இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிிப்புணர்வுடன் குர்ஆன், ஹதீது வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் சகோதரிகளே உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை சற்று சிந்தித்துப்பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைந்துள்ளதா? அன்னை பாத்திமா(ரலி) வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? நபி(ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுகின்றாயா? மறுமையை நினைத்து நரகத்தை நினைத்து வருந்தினாயா? ஏதோ! இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்ற இருமாப்பில் இன்பம் கண்டுக் கொண்டு இருக்கிறாய்.
உன் வாழ்க்கையை சற்றே குர்ஆன், ஹதீதுடன் ஒப்பிடு. மார்க்கத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டு. மார்க்கக் கல்வி கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கடமை என்று அல்லாஹ்வும் ரசூலும்(ஸல்) கூறியுள்ளதைப் பார். குர்ஆன், ஹதீதை அறிந்துகொண்டால் அனாச்சாரங்களை அழிக்க நீயே முன்வருவாய்.
"(நபியே) அந்நாளில் பலூட்டிக் கொண்டிருந்த ஒவ்வொருத் தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பஸ்த்திரியின் கர்ப்பமும் சிதைந்து விடுவதை நீர் காண்பீர். மனிதர்களை சித்தமிழந்தவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (சித்தம் இழக்க காரணம்) போதையினால் அல்ல, அல்லாஹ்வுடைய வேதனையானது மிகவும் கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு) அவர்கள் சித்தமிழந்து விடுவார்கள். (அல்குர்ஆன் 22:2) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் சகோதரியே; சிந்தித்துப்பார்.
"நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அந்த இரண்டையும் கடைபிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறவே மாட்டீர்கள் ஒன்று அல்குர்ஆன் இரண்டு என்னுடைய சுன்னத்தான வழிமுறை" (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்:முஅத்தா
என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்க நீ யாரைப் பின்பற்றுகிறாய்? யாருடைய பாதையை பின்பற்றி உன் வாழ்க்கைத் தேய்கிறது. பண்டிதர்கள், தலைவர்கள் என்று தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூறுவதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் மார்க்கம் என்று எடுத்து நடக்கிறாய்.
இறைவன் கூறுவதைப்பார், ஈமன் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அனேகர் மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகின்றார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களை தடுக்கின்றார்கள். (அல்குர்ஆன் 9:34)
பெரியவர்கள் சொல்வதெல்லாம் சிந்தித்து விளங்காமல் மார்க்கம் என்று எண்ணினாயே? இறைமறை கூறுவதைப்பார். மேலும் (17:27, 24:51, 28:50, 20:124) ஆகிய வசனங்களையும் உற்றுநோக்கு. உன் நிலையையும் நீ எண்ணிப்பார்.
உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவ்லியாக்களின் கப்ரை நோக்கி ஓடுகின்றாய், யார் யாருக்கோ நேர்ச்சை செய்கின்றாய், முரீது கொடுக்கும் முல்லாக்களின் காலில் விழுந்து தன்மானம் இழந்து நிற்கின்றாய், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு பாடுபட்டார்களோ அத்தனை மூட நம்பிக்கைகளையும் குத்தகை எடுத்துக்கொண்டு கும்மாளம் போடுகின்றாய். இதுதான் உன் இஸ்லாத்தின் பண்பா? இதுதான் நீ இஸ்லாத்தின் மீது வைத்துள்ள அன்பா?
அல்லாஹ்வையன்றி நீ அழைப்பவர்கள் அழிந்துவிடுபவர்கள் என்று நபி(ஸல்) அறிவுரை பகர்ந்தார்கள். ஆனால் நீ செய்வது என்ன? உன் தேவை நிறைவேற "யாமுஹய்யத்தீன்" என்று அழைக்கின்றாய். என்றோ மெளத்தாகி விட்டவர் உன் அழைப்பை கேட்கிறார் என்றால் விந்தையாக உள்ளது. உனது கூற்று நியாயமானதா? குர்ஆனுடம் ஒப்பிடு.
நபியே! கப்ருகளில் உள்ளவர்களைச் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. (35:22) உன் கூற்று சரியா? அல்லது குர்ஆனின் கூற்று சரியா? சிந்தித்துபார். இணைவைக்கும் காரியத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ்வின் தகுதிகளை அவனது அடிமைகளுக்கு தந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே.
எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்கள் செய்கின்றார்களோ அவர்கள் "பிர்தவ்ஸ்" என்னும் சுவர்க்கத்தில் உபசரிக்கப்படுவார்கள் அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (18:107,108)
நீ இறைவன்மீது வைத்த அன்பிற்காக இறைவன் உனக்கு சுவர்க்கத்தை நிரந்தரமாக தருவதாக வாக்களிக்கின்றான் இதைவிட மாபெரும் பாக்கியம் உனக்கு என்னவேண்டும்.
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என்னுடைய அடியார்களை தம் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளலம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக அவர்களுக்கு நாம் நரகத்தையே தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 18:102)
அல்லாஹ்வையன்றி அவனது அடியாளர்களை அழைப்பதை குறித்து இறைவன் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கிறான் என்பதை ஆராய்ந்துபார்.
இவ்வுலக வாழ்க்கை உன்னை வீன் வழியில் அழைத்து சென்றுவிடாமல் எச்சரிக்கையாக இரு. உனக்கு ஏதாவது ஒரு தீங்கு நேர்ந்தால் உடனே மண்ணறையை நோக்கி ஓடுகிறாய். உன் ஓட்டத்தின் முடிவு உன்னையே நரகிற்கு அனுப்பும்; அதற்கு முன் உஷாராகிவிடு உன் செயல்களை திருத்திக்கொள். கப்ரு மோகம் கொண்டு அலையும் உன் நிலையை உடன் மாற்றிக்கொள்.
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சாபம் உனக்கு தேவையா? யோசித்து உன்செயலைத் திருத்திக்கொள். முரீது விற்பனை முல்லாக்கள் உன்னை முடக்க முற்படுவார்கள். முடங்கிவிடாமல் தவ்ஹீதின் பாதையில் முன்னேறிச் செல்.
அல்லாஹ்வின் குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளையும் கடைப்பிடித்துச் செல். அதுவே உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுந்தர வழியாகும்.
கு.நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை
சகோதரர்
abu riyaz: இந்த அரட்டை அரங்கத்தில் பதிந்த முக்கியமான கருத்துக்களை இதை அனைவரும் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தொகுத்து வழங்குகிறேன்.
கண்ணியத்திற்குரிய அதிரை XPRESS வாசகர்கள் அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்.
நமதூரில் நடக்கும் இன்னும் பல அனாச்சாரங்களை பற்றி இங்கு எழுத விரும்புகிறேன்
நிரந்தர நரகத்திற்கு செல்ல கூடிய இரண்டு காரியங்கள் தர்கா வழிபாடுகள், தரீகாக்கள்:- இவைகளை பற்றி விரிவாக சொல்ல வேண்டியதில்லை இதை படிக்கும் அனைவர்களுக்கும் மிக நன்றாக தெரியும் அது எவ்வளவு பெரிய ஷிர்க் அனாசாரம் கேடு கெட்டது என்று ஆனால் நம்மளால் ஆலிம்கள் நிறைந்த பள்ளிவாசல்கள் நிறைந்த நமதூரில் இவைகளை ஒழிக்க முடியவில்லை.
இரண்டாவது வட்டி தினம் தினம் நமதூரில் இருக்கக்கூடிய அனைத்து வங்கிகளிலும் பெண்கள் அதிகமாக நகைகளை வட்டிக்கு வைத்து நிரந்தர நரகத்திற்கு செல்ல கூடிய காரியங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள், இதை பற்றி எந்த ஒரு பள்ளிவாசலிலும் யாரும் பயான் பண்ணுவது போன்று எனக்கு தெரியவில்லை.
அடுத்து வரதட்சனை:- எந்த ஒரு ஊரிலும் இல்லாத அளவுக்கு வரதட்சனை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது, அனைத்து மார்க்கங்களிலும் ஏன் அரசாங்கம் கூட இதை கொடுமை சட்டப்படி குற்றம் என்று சொல்கிறது, ஒரு சில ஊர்களில் அந்த ஊரே கட்டுப்பாடு போட்டு யாரும் வரதட்சனை வாங்ககூடாது அப்படி வாங்கினால் அவர்களை ஊரை விட்டு தள்ளி வைத்து விடுவோம் என்று சட்டம் போட்டு வைத்து உள்ளார்கள், ஆனால் நமதூரில் மிக நல்ல விலைக்கு ஆண்களை?!! மாடுகளை போன்று விற்று விடுகிறார்கள் அந்த மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து அல்லாஹ்விடைய பள்ளிவாசலில் வைத்தே கல்யாணம் செய்து வைக்கிறார்கள் கல்யாணம் செய்து வைப்பது யார்? ஆலிம்கள் (நிச்சயமாக மறுக்க முடியாது)ஹஜ்ரத் மார்கள், ஊர் பெரியவர்கள்?!!! இவர்கள் எல்லாம் மறுமையில் இந்த உலகத்தின் 50 ஆயிரம் வருடங்களுக்கு சமமான அந்த 1 நாளின் மிக பயங்கரமான நேரத்தில் வல்ல இறைவன் முன்பு என்ன பதில் சொல்ல போகின்றார்கள்.
ஒரு திருட்டு பயலுக்கு மாலை மரியாதை செய்து அவனை அழைத்து சென்று பள்ளிவாசலில் வைத்து மரியாதை செய்வீர்களா? இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? அடுத்து கல்யாணம் என்ற பெயரில் நடக்க கூடிய ஆடம்பரங்கள் தேவையா? ஒரு பந்தலுக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா? ஒரு விருந்துக்கு இவ்வளவு ஆடம்பரம் தேவையா? எந்த ஒரு கல்யாணம் எளிமையாக ஆடம்பரம் இல்லாமல் நடக்கிறதோ அந்த கலயாணத்திற்கு தான் அல்லாஹ் ரஹ்மத், பறக்கத் செய்கிறான் என்று நமது உயிரிலும் மேலான நபிகள் ஸல் அவர்கள் சொன்னார்களே அந்த ஹதீத் நமதூரில் இருக்கக்கூடிய ஆலிம்களுக்கும் ஹஜ்ரத்மார்களுக்கும் தெரியாமல் போய்விட்டதா? அவர்கள் யாருக்கு பயப்படுகின்றார்கள்? அல்லாஹ்விர்க்கா? அல்லது ஊரில் இருக்கக்கூடிய பெரிய மனிதர்களுக்கா?!!!!
அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி இன்னும் பல நாடுகளில் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய நமது சகோதரர்கள், அதில் ஒரு சிலர் காசு திமிரில் வரதட்சனை வேண்டாம் என்று சொன்னால் கூட வழிய சென்று
நான் என் மகளுக்கு பல லட்சம் வரதட்சனை தருகிறேன் BLANK CHEQUE தருகிறேன் என்று மாப்பிள்ளையை விலை பேசுகின்றார்கள், இவர்கள் திமிரை யார் அடக்குவது நிச்சயமாக அல்லாஹ் அடக்குவான் (ஆமீன்), அதிலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணை பெற்றவர்கள் மாப்பிளை கேட்டுக்கொண்டு இருக்கும்போது இந்த திமிர் பிடித்த மிருகங்கள் முந்திசென்று அதிகம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடுகின்றார்கள், இந்த செயல் மீன் மார்கடிலும் நடக்கிறது எந்த ஒரு பொருளையும் ஒருவன் விலை பேசிக்கொண்டு இருக்கும்போது வேறு ஒருவன் முந்திசென்று அதை விலை பேசினால் அவன் என்னை சேர்ந்தவன் இல்லை என்று நபிகள் ஸல் அவர்கள் சொல்லி உள்ளார்களே இதற்க்கு அவர்கள் என்ன
பதில் சொல்ல போகின்றார்கள்?
கேபிள் டிவி:- இதனுடைய தீமைகளை பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, ஒரு முஸ்லீமின் 90% நன்மைகள், கடமைகள் செய்ய தடையாக இருப்பது இந்த கேபிள் டிவி தான், அதே போன்று 90% தீமைகள் செய்ய தூண்டுகோலாக
இருப்பது இந்த கேபிள் டிவி தான், குடும்ப உறுப்பினர்கள் அனைவர்களும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தது போய் எல்லோரும் டிவி முன்னால் உட்க்கார்ந்து சினிமாக்கள், சினிமா பாட்டுக்கள், நாடகங்கள், சினிமா நடிகை நடிகன் நடத்தக்கூடிய கேலி கூத்துக்கள், சாமி வழிபாடு நிகழ்ச்சிகள் அதை நாம் ஆதரிக்கும் விதமாக ரசித்து பார்த்துக்கொண்டு இருப்பது, இன்னும் பல கேடுகள். வீடுகளில் நேரத்திற்கு தொழகுவது, குரான் ஓதுவது, நல்ல முறையில் கணவனையும் குழந்தைகளையும் கவனிப்பது இப்படிப்பட்ட நல்ல செயல்கள் குறைந்து விட்டது.
வீடுகளில் கேபிள் டிவி இருப்பதில் தவறு இல்லை என்று அதை வைத்து கொடுத்து இருக்கும் ஆண்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்கிறேன், நிர்வாணத்திற்கு அடுத்தபடியாக பெண்களுக்கு அதிகபச்ச செக்ஸ் எது? ஒரு அந்நிய ஆணை ஜட்டியுடன் பார்ப்பதுதான், உங்கள் வீட்டு கேபிள் டிவி க்களில் சினிமாவில், நாடகங்களில், விளம்பரங்களில் அதிலும் ஹீரோ போன்று இருக்கக்கூடிய அந்நிய ஆண்கள் வருகின்றார்களா? இல்லையா? ஜட்டியுடன் ஒரு ஆண் இன்னொரு ஆணை பார்த்தாலே ஒரு மாதிரியாக இருக்கும், இதற்க்கு என்ன பதில் சொல்ல போகின்றீர்கள்? மானம் ரோசம் கேட்டு அதெல்லாம் பரவாஇல்லை மானம் ரோசம் கேட்டு அதெல்லாம் பரவாஇல்லை என்று பதில் சொல்ல போகின்றீர்களா?
நமதூரில் சமீப காலமாக நமதூர் பெண்கள் அடுத்தவன் கூட ஓடி போவதும், நமதூரிலயே விபசாரம் அதிகம் ஆகிக்கொண்டு வருவதும் எதனால்? இந்த வரதட்சனையும் , கேபிள் டிவி யும்தான் என்பது புரியவில்லையா?
கடைசியாக நமதூர் மக்களை யார் கன்ட்ரோல் பண்ணுவது, நமதூரை பொறுத்தவரையில் தான்தோன்றிதனமான ஊர் என்று தான் சொல்ல வேண்டும் காரணம் அதிரையில் யார் எவன் எப்படி வேண்டும் என்றாலும் நடக்கலாம் யாரும் எவனையும்
தட்டி கேட்க்க முடியாது, நாட்டாமை கிடையாது, ஜமாஅத் கிடையாது, சமீபத்தில் நமதூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்தேன் விபசாரத்தில் ஈடுபட்ட ஒருவனை அழைத்து ஒரு சபையில் வைத்து கேள்வி கேட்டபொழுது அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? ஆமா நான் விபசாரம் பண்ணினேன் யார் என்ன பண்ணுவிங்க பொம்புளை வர்றா நான் போறேன் இந்த சபையில் இருக்கக்கூடிய உங்களின் பொண்டாட்டி வந்தால் கூட நான் போவேன் என்று சொல்லி உள்ளான் அந்த சபையில் ஒரு ஆண்பிளை கூட இருக்கவில்லை அவனை தூக்கி போட்டு மிதிப்பதற்கு.
எல்லோர்க்கும் அல்லாஹ் நல்வழி காட்டுவானாக (ஆமீன்)
வஸ்ஸலாம்
ABU RIYAZ
ஷஃபான் மாதம் 15ஆம் இரவு நம்மவர்களால் மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்பட்டு இரவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அறிவோம். இந்த இரவை கொண்டாடுவதில் தமிழக மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் காலங்காலமாக நன்மை என்ற பெயரில் சில சடங்குகளையும் நடத்தி வருகின்றனர்.
முன்னோர்கள்களில் சிலர் இதனை உருவாக்கினர் என்பதைத் தவிர குர்ஆனிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ இவற்றுக்கு ஆதாரமுண்டா என்று மார்க்கம் கற்றவர்கள்கூட ஆராயவில்லை. அதற்காக முயற்சிகளை மேற்கொள்வதுமில்லை. படித்தவர்களின் நிலைமையே இதுவானால் படிக்காதவர்கள் எப்படி உண்மையை உணரமுடியும்?
மூன்று யாசீன்
இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப்பின் மூன்று 'யாசீன்' ஓதி துன்பம் துயரங்கள் நீங்கவும் நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் துஆச்செய்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. இந்த இரவில்தான் 'தக்தீர்' எனும் விதியை நிர்ணயிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையிலேயே மூன்று யாசீன் ஓதி துஆசெய்யும் வழக்கம் இருந்து வருகின்றது.
ஷஃபான்15ஆம் இரவில் குறிப்பிட்ட சில அமல்களைச் செய்வதற்கு ஆதாரமுண்டா என்றால் திருமறைக் குர்ஆனிலோ, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திலோ, அருமை ஷஹாபாக்களின் செயல்களிலோ, தாபீயீன்கள், நான்கு இமாம்கள் வழிமுறைகளிலோ இதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இப்படிச் செய்வது நன்மையானது என்றால், நம்மைவிட நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் இதனைச் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் தோன்றிய சிலர்தான் இதனை உருவாக்கினர். இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் இந்த இரவில் 100 ரக்அத்துக்கள் தொழவேண்டும் என்று கூறியிருப்பதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது.
நன்மைகள் தானே
தொழுவது யாசீன் ஓதுவது துஆ செய்வது போன்றவை நன்மைகள்தானே, அவைகளைச் செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்வது எப்படி? என்று, நம்மில் பெரும்பான்மையினர் பலரும் நினைக்கலாம். சற்று நிதானமாக படித்து சிந்தித்து சரியாக விளங்கிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர் கூறுகிறார்கள்
"எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அலி (ரழி) அபூதாவூது, நஸயீ)
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி) ஜாபிர் (ரழி) புகாரீ, முஸ்லிம், நஸயீ)
ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் இன்றைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது மார்க்கமாக இருந்திருப்பின் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டித் தந்திருப்பார்கள். அவ்வாறு அவர்களால் காட்டித்தரப்படாத ஒரு வழிமுறையை முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விஷேச இரவு என்று கருதிக்கொண்டு செய்துவருவது அவர்களின் தூதுத்துவம் முழுமைஅடையவில்லை என்று சொன்னது போல் ஆகிவிடும் என்ற அபாயத்தை உணரவேண்டும். எனவே இது போன்ற போலி வணக்கங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் தூதரை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம்.
இந்த பராஅத் இரவு சம்பந்தமாக சில ஹதீஸ்கள் இருப்பதாக சிலர் விளக்கமளிக்கின்றனர். அந்த ஹதீஸ்கள் சரியா என்பதை சற்று பார்ப்போம்.
ஹதீஸ்களில் அறிவிப்பின் நிலை
(1)ஸிஹாஹ் ஸித்தாவில் ஒன்றாகிய திர்மிதியில் "அல்லாஹ் பராஅத் இரவில் முதல் வானத்தில் இறங்கி அடியார்களுடைய பாவங்களை கலபு கோத்திரத்தாரின் ஆடுகளுக்கு இருக்கும் அடர்ந்த ரோமங்களின் அளவு மன்னிக்கிறான் என்று நபி அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்.
திர்மிதியில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸை அறிவிக்கின்ற திர்மிதீ இமாம் அவர்கள், இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறியதாக திர்மிதி இமாம் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் யஹ்யா இப்னு கஸீர் என்பவர் உர்வா என்பவரிடம் இந்த ஹதீஸை செவியுற்றதாக சொல்கிறார். ஆனால் உண்மையில் யஹ்யா என்பவர் உர்வாவிடம் கேட்டதில்லை என்று இமாம் புகாரி அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஹஜ்ஜாஜ் என்பவர் யஹ்யா இப்னு கஸீரிடம் கேட்டதாக சொல்கிறார். ஹஜ்ஜாஜ் என்பவர் யஹ்யா இப்னு கஸீரிடம் செவியுற்றதில்லை என்று இமாம் புகாரி (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்கள். எனவே திர்மிதியில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் பலவீனமானது என்பதை இமாம் திர்மிதி அவர்களே புகாரி இமாம் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
(2)இப்னுமாஜாவில் "ஷஃபானில் 15ஆம் இரவில் பகல் பொழுதில் நோன்பு வையுங்கள். இரவில் நின்று வணங்குங்கள் என்று நபி அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்னுமாஜாவில் இடம்பெற்றுள்ள ஹதீஸும் சரியானது அல்ல. இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள இப்னு அபீசபுரா என்பவர் இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்களும், இமாம் இப்னுஅதி அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். ஏனைய ஹதீஸ் கலா வல்லுனர்கள் இதனை பலவீனமாக்கியுள்ளனர் என்று இப்னுமாஜாவின் ஓரக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(3)ஐந்து இரவுகளில் கேட்கப்படும் பிரார்த்தனை மறுக்கப்படுவதில்லை. ரஜப் மாதத்தின் முதலாம் இரவு, ஷஃபான் மாதத்தின் 15ஆம் இரவு, ஜும்ஆவின் இரவு, இரு பெருநாட்களின் இரவு என்று நபி அவர்கள் கூறினார்கள்.
இதை நபி அவர்கள் அருளியதாக அபூ உமாமா (ரலி) அவர்களின் மூலம் அபூ ஸயீத் பின்தார் என்பவாின் வாயிலாக இப்னு அஸாகீர் அவர்கள் தமது தரீகுத் திமஷ்க் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிப்பாளர் தொடாில் இடம் பெற்றுள்ள அபூ ஸஈத் பின்தார் என்பவரும் இப்றாஹீம் பின் அபீ யஹ்யா என்பவரும் பொய்யர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இவ்வறிவிப்பு முஸ்னத் பிர்தெளஸ், பைஹகீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது. இதன் அனைத்துத் தொடாிலும் கோளாறுகள் காணப்படுவதாக ஹதீஸ்கலை அறிஞரான ஷாபிஈ மத்ஹபின் இமாம்களில் ஒருவரான ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் விமர்சித்துள்ளார்கள். ஆகவே, இவ்வறிவிப்பு மறுக்கப்படக் கூடியதாகும்.
ஷஃபான் மாதத்தின் 15ஆம் நாள் இரவு வந்தால் அவ்விரவில் நீங்கள் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் (அல்ஹதீஸ்).
இப்னு அபீ பஸ்ரா என்பவர் இதன் அறிவிப்பாளர் வாிசையில் இடம் பெறுவதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இமாம்களான அஹ்மத் (ரஹ்), இப்னு முஈன் (ரஹ்) ஆகியோர் இந்த இப்னு அபீ பஸ்ரா என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர் எனக் கூறியுள்ளார்கள். மேலும் பராஅத் இரவுத் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ் பாத்திலானது என இமாம் ஹாபிழ் அல் இராக்கீ(ரஹ்) தமது அல்மெளழுஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள். ரஜப் மாதத்தில் மிஃராஜுக்கென உருவாக்கப்பட்ட தொழுகையும், ஷஃபானின் பராஅத் தொழுகையும் இரு பித்அத்களாகும் என இமாம் நவவி (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
நிச்சயமாக நாம் அ(ல் குர்ஆன் வேதத்)தை பாக்கிய மிக்க இரவில் அருளினோம் (44:02) என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்திலுள்ள 'லைலத்துல் முபாரகா" என்பது ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவான பராஅத் இரவு தான் எனச் சிலர் கூறுகின்றனர். அவர்களின் இந்த கூற்றுக்கு ஆதாரம் ஏதுமில்லை.
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (97:01) என்று அல்லாஹ் கூறுகிறான். அதுபோலவே ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில்தான் அல்குர்ஆன் அருளப்பட்டது (2:185) என்றும் கூறுகிறான். மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து குர்ஆன் லைலத்துல் கத்ாில் தான் அருளப்பட்டது என்றும் அது ரமளானில்தான் இருக்கிறது என்றும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அப்படியானால் 'லைலத்துன் முபாரகா' என்பது லைலத்துல் கத்ர் (மகத்தான இரவு) என்பதன் இன்னொரு பெயர்தான் என்பது புலனாகிறது.
அதிகமான நோன்பு நோற்ற மாதம்
நான் நபி அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)
ஷவ்வால் ஆறு நோன்வுகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)
வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)
ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்)
இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சரியான சான்றுகளும் உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும். எனவே, ஷஃபானின் 15ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி, நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று இறையன்பைப் பெறுவோமாக!