பிஸ்மில்லாஹ்..
அண்பார்ந்த சகோதரர்களே முத்லில் இதை சொடுக்கி பார்த்து விட்டு பிறகு நமது செய்திக்கு வாருங்கள்.
http://www.tamilanexpress.com/Investigate/investigate1.aspஇது நடந்தது வேறு எங்குமில்லை முஸ்லீம்கள் அதிக அதிகமாக வாழும் வேலுரிதான், மதரஸக்கள் நிறைந்த ஊர் மேல் விசாரம் இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளது.இப்பெண்ணுக்கு வயது ஒன்றும் அதிகம் இல்லை சுமார் 12 தான். காவல் துறை சொல்லுகிறது காதல் என்று, குடும்பத்தின்ரோ கடத்தல் என்கிறனர்முதலில் கதலுக்கு வருவோம், 12 வயதில் எந்த பெண்ணுக்காவது கதல் வருமா?. சினிமாவில் தான் அப்படி வரும் அப்படி பார்த்தால் இப்பெண் அதிகமாக சினிமா டி.வி பார்த்துயிருக்கவேண்டும் சினிமாவில் தான் பள்ளி கூடத்திற்கு செல்லும் 12 வயது பெண் காதலிக்கும் ஒடிப்போகவும் செய்யும். இது முதல் கராணம்.
இதற்குதான் மார்க்க கல்வி அவசியம், எப்படி உலக்கல்விக்கு முன்னுரிமை கொடுக்கிறமே ஏன் மார்க்க கல்வியிலும் குழந்தைகளுக்கு அவசியம் போதிக்க கூடாது போதித்து இருந்தால் இப்பாடி நடக்க வாய்ப்புகள் கிடையாது. நமதுரில் நடந்த சம்பவம் நண்பரும் அவரது குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து டி.வி. பார்த்துகொண்டிருந்தார்கள் அதில் அவரின் 10 வயதுக்கு மேற்பட்ட அவரது பெண் குழந்தையும் அடக்கம், நண்பரே இப்படி பார்ப்பது கூடாது என்றவுடன் அவர் சொன்னார் இல்லை எனக்கு என்று ரூமில் தனியாக டி.வி இருக்கு நான் தனியாக தான் பார்பேன் என்கிறார், அப்போ அவரது மகள் என்ன காட்சிகள் பார்க்கிறார்கள் என்று இவருக்கு தெரிய வய்ப்புயில்லை இது போல் பல பெற்றோர்கள் உள்ளனர்.
கேடு விளைவிக்கக் கூடியவற்றைத்தான் இஸ்லாம் தடைசெய்கிறது. அந்த வகையில் பாடல் இசைகருவிகளின் கெடுதிகள் அதிகம் உள்ளன.அவற்றை இப்னு தைமியா (ரஹ்)கூறுகிறார்கள், இசைக்கருவிகளினால் ஏற்படும் போதை மது வகைகளின் போதையைவிட மனதை அலைபாயவிடும் கடுமையானது. இசை ஒலி கேட்டவர்கள் மதிமயங்கும் போது இணைவைத்தல் கூட அவர்களுக்கு நடந்து விடும் ஆபாசம் அநியாயம் போன்றவற்றின் பக்கம் சாய்து விடுவார்கள் இதனால் விபச்சாரதில் (காதலில்) ஈடுபடுகின்றனர்
நம் குழந்தைகளுக்கு 5 ரூபாய் கொடுத்தலும் அதை எவ்வகையில் செலவு செய்கிறது என்பதை கண்காணிக்கவேண்டும், நம் கொடுத்ததைவிட அதிகமாக செலவு செய்துயிருந்தால் ஏது என்று விசரிக்க வேண்டும் கரணம் நமது பக்கத்திலே பல அயோக்கியர்கள் நாடகமாடி நடமாடி கொண்டிருக்கிறார்கள். பக்கத்துவீட்டு மாமா, அண்ணன் கொடுத்தார்கள் என்றால் அவர்கள் ஏன் கொடுத்தார்கள் என்று விசாரிக்கவேண்டும்,
Good touch செய்து கொடுத்தார்களா அல்லது bad touch (அல்ப புத்தி) செய்த்தற்காக என்று கவணிக்கவேண்டும், எந்த இடத்தில் தொட்டால் Bad touch எந்த இடத்தில் தொட்டால் Good touch என்று குழந்தைக்கு அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரியே பெண் குழந்தையாக இருந்தாலும் சரியே சொல்லி கொடுக்கவேண்டும், சில பள்ளி, கல்லுரிகளில் படிக்கும் சில குழந்தைகள் இது என் தோழி தந்தது இது தோழியின் வாப்பா துபாயிலேயிருந்து வந்ததற்கு ( தோழியின் வாப்பா இறந்து பல வருடமாகியிருக்கும்) தந்தது என்று சொன்னால் பெற்றவர்களே உள்ளுரில் தானே உள்ளீர்கள் போய் நீங்கள் அவசியம் விசாரிக்கவேண்டும்,
இது போல் நமது ஊரில் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது இதை நீங்கள் யாவரும் அறிவீர்கள்,இது இரண்டாவது.மேலும் கடத்தப்பட்டது என்றால் இது கயவர்களின் சூழ்ச்சியே, அவர்கள் தான் இஸ்லாமிய இனத்தை வேறேடு ஒழித்து கட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிகொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாம்தான் உஷாராக இருக்கவேண்டும். காவிகளின் கொள்கைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
பெண்கள் "பர்தா" இல்லாமல் பயணம் மேற்கொள்ளல் மேலும் பெண்கள் உரத்த சப்தத்துடன் பேசுதல், சிரித்தல், ஓர் பெண் அண்ணிய ஆடவரின் கையை பிடித்து வெட்கமின்றி உரையாடுதல் ஆண் பெண் குணநலன்களைக் கெடுக்கக் கூடிய கேவலமான புகைப்படங்களை பரிமாரிகொள்ளுதல்(sms, mms )இது பெரும் பாவங்களாகும். பெற்றோர்கள் இதையும் கவணிக்கவேண்டும்.
பெண் பிள்ளைகளை வெளியில் அனுப்பும் போது கண்டிப்பாக மகரம்மன ஆண் துனையுடன் தான் அனுப்பவேண்டும். எங்கு செல்கிறார்கள் ஏன் செல்கிறார்கள் இந்த வேலைக்கு இவர்கள் தான் செல்லவேண்டுமா என்பதை அவசியம் ஆராயவேண்டும். முடிந்த வரை பெற்றோறே செல்லவேண்டும்.இதெல்லாம் முடியுமா என்பது விளங்குது நாம் அல்லஹ்வின் கட்டளையும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின் பற்றினால் கண்டிப்பக முடியும்.குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் போதித்து நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இதுவும் இஸ்லாமிய கடைமைகளில் ஒன்றுதான்.
chinnakaka
நமதூர் நடுத்தெருவைச் சார்ந்த தவ்பீக்கை படுபயங்கரச் சதித்திட்டத்தில் குற்றம்சாட்டி, என்கவுண்டர் செய்யத் திட்டமிட்டு கேரளா, கர்நாடகம் என்று தமிழகபோலீசார் தேடிவருவதைத் தொடர்ந்து ஊடகங்களின் கவனம் நமதூரை நோக்கித் திரும்பியுள்ளது. மத்திய மாநில அதிகாரிகளும், தேசிய ஊடக செய்தியாளர்களும் ஆங்காங்கு சுற்றி வருகிறார்கள். குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் இருப்பவர்களின் தொலைபேசி, செல்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு கண்கானிக்கப்படுகிறார்கள்.

பெரும்பான்மை முஸ்லிம்களைக் கொண்டுள்ள ஊரென்றக் காரணத்திற்காக பத்திரிக்கைகள் நமதூரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக மிகைச் செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். தினமலர்,தினத்தந்தி, குமுதம் ரிப்போர்ட்டரைத் தொடர்ந்து ஜூனியர் விகடனும் தன் பங்குக்கு, தவ்பீக் மாறுவேடங்களில் சுற்றிவருவதாகப் புரளியைக் கிளப்பியுள்ளது.

தவ்பீக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் காவல்துறையினரிடம் இல்லையாம்; ஐந்து வருடங்களுக்குமுன் ஜு.வியில் வெளியான புகைப்படத்தை வைத்தே தேடிவருவதாக உண்மைக்குப் புறம்பாக ஜூனியர் விகடன் எழுதியுள்ளது.
ஓரிரு மாதங்களுக்கு முன் குமுதம் ரிப்போர்ட்டரில் தவ்பீக்கின் பேட்டியுடன் புகைப்படமும் வெளியாகி இருந்ததை அதிரை-எக்ஸ்ப்ரஸிலும் மீள்பதிவு செய்திருந்தோம்.
மேலும், கடந்த சட்ட மன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் வேட்பாளராகப் போட்டியிட்டு, பாஜகவை வேட்பாளரைவிட அதிக வாக்குகளைப் பெற்று நான்காமிடம் பெற்ற விபரம் தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரபூர்வ ஆவணங்களில் வெளியாகியது. இருந்தும் ஜூனியர் விகடன் திரித்து எழுதியிருப்பது, அதன்மீதான நம்பகத் தன்மையைக் குறைக்கிறது.
தமிழக முஸ்லிம் சமுதாய இயக்கங்கள் ஊடகங்களின் முஸ்லிம் விரோதப் போக்கை பெயரளவில் கண்டித்ததோடு ஒதுங்கிக் கொண்டனர். தவ்பீக்குடன் தொடர்பு படுத்தப்படும் இன்னொருவர், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினருடன் செயல்பட்டு, பிறகு நீக்கப்பட்டவராம். சமுதாய இயக்கங்களின் அழைப்பை ஏற்று, உணர்ச்சிப் பெருக்குடன் பொது நிகழ்ச்சிகளில் கோஷமிடும் முன்னாள் இயக்கத்தவர்களின் நிலையைப் பார்த்து, கண்ணை மூடிக்கொண்டு இயக்க வெறி பிடித்து அலைபவர்கள் விழிப்படைய வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் நமதூரில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சிறப்பு அழைப்பாளர்களாக நகர, வட்டாரக் காவல்துறை அதிகாரிகளை அழைத்து கண்ணியப்படுத்துகிறோம்.பைத்துல்மால்,அரிமா சங்கம் மற்றும் முஹல்லா சங்கங்களின் மூலம் அரசு/ காவல்துறை அதிகாரிகளுடனும் அரசியல் தலைவர்களுடனும் தொடர்பிலிருந்தும் ஊர்மக்களின் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மெளனமாக இருக்கிறார்கள்.
செல்வாக்குள்ளவர்கள் ஊடகம் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதிராம்பட்டினம் குறித்த மிகையான, தவறானச் செய்திகளைக் களைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், விளக்கக்கூட்டங்களையும் நடந்த முன்வர வேண்டும். வரவிருக்கும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாட நமக்கும் உரிமை இருக்கிறது என்பதால் இதை உடனடியாகச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அதிரை-எக்ஸ்ப்ரஸ் நினைவுறுத்த விரும்புகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் வேலூர் கோட்டை வளாகத்தில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகை நடத்த தங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த கோட்டை வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்திய நடுவணரசின் தொல்லியல் துறை இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. இந்த பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு ஒன்று சமீபத்தில் இந்த கோட்டை வளாகத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி திரும்பியிருக்கிறது.
இந்த குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பி மோகன் , இந்த கோட்டையில் இந்து மத வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை அடிப்படையாக கொண்டு, இஸ்லாமிய வழிப்பாட்டிற்கும் தொல்லியல்துறை அனுமதிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நிலைப்பாடு என்றும், இதற்காக தாங்கள் மத்திய அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்,த மு மு க மற்றும் சில முஸ்லீம் அமைப்புகள்,வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நமக்குள்ள இடம் தொழுகை நடத்த கிடைக்குமா அல்லது வழக்கம் போல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகுமா.? பொருத்திருந்து பார்ப்போம்.