அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங், புனித ரமலான் தினத்தையொட்டி இன்றும், நாளையும் பசுமை நிறத்தில் ஒளிரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடம் என்ற பெயர் நியூயார்க் இரட்டை கோபுரத்திற்கு இருந்தது. ஆனால் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அந்தக் கட்டடம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து எம்பயர் ஸ்டேட் கட்டடம், மீண்டும் அமெரிக்காவின் உயரமான கட்டடம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.இந் நிலையில், நாளை உலகெங்கும் ரமலான் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி முஸ்லீம் சமுதாயத்தினரை கெளரவிக்கும் வகையில், எம்பயர் ஸ்டேட் கட்டடம் பசுமை நிறத்தில் ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் எம்பயர் ஸ்டேட் கட்டடம் பசுமை நிறத்தில் ஒளிரும்.ரமலானுக்காக எம்பயர் கலர் மாறுவது இது இரண்டாவது ஆண்டாகும்.
மேலும், பல்வேறு நாடுகளின் முக்கிய நிகழ்ச்சிகள், அமெரிக்காவின் முக்கிய தினங்கள், உலகளவிலான முக்கிய நிகழ்வுகளின்போது எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயர் கோபுர விளக்குகள் அதற்கேற்ற நிறத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.கடந்த ஆகஸ்ட் மாதம் மன்ஹாட்டனில், இந்தியா தின பரேட் நடந்தபோது, இந்தியாவின் தேசியக் கொடியைக் குறிக்கும் வகையில் மூவண்ணம் ஒளிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தம் 1454 அடி உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம் அலுவலக வளாகம் ஆகும். நூற்றுக்கணக்கான அலுவலகங்கள் இதில் உள்ளன. உலகின் மிகப் பெரிய அலுவலக வளாகம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
அதிரை எக்ஸ்பிரசின் அன்பான வாசக சகோதர, சகோதரிகளுக்கும் என் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் மற்றும் புனித ரமளான் வாழ்த்துக்களை நேரடியாக கூறமுடியாவிட்டாலும் உள்ளத்தில் உருவாகும் அந்த அன்பு கலந்த பரவசக் காற்றை இப்பாலைவன பூமியில் கரையச்செய்கின்றேன். என் இனிய (பழைய) வசந்தகால ரமளான் நினைவுகளிலிருந்து. நோன்பு 17ம் நாள் "பதுருப்படை" ரொட்டி, தேங்காய் மற்றும் திண்பண்டங்கள் சேகரிப்பிற்காக நம்மூரில் வீடுவீடாக படையெடுத்துச் சென்றதும்; அதில் வெற்றி வீரர்களாய் பொட்டி நிறைய திண்பண்டங்களை முஹல்லாப்பள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்ததும் நம் இனிய ஞாபகங்களிலிருந்து மறைந்து போகுமா? நோன்பு திறக்கும் சமயம், பள்ளிகளில் கஞ்சிக்குள் வாடா, சம்சாவை அமிழ்த்து வெகுநேரம் மீனுக்காக உற்று நோக்கி காத்திருக்கும் கொக்கு போல கஞ்சிக் கலையானையே பார்த்திருந்த/காத்திருந்த நினைவுகளை நம்மில் யார் தான் மறக்க முடியும்? நம் பள்ளிகளில் "நகரா" அடிக்க வாய்ப்புகள் கிடைத்து விட்டால் ஏதோ முழு வாழ்க்கையிலும் வெற்றி பெற்று விட்டதாக அப்படியொரு சந்தோசம்.... நோன்பு காலங்களில் பகல், இரவுக் காட்சிகளாக விளையாடி மகிழ்ந்த கண்டு விளையாட்டுகளும், தொட்டு விளையாட்டுக்களும், கிளித்தட்டு, கேரம் போர்டு விளையாட்டுக்களும் அடிக்கடி நினைவில் வந்து பரவச மூட்டிச் செல்கின்றன. நோன்பு திறக்கும் சமயம் வரை, நம்மூர்க்குளங்களில் கண் சிவக்க குளித்துக் கும்மாளமிடுவதால் காது, மூக்கு வழியே உடலில் தண்ணீர் சென்றால் நோன்பு முறிந்து விடும் என்பது கூட அறியாத பருவம் அது. சிறு வயதில் "தலை" நோன்பு பிடித்தால் மாலையிலே நம் உடலில் தங்க மாலைகள் அணிவிக்கப்பட்டு நம் உறவினர்களின் வீடுகளுக்கு பண வசூல் வேட்டைக்காக சென்றதெல்லாம் உங்களில் யாருக்கேனும் ஞாபகம் வருகிறதா? |
அன்று நம்முடன் விளையாடிக் களித்த நம் நண்பர்களில் எத்தனையோ பேர் இன்றில்லை (உலகில்) நம்முடன். அவர்கள் யாவரின் கப்ருகளும் இந்த புனித ரமளானின் பரக்கத் கொண்டு சொர்க்கத்தின் பூஞ்சோலையாக பிரகாசமளிக்கட்டுமாக. |
| இவ்வுலகில் நம்மை பல சூழ்நிலைகள் அடித்தாலும், உதைத்தாலும், விரட்டி அடித்தாலும், வாட்டி வதக்கினாலும், வறுத்தெடுத்தாலும் நிச்சயமாக நாம் இறுதியில் நம்மைப் படைத்தவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கிறோம். |
| |
நாம் விடிகாலையிலிருந்து அந்தி மாலைப்பொழுதுவரை உண்ணாமல், பருகாமல், பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறோம். எனவே நம்மைப் படைத்த இறைவனே நமக்கு நேரடியாக கூலி வழங்குவதாக குர்'ஆனிலே வாக்களித்துள்ளான். |
இந்த புனித ரமளானின் வணக்க வழிபாடுகளில் கேட்கப்படும் உங்களின் பிரத்யேக துவாக்களில் இந்த அன்பு சகோதரனையும் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் உங்களின் உறவினன்னாக கேட்டுக் கொள்கிறேன். பாலைவன பூமியில் வாழ்ந்தாலும்; உள்ளச் சோலைவனத்தின் தென்றலாய் உலாவரும் உங்களின் அன்பு நினைவுகளுடன். எம்.ஐ. நெய்னா முகம்மது சவுதியிருந்து. |
| |

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் புனிதமிகு ரமலான் மாதம் தொடங்கியிருக்கும் இன்று, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் முஸ்லீம்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொண்டிருக்கும் இந்த நல்ல வேலையில், பார்ப்பன வெறி பிடித்த தினமலர் நாளிதழ் மட்டும் தனது முஸ்லீம் விரோத போக்கை சற்றும் சளைக்காமல் மேற்கொண்டுள்ளது. பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் கூட பெயரளவுக்காவது இந்த ரமளான் மாதம் தொடங்கியதன் நிமித்தம் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்திருக்கும் சமயத்தில் தினமலர் மட்டும் தனது விஷமத்தனத்தை சில உள்நோக்கங்களுடன் மேற்கொண்டுள்ளது என்பது தான் மிகவும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று.
குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை ஊட்ட வேண்டும் என்ற ஒரு பாசிச எண்ணத்துடன் இந்த நேரத்தில் இந்த விஷமக் கார்ட்டூனை வெளியிட்டு தனது அரிப்பைத் தீர்த்துக்கொண்டுள்ளது.
இன்று வேலூரிலிருந்து வெளிவந்த தினமலர் நாளிதழின் இலவச பதிப்பான கம்ப்யூட்டர் மலரின் 12ம் பக்கத்தில், வேண்டும் என்றே கட்டுரைக்கும் தலைப்பிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல், உள்நோக்கத்துடன்
'சினிமா பார்க்க ஒரு வெப்சைட்' என்று தலைப்பிட்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒரு கார்ட்டூனையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஒரு முஸ்லீமின் தலைப்பாகையின் மேல் வெடிகுண்டின் திரி பற்ற ஆரம்பிப்து போல் உள்ள அந்த சர்ச்சைக்குரிய கார்ட்டூனை போட்டு தனது முஸ்லீம் விரோத சிந்தனையை இணம் காட்டியுள்ளது.
இப்பொழுது ஒரிசாவில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்வ வெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொலை வெறித்தாக்குதல்களை மறைத்து, அதை விட்டும் பொது மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்துடன் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டிருப்பதாக பல சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சண்டேன்னா ரெண்டு(வாட்டி)
ஊடகங்கள் தங்கள் கைவசம் இருக்கின்றது என்ற காரணத்திற்காக எதை வேண்டுமானாலும் எழுதி வெளியிடலாம் என்ற துரோக எண்ணத்துடன் களம் இறங்கி இருக்கும் தினமலர் நாளிதழுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம் என்பதை உணர வேண்டும். இனிமேலும் உண்டோம் உறங்கினோம் என்றில்லாமல் நம்மால் இயன்ற அளவு இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தவேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது முழுபலத்தையும் பிரயோகித்து இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தினால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை... என்பதை புரிந்து செயல்படுவோம்.