புத்தக மூட்டையும்,ஹோம் ஒர்க் அவலமும்!
மிக வளர்ந்த நாடுகளைக் காட்டிலும்,வளரும் நாடான நம் நாட்டில் கல்விக்கான பேரமும்,படிக்கும்போது பல வித பார்மாலிட்டிகள் என்ற பெயரில்,பிள்ளைகளை கசக்கிப் பிழிய வைத்தளும்தான் அரங்கேறுகின்றன.நாடளவில் நடக்கும் இக்கூத்து நம் ஊரையும் ஆட்டிவைப்பதில் ஆச்சரியம் இல்லைதான்,ஆனாலும் இந்த அவலக்கூத்தை நம் ஊரிலாவது தடுக்கலாமல்லவா,அதற்காகவே இக்கட்டுரை.
அதற்க்கு முன் சிறு ஜோக்:
------------------------
ஐயா இங்க எனக்கு மூட்டை தூக்குற வேலையயாவது கிடைக்குமா?
என்னப்பா படிச்சிருக்கே?
நான்,பி காம் படிச்சிருக்கேன்
இல்லப்பா,உனக்கு வேலை இல்லை.
இன்னொருவர் வந்து வேலை கேட்கிறார்.
நீ என்னப்பா படிச்சிருக்கே,
சார்,நான் எல் கே ஜி படிச்சிருக்கேன்.
குட்,ஒனக்கு வேலை தருகிறேன்.இது ஒரு பத்திரிகையில் வந்த ஜோக்,இதன் மூலம் நாம் அறிவது,எல் கே ஜி படிக்கும் சிறுவன்,அவனுக்கு ஆனா ஆவன்னா தெரியாத அப்பருவத்தில்கூட புத்தக மூட்டையை சுமக்க ஆரம்பித்துவிடுகிறான்.இந்த சிறார்கள் மூட்டை தூக்கும் அவலத்தை நம் ஊர் பள்ளிகளிலும் பார்க்கலாம்.இதை எந்த பள்ளியும் கண்டு கொள்வதில்லை,அப்படி பிள்ளைகளுக்கு புத்தக மூட்டை சுமக்க வேண்டாம் என என்னும் ஒரு பள்ளி மேலாளர்,சில வாரங்களுக்கு பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஒரு புக்,ஒரு நோட்டு மட்டும் கொண்டு வாருங்கள் என பணித்தார்.ஆனால்,என்ன நடந்தது தெரியுமா?பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.எங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒழுங்காக படித்துக்கொடுப்பதில்லை,அதனால்தான்,ஒரு நோட்டு,புத்தகம் என கொண்டு வர சொல்கிறீர்கள் என புகார் செய்யவே,அந்த நிர்வாகம் அதை உடனே வாபஸ் பெற்று,மீண்டும் பிள்ளைகளை மூட்டை தூக்க வைத்து அழகு பார்க்கிறது.இது நம் ஊரில் நடந்த கூத்துதான்.சரி,பெற்றோர் மிக அதிகம் படிக்கவில்லை என்பதால் அவர்கள் எதிர்த்தனர்,ஆனால் ஸ்கூல் நிர்வாகம் மாற்று ஏற்பாடு அல்லவா செய்ய வேண்டும்,ஆளுக்கொரு சிறு பாக்ஸ் (போஸ்ட் ஆபீஸ் லாக்கர் போன்று)ஏற்பாடு செய்து அதில் அவர்களுடைய புத்தகங்களை வைக்க ஆவன செய்யலாமே?அதை அவர்கள் செய்யாதிருக்கவும் ஒரு காரணம் உண்டு ,அது...........
அதுதான்,ஹோம் ஒர்க் என்ற பெயரில் நடக்கும் அவலம்.பிஞ்சுக் குழந்தைகள் கைகளில் ஐந்து வகையான ஹோம் ஒர்க் வேலைகள் தினந்தோறும் அரங்கேறுகின்றன.நம் ஊரில் உள்ள ஒரு பெண்கள் படிக்கும் பள்ளியில்,இதே நிலைதான்.இரவு ஒரு மணி ஆகியும் ஹோம் ஒர்க் பண்ணியே ஆக வேண்டும் என்ற கட்டாயம்.இல்லைஎனில்,மறுநாள்,பள்ளியில் கிடைக்கும் பனிஷ்மென்ட் சொல்லி மாளாது.அடி,முட்டி போடுதல்,வெயிலில் வெளியில் நிற்றல் என வகை வகையான பனிஷ்மென்ட் என பிள்ளைகளை கசக்கிப் பிழிகிறார்கள்.இதை நம் ஊர் மக்கள் ஆக்ரோஷமாக கூறுகிறார்கள்.(அரசு சட்டம் இயற்றியும் பயன் இல்லை).