ருசி அன்பில் இருக்கிறது.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை காண தினந்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து போவார்கள்.
அவர்களில் பலர் தங்கள் விரும்பும் பொருட்களை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள். இது தினந்தோறும் நிகழும் சம்பவம்தான்.
இதுபோல் ஒரு நாள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை காண வந்த மூதாட்டி ஒருவர் கை நிறைய திராட்சைப் பழங்களைக் கொண்டு வந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கொடுத்தார்.
மேலும், இந்த திராட்சைப் பழங்களை தாங்கள் சாப்பிட்டால் நான் மிகவும் மனமகிழ்வேன் என்று கூறினார்.
அதனால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் திராட்சைப் பழங்களை ஒன்று ஒன்றாக சாப்பிடலானார்கள். மகிழ்ச்சி அடைந்த மூதாட்டியும் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
பாதி பழங்களை சாப்பிட்ட நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், மீதமிறுந்ததை அவரது தோழர்களுக்கு அளித்தார்கள். அவர்கள் அந்த பழத்தை வாயில் வைத்த நிமிடத்திலேயே அதன் புளிப்பு சுவை தாங்க முடியாமல் துப்பினர்.
இந்த பழம் இவ்வளவு புளிப்பாக இருக்கிறதே இதை எப்படி சாப்பிட்டீர்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அந்த மூதாட்டி நான் சாப்பிட வேண்டும் என்ற என்பதற்காக மிகுந்த வாஞ்சையோடு கொண்டு வந்த திராட்சைகள் இவை. இந்த திராட்சை பழத்தில் இருக்கும் ருசியை விட அவரது அன்பு மிகுந்த சுவையுடன் இனிக்கிறது. அதனால் பழத்தில் இருந்த புளிப்பு எனக்குத் தெரியவில்லை" என்றார்கள் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள்.