நடுத்தெருவை சார்ந்த மரியம்மா சாகுல் ஹமீத் அவர்களின் மனைவியும். சாதிக் தவ்பிக் இவர்களின் தாயரும் அஹமது ஹாஜா அவர்களின் மாமியாருமான இன்று மதியம் 2௨மணியளவில் காலமாகிவிட்டார்கள் இன்னா... அன்னாரின் ஜனாசா அவர்களது நடுத்தெரு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.( ஜனஷாவின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் ) இவர் சமிப காலமாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதியுற்றார். இவர் நல்ல பல சமுதாயக்காரியங்களில் ஈடுபட்டும் ஏழைகுமர் திருமணத்திற்க்கும் உதவி செய்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அல்லாஹ் இவருக்கு ஆகிரத்து நல் வாழ்க்கைக்கு துஆசெய்ய வேண்டுகிறோம்.
மரணம்,அது எப்போதும்,எங்கும் வரும்.பிறக்கும்போதே இறைவனால் எழுதப்பட்டுவிட்டது.அதை மறந்து விட்டு மனிதன்,உலகில் தலை,கால் புரியாமல் நடக்கிறான்.சம்பாதிப்பது ஹலாலா ஹராமா என பார்ப்பது இல்லை.அவனுக்கும்,அவன் குடும்பத்திற்கும் சம்பாதிக்கும் அவன் இறுதியில் அதை கொண்டு செல்ல முடியுமா அந்த செல்வத்தை?
முன்கர் நக்கிர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்?ஹராமான பணம் அங்கு உதவுமா?அல்லது அதற்கும் சேர்த்து உதை விழுமா?மண் அறை தான் சுவர்க்கம் அல்லது நரகம் என தீர்மானிக்கும் முதல் படி.எனவே,நானும்,நீங்களும் சிந்திக்கவே இந்த படம்.