹ்வின் ஜோதியை அவர்களின் வெறும் வாய்களால் அணைக்க முடியாமல் இறுதியில் இஸ்லாம் வென்றதாகவே வரலாறுகள் பதிவு செய்து வைத்துள்ளன. தினமலர் போன்ற பார்ப்பனக் கையேடுகள் இவற்றை அறிந்தும் அறியாமல் முஸ்லிம்களைப் பற்றியச் செய்திகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பீதியூட்டி எழுதிவருவதோடு இதுபோன்ற விஷமத்தனத்தில் சிலவருடங்களாக ஈடுபட்டு வருகிறது.
எதிர்ப்புகள் வந்தால் "வருந்துகிறோம்" என்று பெட்டிச் செய்தி வெளியிட்டு மீண்டும் மீண்டும் விஷமம் செய்யும் தினமருக்கு முஸ்லிம்கள் சரியான செருப்படியைக் கொடுத்துள்ளார்கள். இதுபோல் உணர்ச்சிவயப்பட வைத்து கலவரத்தைத் தூண்டி அரசியல் குளிர்காயும் சங்பரிவாரங்களின் பார்ப்பனச் சூழ்ச்சியில் தினமலரும் பங்கெடுத்ததன் மூலம் தமிழக முஸ்லிம்கள் நெடு நாட்களுக்குப் பின்னர் ஒன்றுசேரும் உன்னதமான வாய்ப்பை இந்த ரமழானில் தினமலர் ஏற்படுத்தித் தந்துள்ளது.
முஸ்லிம்களுக்குள் தெளிவு பெறவேண்டிய மார்க்கம் விளக்கங்களை முரண்பாடுகளாக முன்னிறுத்தி பரஸ்பரம் ஊடகங்களில் வசைபாடிக் கொண்டிருந்த முஸ்லிம் அமைப்புகளும், அரசியலில் கொட்டைபோட்ட கட்சிகள் முதல் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட கட்சிவரை நபிகளாரை அவமதிக்கும் தினமலரின் விஷமத்தை கண்டித்துள்ளனர்.வழிபாடுகளால் இறையருளைப் பெறும் ரமழான் மாதத்தில் எங்கள் உயிரினும் மேலான நபிகளாருக்கு ஆதரவாகக் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருமித்தக் குரலில் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதன் மூலம் தமிழக முஸ்லிம்களின் ஒற்றுமைக்காண விதையை தினமலர் விதைத்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் இந்த ரமழானின் நற்செய்தியாக தமிழக முஸ்லிம்கள் தொடர்ந்து தினமலர் போன்ற பார்ப்பனச் சித்தனை நச்சூடகங்களைப் புறக்கணிப்பதோடு முஸ்லிம்களுக்கான நாளேடு ஒன்றைத் துவங்கவும் முயற்சி செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கான நாளிதழ் சாத்தியமா என்று யோசித்து இனியும் காலம்கடத்தாமல் தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே இயங்கி வரும் நலிவடைந்த பத்திரிக்கையை எடுத்து நடத்தலாம்.
திமுக ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முரசொலி நாளிதழ் தடையின்றி கட்சித் தொண்டர்களை மட்டுமே நம்பி வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிமுகவிற்கு Dr.நமது எம்ஜியார்!திராவிடர் கழகத்திற்கு விடுதலை; பாமகவுக்கு "தமிழோசை" இவை பரபரப்புச் செய்திகளையோ, சினிமாச் செய்திகளையோ முன்னிறுத்தாமல் தங்கள் கட்சி சம்பந்தப்பட்ட செய்திகளையே பிரசுரித்து இலாபகரமாக இல்லாவிட்டாலும் நஷ்டமின்றி தொடர்ந்து இயங்கி வருகின்றன என்பதைக் கவனத்தில் கொண்டால் முஸ்லிம்களுக்கான தனிநாளிதழ் தொடங்கப்பட்டால்,தமிழகத்தின் அனைத்துப் பகுதி முஸ்லிம்களும் ஆதரவளிக்கும் நிலையில் நஷ்டப்பட வாய்ப்பில்லை.
உடனடியாக செய்தியாளர்களுக்கு எங்கு செல்வது என்ற கவலையும் தேவையில்லை. தற்போது கொடிகட்டிப்பறக்கும் தமிழ் முஸ்லிம் வலைப் பதிவர்களில் பலர் சர்வதேச செய்தியாளர்களுக்கு இணையாக திறமையாக எழுதி வருகிறார்கள். அதிரை எக்ஸ்ப்ரஸ் போல் ஊருக்கு ஒரு வலைப்பூ செய்தி மடலை ஏற்படுத்தி அவற்றை ஒருங்கிணைத்தாலே ஆண்லைன் செய்தியும் உடனுக்குடன் கிடைத்து விடும்.
செய்திகளின் தன்மையைப் பொருத்து மேற்சொன்ன நாளிதழ் வாசகர்களும் விளம்பரதாரர்களும் நமக்கான நாளிதழை நோக்கித் திரும்பினால் இன்ஷா அல்லாஹ் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் பாலமாக அது விளங்கும் என்பதில் மிகையில்லை! அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர்;ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான் (குர்ஆன் 061:008)
அபூஅஸீலா-துபாய்



தமுமுக மற்றும் ஜாக் இயக்கங்களால்
சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
இந்துமத சித்தாந்தம் வேறு, இந்துத்துவ பயங்கரவாதம் வேறு என்பதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு. ஆனால் இந்துமத சித்தாந்தமே கொடும் பயங்கரவாதம் என்பது பிராமணரல்லாத இந்துக்களின் வாதம். நமக்கு இரண்டாவது நிலைபாடு குறித்து எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் நாம் வேறு கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், ஒருவர் செய்யும் தவறுக்கு ஒரு மதத்தையோ அல்லது கூட்டத்தையோ பழியாக்கி விடக்கூடாது என்ற திருக்குர்ஆன் கூற்றுப்படி நமது முதல் நிலைபாடு அமைகிறது.
சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்க உளவுத்துறை, இஸ்ரேலின் மொஸாத் உளவுத்துறை, சங்பரிவார் அமைப்புகளின் கூட்டணி திரைமறைவில் செயல்படுவதாக நாம் குற்றம்சாட்டி வருகிறோம். இவர்கள் எந்தக் கொள்கையும் இல்லாத சில பெயர்தாங்கி முஸ்லிம்களை அம்புகளாகப் பயன்படுத்தும் அபாயமும் உள்ளதாக ஐயம் எழுப்பி வருகிறோம்.
பகிரங்கமாக ஆயுதப் பயிற்சி எடுக்கும் பஜ்ரங்தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து ஜாக்ரன் மன்ச், துர்கா வாகினி உள்ளிட்ட இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை ஏனோ விசாரிப்பதில்லை.
இந்நிலையில் மீடியாக்கள் சில 'முரட்டு விலங்குகளாக' முஸ்லிம்கள் மீது பாய்கின்றன. தமிழகத்தில் ஜெயா டி.வி.யும், தினமலரும், இந்தியா டுடேயும் மதக்கலவரத்தைத் துண்டும் வகையிலும், தீவிரவாதத்தைத் தூண்டிவிடும் வகையிலும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அமைதியை விரும்பும் அனைவரும் கீழ்க்கண்ட கருத்தியலோடு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக வழியில் தெரிவிக்குமாறு தமுமுக மாணவரணியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பார்ப்பன பயங்கரவாதத்தைத் தூண்டும் தினமலர்
போன்: (044) 28523715, 28511303, 28592814 பேக்ஸ்: (044) 28592815
மதவெறியைத் தூண்டும் இந்தியா டுடே
போன்: (044) 28478525, 28478544 பேக்ஸ்: (044) 28472178
இந்துத்துவ தீவிரவாதத்தை வளர்க்கும் ஜெயா டி.வி.
போன்: (044) 43960000, 43960144 பேக்ஸ்: (044) 43960145
நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறு பான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப் புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க துப்பற்ற, திறமையற்ற காவல் துறை மற்றும் பாதுகாப்பு நிறு வனங்கள் முஸ்லிம் அமைப்பு களையும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் காரணமாக்கு வதையும், கைது செய்வதையும் தங்கள் வழக்கமாக்கி கொண்டிருக் கின்றன. கையாலாகாத காவல் துறை சொல்லும் அனைத்தையும் கண், காது, மூக்கு வைத்து தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப எழுதுவதையும், ஒளிபரப்புவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளன அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்.
சமீபத்தில் நடந்த பெங்களூர் மற்றும் அஹ்மதாபாத் குண்டு வெடிப்புகளிலும் வழக்கம் போல முஸ்லிம்களை இணைத்து செய்திகள் வெளியிட்ட மீடியாக்கள் தமிழகத்தில் தீவிரவாகிதள் கைது, குண்டு வைக்க சதி என்ற காவல் துறையின் வழக்கமான பல்லவியை போட்டி போட்டு கொண்டு தங்கள் இஷ்டம் போல வெளியிட்டு அரிப்பை தீர்த்துக் கொண்டன.
காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் இந்த மீடியாக்கள் மறுபுறம் கேட்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் என்ன கூறப்படு கிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையில்லாமல் செயல் பட்டு வருகிறார்கள். குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என ஒரு சமூகத்தையும், மதத்தையும் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பத்திரிக்கை சட்டத்தின்படி தண்டனைக்குரியது. ஆனால் எழுதுவதற்கு முன்னால் தங்கள் மூளையிலும், பேனா முனையிலும் போதை ஏற்றிக்கொள்ளும் ஊடகங்களுக்கு சரியான பாடத்தை முஸ்லிம் சமுதாயம் புகட்ட வேண்டியதிருக்கும் என எச்சரிக்கிறோம். மதுரையில் ஒரு நாளிதழுக்கு நேர்ந்த கதியை பார்த்தும் இவர்கள் திருந்தவில்லை. அந்தளவுக்கு போகாமல் ஜனநாயக ரீதியில் இது போன்று வக்கிரமாக எழுதும் ஊடகங்களின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கில் திரண்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தமிழகத்தின் அனைத்து ஊடகங்களையும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்.
தமிழக ஊடகங்களில் இந்துத்துவா மற்றும் ஏகாதிபத்திய கைக்கூலிகளே நிறைந்திருக்கும் சூழ்நிலையில் பொதுவான நடுநிலையான மாற்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்படுத்த வேண்டியது முஸ்லிம்களின் அவசர மற்றும் முக்கிய கடமையாக இருக்கிறது. கேரள முஸ்லிம்களின் முன்மாதிரியை கொண்டு தமிழகத்தில் உடனடியாக இதற்கான வேலைகளை சமுதாய நலன் விரும்பிகள், செல்வந்தர்கள் முடுக்கி விடவேண்டும்.
ஊடகத் துறையில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் முன் வர வேண்டும். அப்போதுதான் ஊடகத்தில் இருக்கும் நச்சு விதைகளை கிள்ளி எறிய முடியும்.
தமுமுக இணையத்தளம்
ஒவ்வொருமுறையும் கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதும் அவர் ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய நாசகார செய்திகளுடன் தினப் பத்திரிக்கைகள் போட்டிபோட்டுக்கொண்டு கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடும். அதனைத்தொடர்ந்தோ அதற்கு முன்போ காக்கிச்சட்டைகள் களத்திலிறங்கியிருக்கும்.
நமதூரிலும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை இன்னும் ஒரிரு தலைமுறைக்கு நினைவில் இருக்கும். ஸ்காட்லாந்திற்கு இணையான தமிழக காவல்துறை ஆணில்லா வீடுகளில் இரவு நேரங்களில் சுவரேறி குதித்த சாகச நிகழ்ச்சிகள் நமதூரில் அரங்கேறியிருக்கின்றன.
கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் டிசம்பர் மாதங்களில் பாட்சா மரைக்காயர் இல்லத்தில் பூட்ஸ்கால்களால் மிதிபட்ட காயங்களை அண்ணாத்துறை எம்.எல்.ஏவிடம் வலிச்சி காட்டிய ஆண்டுகள் நமதூரில் உண்டு. நிற்க. இவையெல்லாம் ஏதோ சிறு விசயத்தை பூதாகரமா காண்பிக்க நினைப்பதாக எண்ணவேண்டாம். எழுத்து விபச்சாரம் செய்யும் தமிழ் செய்தித்தாள்களின் வரிசையில் நாமும் நிற்காமல் நம்மைப் படைத்தவன் பாதுகாக்கட்டும்.
இது இப்படி இருக்க தற்போது பெங்களூர், அஹமதாபாத்களில் நிகழ்ந்துள்ள கோர வெடிகுண்டு சம்பவங்கள் நம் நெஞ்சை பிழிவதாக உள்ளன. இந்த நாசகார செயல்களில் ஈடுபட்டவர் நிச்சயமாக மனித குல விரோதிகள். கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உளவுத்துறை தகவல்களின் படி மூன்று பேர் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மூவரும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என குறிப்பிட வேண்டியதில்லை, கருணாநிதி ஆட்சியில். அதில் திருநெல்வேலியைச் சார்ந்த முன்னாள் த.தஜ சகா ஒருவரும் அடக்கம்.
மேலும், முஸ்லிம்கள் அதிகம் வசித்த, வசிக்கும், ஆரம்பகாலத்தில் திமுக வளர்ந்த இடமும் தமிழக முஸ்லிம்களின் மானமும் மருவாதையையும் கட்டிக்காப்பாத்துற முப்பெரும் இஸ்லாமிய அமைப்புகளான முஸ்லிம் லீக், தமுமுக, ததஜ போன்ற இயக்கங்களின் தலைமை அலுவலகங்கள் வீற்றிருக்கி இடமும், சிங்காரச்சென்னையின் அசிங்கமான தொகுதிக்கு சொந்தக்காரரான இனமான பேராசிரியரின் மன்னடியில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நிற்க -2.
* நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிற விலைவாசி உயர்வுகளும் சாதாரண ஏழை எளிய மக்களை சொல்லெனா துயரத்தில் ஆழ்த்திக்கொண்டிருப்பதையும், வருங்கால இந்தியாவில் ஈரான் வழி கேஸ் பெறுவதை தடுக்கச்செய்யும் அமெரிக்க சதிக்கு கைக்கூலி பெற்றுக்கொண்ட மத்திய காங்கிரஸ் அரசின் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 600 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தீவிர எதிர்கட்சியான பாஜக, சிவசேனா போன்ற கட்சிகளைக் கூட வாங்க முடிந்திருக்கிறது.
* அமெரிக்க அனுஆயுத ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் ஏற்பட்டிருக்கிற எதிர்ப்பை குறைப்பதற்கு, மறைப்பதற்கு அமெரிக்காவின் அடிவருடிகளைக்கொண்டு அஹமதாபாத், பெங்கலூரில் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது.
* சுதந்திரதின விழாக்களில் சதித்திட்டம் தீட்டிய முஸ்லிம்கள் கைது என்கிற படலம் எல்லாவருடங்களும் காணலாம். இதன் பின்னனியில் முஸ்லிம்கள் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டிருந்ததையும் முஸ்லிம்களுக்கு இந்திய சுதந்திரம், இந்தியாவின் இறையாண்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது. இப்போது நிகழ்ந்திருக்கிற சம்பவத்தை இதற்கு ஒப்பிடலாம்.
* பாஜக ஆளும் மாநிலங்களாக கர்நாடகாவும், குஜராத்தும் இருந்துவருகின்றன. தற்போது நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்புகள் இங்குதான் நடந்தன. இதில் அங்கு ஆளும் பாஜக அரசின் ஒத்துழைப்புடனேயே நிகழ்த்தபட்டிருப்பதாக வலைப்பதிவுகளில் கருத்துக்கள் பறிமாறப்படுகின்றன.
எது எப்படியாகினும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடும் சம்பவமாக அமைதிப்பூங்காவான தமிழகத்தில் கருணாநிதியின் தயவில் காவல்துறை தமிழக முஸ்லிம் இளைஞர்களை குறிவைப்பது கண்டனத்திற்குறியது.
பத்திரிக்கை மலங்கள்:
திருநெல்வேலியில் கைது செய்யபட்ட அப்துல் கபூர் அவர் வீட்டிற்கருகில் இருக்கும் எலக்ட்ரீசியன் ஒருவரிடம் வயரை கோர்ப்பது பற்றி தெரிந்துகொண்டாராம். (இனி எலக்ட்ரீசியன் பக்கம் முஸ்லிம்கள் நெருங்க வேண்டாம்) ஆனால் இவர் தான் டைம்பாம் வைப்பதில் கில்லாடியாம்.
தீவிரவாதிகள் குறிவைத்த 11 இடங்கள்
1. சென்னை சென்ட்ரல் நிலையம்
2. சென்னை எழும்பூர் நிலையம்
3. சென்னை மவுண்ட் ரோடு
4. நெல்லை கலக்டர் அலுவலகம்
5. நெல்லையப்பர் கோவில்
6. நெல்லை சந்திப்பு நிலையம்
7. மதுரை மீனாட்சி கோயில்
8. மதுரை ரயில் நிலையம்
9. ௵ரங்கம் கோயில்
10. திருச்சி, கோவை, நெல்லை ரயில் நிலையங்கள்

(தமிழகத்தில் தீவிரவாதிகள் விடுபட்ட இடங்கள் பற்றி மேலும் தகவலறிய மாலைமலர் அலுவலகத்தில் சிறப்பு தொலைபேசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம், தொலைபேசி இணைப்பு கிடைக்காதவர்கள், நிர்வாக ஆசிரியர்கள் வேறு 'லிஸ்ட்' கள் தயார் செய்வதில் பிஸியாக இருக்கலாம், அதனால் பொறுத்துக்கொள்ளவும்.
http://maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=279607)
எப்பொழுதும் போல் மலத்தை கக்கும் செயல்களில் தமிழ் செய்தித்தாள் தினமலம் நாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.
http://dinamalar.com/Topnewsdetail.asp?News_id=353&cls=மூன்று பேட்டரிகளுடன் தமிழ்நாடு ஸ்காட்லாந்து இணையான போலீஸ் சிறுவர்களை மிரட்டி வாங்கிய விளையாட்டு சாமான்களிலிருந்து உருவிய வயர்களுடன் அப்துல் கபூர் நிர்பதாக தினமலம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் வேடிக்கை தெரியுமா? BACK என்கிற குறிச்சொல்லுடன் ஒரு குறுஞ்செய்தி SMS சென்னையில் பரவியதாகவும் அது தொடர்பாக போலீஸ் எச்சரிக்கை விடுத்ததாக தினத்தந்தியிலும் அதே செய்தியை தினமலம் பத்திரிக்கை திரித்து வெளியிட்டிருப்பதும். இது தினமலம் மீதான பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தினமலம் நிரூபரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.
1. தினத்தந்தி: தீவிரவாதிகளின் அடுத்தகுறி என்று மிரட்டல் சென்னையில் பரவிய `எஸ்.எம்.எஸ்.' பீதி போலீசார் எச்சரிக்கை2. மாலைமலர்:உளவுத்துறை பலவீனம்: இதுவரை துப்பு துலங்காத 16 குண்டுவெடிப்புகள்3. http://maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=2796074. http://dinamalar.com/Topnewsdetail.asp?News_id=353&cls=பத்திரிக்கை தர்மம் காக்க எழுத்தாணியை (பேனா) கையிலெடுப்போம்.

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில்,
தானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட வெடிமருந்துகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் இந்துத் தீவிரவாதிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
புதிய மும்பையின் வாஷி பகுதியில் உள்ள விஷ்ணு தாஸ் பாவே அரங்கத்திலும் தாணே பகுதியில் உள்ள கட்காரி ரங்கயாதன் அரங்கத்திலும் மிகப்பெரிய உயிர்சேதத்தை விளைவிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்ட நால்வரை மஹாராஷ்டிரக் காவல் துறைக் கைது செய்துள்ளது.
அவர்கள் பெயர்கள் பின்வருமாறு:
1. மங்கேஷ் தின்கர் நிகம்
2. ரமேஷ் ஹனுமன்த் கட்கரி
3. சந்தோஷ் ஆங்ரே மற்றும்
4. விக்ரம் பாவே
கைது செய்யப்பட்ட இந்த நால்வரும் Janjagruti Samiti மற்றும் Sanatan Sanstha ஆகிய ஹிந்துத்துவாக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
read more...ராய்காட் மாவட்டத்திலுள்ள வார்சாய் கிராமத்தில் உள்ள விக்ரம் பாவே மற்றும் மங்கேஷ் தின்கர் நிகம் ஆகியோரின் வீட்டிலும் விளைநிலத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அதில் துப்பாக்கிகளும், 92 குண்டுகளும், 20 டெட்டோனேட்டர் குண்டுகளும், 19 ஜெலட்டின் குச்சிகளும், பெரும் அழிவை ஏற்படுத்தவல்ல மிக அதிக அளவிலான அமோனியம் நைட்ரேட் தூளும் கைப்பற்றப்பட்டன.
இது தவிர டைம் பாம் மற்றும் ரிமோட் கண்ரோலில் வெடிக்கச் செய்யும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைமர்களும் வோல்ட்டேஜ் மீட்டர்களும் ரேடியோ சர்க்கியூட் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன.
பயங்கரவாதத் தடுப்புப் படையினரின் இந்தத் திடீர் சோதனையைப் பற்றி எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு வெடிமருந்துகளை அவசரமாக வெடிக்க முயன்ற ஹரி பாவ் தேவ்கர் என்பவனையும் காவல்துறை கைது செய்தது.
இதில் மங்கேஷ் என்பவன், கடுமையான விசாரணைக்குப் பிறகே பெரும் அளவிலான வெடிமருந்துகளை சட்டாரா மாநிலத்தில் மறைத்து வைத்துள்ளதை ஒப்புக் கொண்டதாகக் காவல் துறை அறிவித்துள்ளது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் விரைந்த காவல் துறை, அவன் கொடுத்தத் தகவல்படி, வெடிகுண்டுகள் செய்யப் பயன் படுத்தும் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நடக்கவிருந்த இன்னொரு மிகப் பெரும் சமூக அழிவு தடுக்கப்பட்டுள்ளது.
தானே நகரத்தின் கட்காரி ரங்கயாதன் அரங்கத்தில் இவர்கள் நிகழ்த்திய கொடூர வெடிகுண்டு சம்பவத்தின் மூலம் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அதில் இவர்கள் டெட்டோனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைம் பாம் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
புதிய மும்பையிலுள்ள விஷ்ணு தாஸ் பாவே தியேட்டரில் இவர்கள் நிகழ்த்த இருந்த மிகப் பெரும் உயிர்ச்சேதம் இறுதி நேரத்தில் கிடைத்த தகவல்கள் மூலமாக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே தமிழகத்தில் தென்காசியில் ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் முஸ்லீம்களின் மீது பழியைப்போட்டு மீண்டும் ஒரு கலவரத்திற்கு வித்திடலாம் என்ற நோக்கத்துடம் அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களே குண்டு வைத்துவிட்டு நேர்மையான காவல் துறை அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கையால் கைது செய்யப்பட்டார்கள்.
சாதாரனமாக எங்காவது குண்டு வெடித்துவிட்டால் அலரியடித்துகொண்டு முஸ்லீம்களின் மீது பழிபோடும் பத்திரிக்கைகள் சமீபகாலமாக இது போண்ற பயங்கரவாத செயல்களுக்காக ஹிந்துத்வா பயங்கரவாதிகள் தொடர்ந்து கைது செய்யப்படும் போது மட்டும் வாய்மூடி மௌனமாக இருப்பது தான் ஏன் என்று புரியவில்லை.
எனவே, இது போன்ற உன்மைகளை வெளிக்கொனரும் விதமாக நாம் அனைவரும் பத்திரிக்கை மற்றும் மீடியாக்களில் கவனம் செலுத்த முன்வர வேண்டும். நாம் அநியாயத்திற்கு ஆதரவாக அல்ல உன்மைகளுக்கு ஆதரவாக எழுதுவோம். முஸ்லீம் தவறிழைத்திருந்தாலும் முஸ்லீம் அல்லாதவன் தவறிழைத்திருந்தாலும் எது சத்தியமோ அதை எடுத்துரைப்போம்.
எழுதுகோல் ஆயுதமேந்துவோம். நம் அறிவாயுதத்தை பயன் படுத்துவோம் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுவோம்:
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 5:8
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்¢ எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். - அல்குர்ஆன் 4:135
collapse...