அதிரை எக்ஸ்பிரஸ் மீது அதன் வாசகர்களால் தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்
கே: அதிரை எக்ஸ்பிரஸின் கொள்கை என்ன?
ப: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கையூட்டுப்பெறாத, கையோடு கைகோர்க்காத கட்சிகளுக்குத்தான் நமது ஆதரவு என்கிற கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். (அப்ப நீங்க கம்யூனிஸ்டா?)
தேர்தலுக்குமுன், அதிரை அல்-அமீன் பள்ளிக்கு கை கொடுத்தால் கரைபட்ட கையானாலும் கை கொடுக்கத் தயாராய் இருக்கிறோம்.
பார்ப்புகளின் ஊடக விபச்சாரத்தை கொன்றொழிப்பதே நம் பணி.
கே: பின்னூட்டங்களை நீக்கியது கவலையளிக்கிறது. அதிரை எக்ஸ்பிரஸின் பதில் என்ன?
ப: ' தனிநபர் வாழ்க்கை' தொடர்பான பின்னூட்டங்களை அதிரை எக்ஸ்பிரஸில் பதிவதை சரியாகப்படவில்லை.
(இருந்தாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்துச்சுங்களே!!!)
கே: அதிரை எக்ஸ்பிரஸின் விலை எவ்வளவு?
ப: அதிரை மக்களின் மீது அதிரை எக்ஸ்பிரஸ் கொண்டுள்ள கவலையே அதன் விலை.
கே: சகோ. நெய்னாவின் பின்னூட்டத்தை நீக்கியது ஏன்?
ப: உண்மை ஆலிம் என்கிற பெயரில் முட்டாள்த்தனமாக ஒருவர் எழுதியதை நீக்குவதற்கு பதிலாக சகோ. நெய்னாவின் அரட்டை கருத்து தவறுதலாக நீக்கப்பட்டது. அதற்காக வருந்துகிறோம்.
கே: 'புரோகிதம் ஒழிப்போம்...புரோகிதர்களை புறக்கணிப்போம்' என்கிற வாசகத்தை நீக்கியது ஏன்?
ப: அந்த வாசகத்தை நீக்கயதற்குப் பிறகே அதன் பொருள் நிறைய பேருக்கு தெரியவந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே...
கே: அதிரை எக்ஸ்பிரஸிற்கும் வேறு ஒரு அதிரை வலைதளத்திற்கும் ஏதாவது பிரச்சினையா?
ப: அதில் அறவே உண்மையில்லை. தற்போது அதிரை எக்ஸ்ப்ரஸில் பல தரப்பட்டவர்களும் பங்களிப்பாளர்களாக இருக்கின்றார்கள். அதே போல் நமது தளத்திற்கு நமதூர் மட்டுமின்றி வெளியூறைச்சர்ந்தவர்களும் வாசகர்களாக (பலதரப்பட்டவர்களும்) இருக்கின்றர்கள். அவர்களில் சிலருக்கு சில கருத்துக்கள் உடன்பாடானதாக இருக்கலாம். சிலருக்கு உடன்பாடற்றவையாகவும் இருக்கலாம். அது அவரவர் எண்ணங்களைப் பொருத்தது. அதற்காக அதிரை எக்ஸ்ப்ரஸை குற்றம் சுமத்துவது என்பது தவறான ஒன்று. நமது தளத்தின் முக்கியமான நோக்கம் நமதூரைச் சேர்ந்த பல எழுத்தாளர்களை தற்போது வெளிக்கொண்டுவரும் நன்நோக்கமே. நமது தளத்தைச் சேர்ந்த சில பங்களிப்பாளர்களின் கட்டுரைகள் சில வற்றில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாமையால் அவர்கள் உணர்வுடன் தங்கள் தளத்தில் பதிலளிக்கிறார்கள். அவ்வளவே. நமது அதிரை மக்கள், உரிமையுடன் அதிரை எக்ஸ்பிரஸில் அதிகம் எழுதவேண்டும் என்பதே நமது விருப்பம்.
கே: அதிரை எக்ஸ்பிரஸ் தமுமுகவா, ததஜவா?
ப: நாங்க பாஜக ஆதரவு கிடையாது. (இது கருணாநிதி குசும்பு)