ஒரு R.S.S. காரரின் இஸ்லாத்தை நோக்கிய பயணம்! PART 2
என்னுடைய பெற்றோர்களையும் என்னைச் சுற்றி இருப்பவர்களையும் நான் கேட்டேன், கடவுளை நேரில் பார்த்தவர்கள் யாராவது உள்ளார்களா? எந்த அடிப்படையில் படங்களையும், சிலைகளையும் உருவாக்குகிறார்கள்? கடவுளை யாரும் பார்த்ததில்லை என்பதுதான் அவர்கள் அனைவரின் பதிலுமாய் இருந்தது.
இறுதியில் நான் சில புராணங்களை படித்ததின் மூலம் உண்மையை உணர முடிந்தது. அதன் பிறகு இந்து கடவுள்களின் கதைகள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நான் என் பெற்றோர்களிடம் மீண்டும் கேட்டேன். எல்லா இந்து வேதங்களும் சிலை வணக்கங்களை எதிர்க்கின்றன. இருப்பினும் நாம் தொடர்ந்து அதைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஏன்? எந்த அடிப்படையில் சிலை வணக்கம் செய்கிறோம். இந்த கேள்வியால் என் பெற்றோர்கள் என் மேல் கோபப்பட்டு நமது முன்னோர்கள் செய்து கொண்டிருந்ததைத்தான் நாம் தொடர்ந்து செய்கிறோம் என்று சொன்னார்கள். இந்த பதிலால் நான் திருப்தியடையவில்லை.
அடுத்து நான் குர்ஆன் படித்தபோது அத்தியாயம் அல்பகராவில் ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மேலும், "அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?" (அல்-குர்ஆன் 2:170)
இந்த வசனம் என்னை மிகவும் பாதித்தது. அதன் பிறகு சிலை வணக்கங்களையும், பூஜைகள் செய்வதையும் சிறிது சிறிதாக நிறுத்தினேன். அல்லாஹ்வுடன் மற்றவர்கள் இணை வைப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்பதை உணர்ந்தேன். ஆரம்ப நாட்களில் மிகவும் ரகசியமாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். அல்பகரா அத்தியாயத்தில் அல்லாஹ் மேலும் தெளிவுபடுத்துகின்றான், என்னவென்றால் இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்;, நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்.அல் குர்ஆன் 2 :14அதைத்தொடர்ந்து ஆல இம்ரான் அத்தியாயத்தில் அல்லாஹ் விளக்குவது என்னவென்றால் ..இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;.. (அல் குர்ஆன் 5 : 3)இதன் பிறகு நான் மேலும் தெளிவடைந்தேன்.
என் மனதில் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை இந்த குர்ஆனில் மட்டும் தான் கிடைத்தது. அல்லாஹ்வின் கிருபையினால் இஸ்லாத்தைப் பற்றி எனக்குத் தெரிந்த மற்றும் அறிந்த சில விபரங்களை நான் என் வீட்டில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தினேன். டிப்ளமோ கடைசி ஆண்டு படிக்கும் காலத்தில் இஸ்லாத்திற்கு கொஞ்ச கொஞ்சமாக நான் மாறிக் கொண்டிருப்பதைப் பார்த்து என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் என் சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு என்னுடன் வெளியே வந்துவிட்டாள். நானும் எனது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வருடம் எந்த வேலையும் இல்லாமல், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளானோம். அந்த நேரத்திலும் இஸ்லாத்தில் உள்ள பற்று எங்களுக்குக் குறையாமல் மிகவும் ஈமானுடன் இருந்ததால் அல்லாஹ் எங்களுடைய எல்லா சிரமங்களையும் இலேசாக்கினான், அல்ஹம்துலில்லாஹ். மிகவும் குறைந்த வருமானத்தில் கிடைத்த வேலைக்கு நாங்கள் இருவரும் சென்று கொண்டிருந்தோம்.இதற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டேன். அல்லாஹ் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் எங்களுக்கு அதிகமாக ஏற்படுத்திக் கொடுத்தான். ஐந்து வேளை தொழ முடியாத காரணத்தால் நான் என்னுடைய முந்தைய வேலையிலிருந்து விடுபட்டேன். கொஞ்ச கொஞ்சமாக பல பெரிய தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புகளை நான் இழக்கும்படி ஆகிவிட்டது. இதற்காக நான் வருத்தப்பட்டாலும் அல்லாஹ்வின் கருணையினால் தற்போது நல்ல வேலை கிடைத்ததுடன் ஐந்து வேளை நல்லபடியாக தொழுகவும் முடிகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
முன்னாள் R.S.S காரரான உமர் ராவ் அவர்கள்,தான் எவ்வாறு இஸ்லாத்தை ஏற்றார் என்பதை ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.அதன் தமிழ் ஆக்கமே இது,மொழி பெயர்ப்பு :கோவை. பஷீர்.
THE END