M.I.Naina :நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் இத்தாலிய நாட்டைச் சார்ந்த பத்து பேர் கொண்ட ஒரு குழு சென்ற நோன்புப் பெருநாள் விடுமுறையை அவர்கள் நாட்டைப்போல் ஜாலியாக கொண்டாட துபாய்க்கு சென்று வந்தார்கள்.அப்படி துபாய் சென்று வந்த அவர்களிடம் பயண அனுபவம் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னது, துபாயில் எல்லாம் கிடைக்கிறது குறிப்பாக எங்கள் நாட்டை விட எல்லாவற்றிலும் மிகவும் வெளிப்படையான நாடாக இருக்கிறது என்றார்கள். அதன் மூலம் துபாயின் வண்டவாள, தண்டவாளங்களை தெரிந்து கொண்டேன். குர்'ஆனும், ஹதீஸும் தானேத் தவிர முஸ்லிம்களுக்கு அரபுநாடுகள் முன்மாதிரியல்ல அவர்களின் பழக்க,வழக்கங்களை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.உலக திருக்குர்'ஆன் மனனம் மற்றும் ஓதும் போட்டிகள் மட்டும் நடாத்தி அதற்குரிய பரிசுகளும், பொற்கிளிகளும் கொடுத்து விட்டால் இறைவனின் அருளும், அவன் கருணையும் தானாக இறங்கி வந்து அவர்களைத் தாலாட்டும் என்றுநினைத்துக் கொண்டார்கள் போலும்?மேகத்தில் தலை துவட்டிக்கொள்ளும் வானுயர்ந்த கட்டிடங்கள் இறைவனுக்கு கண்குளிர்ச்சியையும், சந்தோசத்தையும் தந்து விடப்போவதில்லை. மாறாக உள்ளத்தின் உயர்ந்த இறை பக்தியே அவனுக்கு மிகவும் உவப்பானதாக இருக்க முடியும்.
Ansari: சில மாதங்களுக்கு முன் துபையின் நாளேடான கல்ஃப் நியூசில் முதல் பக்கத்தில் கட்டமிட்டு வந்த செய்தியாவது: அமெரிக்க ஹாலிவுட் செக்ஸ்பாம்(BAYWATCH) நடிகை பமேலா ஆன்டர்ஷனை ஒரு வசதியான எமிராத்தி (UAE குடிமகன்)Dating செய்திருக்கிறானாம்.புகழ் பெற்ற ஹாலிவுட் பிரபலத்தை UAE குடிமகன் டேட்டிங் செய்வது இதுவே முதல் முறை என்று மார்தட்டி எழுதியிருந்தது.விபச்சாரத்தை(ஜினாவை) பெருமைத் தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தி செய்தியாக வெளியிட்ட கேடு கெட்ட நாடு.ஏற்கனவே இங்கு விபச்சாரம் தலைவிரித்தாடுகிறது.அமெரிக்காவின் அடிவருடி துபைதான்.புஸ்ஸின் வருகைக்கு ஒரு நாள் அரசு விடுமுறை அறிவித்த நாடு இது ஒன்றுதான் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இந்நாட்டுக்கு மிகப் பொருந்தும்.
Riyas: துபாயில் எல்லா துறைகளிலும் வேலை பார்ப்பது அரபிகள் அல்ல மற்ற நாட்டு மக்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அபு: அதிரை எக்ஸ்ப்ரஸ் மீதான தடை - தினமலருக்கு மீண்டும் அனுமதி அரபிகளுக்கு மூளை முட்டிக்கு கீழே இருக்கிரது என்பதைக் காட்டுகிறது.சரியான காட்டுப் பயளுவ...
அறிவாளி: துபாயை ஏன் ஒரு முஸ்லிம் நாடு என்று பார்க்கிறீர்கள்.ஒரு அரபு நாடு என்று பாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
Abdulkareem: துபைகாரன் இவ்வுலக வாழ்வை நேசிக்கும் ஒரு படோபகாரி என்பதும்,உலக நாடுகளுக்கு வியாபாரம் மூலம் ஆடம்பரம்,வீண் விரயம் செய்து சொகுசாக வாழவேண்டும் என் என்னும் அரசுதான் அது என்பதும் கண்கூடு.இவர்கள் அல்லாஹ்விடம் இவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.அங்குள்ள நம் மக்கள் துபையை காரி துப்புங்கள்.
சென்னை பூங்கா நகர் வணிக அங்காடிகள் பகுதியை சைனா பஜார் என்றழைத்ததுண்டு. வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு பர்மா பஜார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் விமரிசையாக சுதந்திர தின விழாக்களை கொண்டாடிவிட்டு பணி நிமித்தமாக சீனா வந்திறங்கியதிலிருந்து ஆச்சரியம் பூச்சொறிந்துக் கொண்டு தானிருக்கிறது.
சீன தேசம் எவ்வளவு முன்னேறிவிட்டது. மேகத்தில் தலை துவட்டிக் கொள்ளும் வானுயர்ந்த ஏராளமாக கட்டிடங்கள், வணிக வளாகங்கள், பூங்கா மற்றும் இளைப்பாற பல இடங்கள், சொகுசுப் பேருந்துகள், மிகச் சவுகரியமான மலிவான பாதாள ரயில்கள், ஆடவரும் பெண்டிரும் பஸ் டிரைவர், நடத்துனர்கள், ரயில்வே துப்புரவு, டிக்கட் பரிசோதகர் என்று எல்லாத்துறைகளிலும் சுறுசுறுப்பாக பணிபுரிகிறார்கள். சீன மக்கள் உடை விஷயத்தில் கூட பளிச். மின்வெட்டு, தண்ணீர் தட்டுபாடு இல்லாத நகரங்கள். நாம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளில் இதுபோன்ற பாரதத்தைக் காணப் போகிறோம்?
ரயிலில் ஆறு படுக்கை(
பெர்த்)
க்கு ஒரு வெண்ணீர் ஃபிளாஸ்க்கில் கேட்காமலேயே தரப்படுகின்றது.
வேண்டியவர்கள் கிரீன் டீ உறிஞ்சிக்கொள்ளலாம் அல்லது நூடுல்ஸ் இட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம்.
ரயிலில் பணிப்பெண்கள் தள்ளுவண்டியில் நொறுக்குத் தீனி விற்கின்றனர்.
கழிவறைகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகிறகின்றன.
நம் ஊர் என்றால் பணிப்பெண்ணுக்கு பாதுகாப்பாக(?)
நான்கு ஜொள்ளர் அல்லது மன்மதன்கள் இருந்து கொண்டேயிருப்பர்.
ஷாங்காய் என்ற வர்த்தக நகரமானாலும் சரி,
பெய்ஜிங் ஆனாலும் சரி,
ஊக்ஸி என்ற தொழிற்சாலை நகரமானாலும் சரி மக்கள் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியான பண்பாடு.
ஆங்கிலம் கிலோ என்ன விலை?
என்பதுபோன்று அதிகமானோருக்கு தெறியவில்லை.
ஒன்,
டூ,
த்ரி கூட அவர்கள் மொழியிலே கூற நம் விழிகள் பிதுங்கிவிடும்.
இங்கே மக்காவில் ஹஜ் பயணிகள் ஷாப்பிங் செய்யும் போது மொழி தெறியாத கடைக்காரர் கால்குலேட்டரில் அடித்து காண்பிப்பது போலத்தான் அங்கும்.
அவர்கள் கூறும் விலைக்கு பாதி விலையில் (அடிமாட்டு விலைக்கு) கேட்டால்.. கடைக்காரர்கள் வாயகன்று சிரித்துவிட்டு நம் கன்னத்தை செல்லமாக தட்டிக் கொடுத்து கட்டுபடியாகாததைச் சொல்லுகின்றனர். நம்மூரில் "வந்துட்டான்ய்யா சாவு கிராக்கி..!" என்பது போல அழகிய அர்ச்சனைகள் கிடைக்கும்.
நம் நாட்டில் உள்ளதுபோல எல்லாப்பிரச்சினைகளும் சீனர்களுக்கும் உண்டு. மக்கள் தொகை நம்மைவிட அதிகம். வேலையில்லா திண்டாட்டம் அங்கும் உண்டு. சுற்றுப்புறச்சூழல், மாசு, 800க்கு மேற்பட்ட மொழி, மத, இன வேற்றுமைகள் எல்லாவற்றையும் முண்டியடித்துக்கொண்டு சீனா முன்னேறி வந்திருக்கும்போது இந்தியா மட்டும்…. நெஞ்சு கனக்கிறது.
பயணத்தை முடித்துக் கொண்டு ஜித்தா திரும்புகையில் ஏர் இந்தியாவின் டிரான்ஸிட் பயணியாக டில்லி விமான நிலையத்தில் விமானத்தின் ஜன்னல் வழியாக தாய்நாட்டைப் பார்த்தபோது, தன் தாயை வறுமையுடன் பரிதாபாமாக பார்ப்பது போன்று நெஞ்சு பரிதவிக்கிறது.
With Regards.
M. Rafia Ahamed.
Jeddah – Saudi Arabia.