இன் னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.........
ஜனாப் செய்யத் காக்கா (மக்கா செய்யத்)அவர்களின் மகனும்,முஹிதீன் அவர்களின் தம்பியும்,தாஜுதீன் அவர்களின் மருமகனுமாகிய அபூபக்கர் அவர்கள் (வயது 30)இன்று அதிரையில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்கள்.அவர்களுடைய்ய மறுமை வாழ்வு சிறக்க துவா செய்யுமாறு வேண்டுகிறோம்.
ஹஜ் காலங்களில்,நமதூர் மக்களுக்கு மட்டுமின்றி தமிழகத்திலிருந்து வரும் அனைத்து ஹாஜிமார்களுக்கும் அபூபக்கர் அவர்கள் பணிவிடை செய்து,அவர்களின் அன்பையும்,துவாவையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.அன்னார் சவூதியில் கோகோ கோலா கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை அளிப்பானாக.ஆமீன்.