கருணாநிதி ஆட்சியில் முஸ்லிம்கள் கூமுட்டைகளா?
ஒவ்வொருமுறையும் கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதும் அவர் ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய நாசகார செய்திகளுடன் தினப் பத்திரிக்கைகள் போட்டிபோட்டுக்கொண்டு கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடும். அதனைத்தொடர்ந்தோ அதற்கு முன்போ காக்கிச்சட்டைகள் களத்திலிறங்கியிருக்கும்.
நமதூரிலும் அதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை இன்னும் ஒரிரு தலைமுறைக்கு நினைவில் இருக்கும். ஸ்காட்லாந்திற்கு இணையான தமிழக காவல்துறை ஆணில்லா வீடுகளில் இரவு நேரங்களில் சுவரேறி குதித்த சாகச நிகழ்ச்சிகள் நமதூரில் அரங்கேறியிருக்கின்றன.
கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில் டிசம்பர் மாதங்களில் பாட்சா மரைக்காயர் இல்லத்தில் பூட்ஸ்கால்களால் மிதிபட்ட காயங்களை அண்ணாத்துறை எம்.எல்.ஏவிடம் வலிச்சி காட்டிய ஆண்டுகள் நமதூரில் உண்டு. நிற்க. இவையெல்லாம் ஏதோ சிறு விசயத்தை பூதாகரமா காண்பிக்க நினைப்பதாக எண்ணவேண்டாம். எழுத்து விபச்சாரம் செய்யும் தமிழ் செய்தித்தாள்களின் வரிசையில் நாமும் நிற்காமல் நம்மைப் படைத்தவன் பாதுகாக்கட்டும்.
இது இப்படி இருக்க தற்போது பெங்களூர், அஹமதாபாத்களில் நிகழ்ந்துள்ள கோர வெடிகுண்டு சம்பவங்கள் நம் நெஞ்சை பிழிவதாக உள்ளன. இந்த நாசகார செயல்களில் ஈடுபட்டவர் நிச்சயமாக மனித குல விரோதிகள். கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உளவுத்துறை தகவல்களின் படி மூன்று பேர் கைது செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மூவரும் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என குறிப்பிட வேண்டியதில்லை, கருணாநிதி ஆட்சியில். அதில் திருநெல்வேலியைச் சார்ந்த முன்னாள் த.தஜ சகா ஒருவரும் அடக்கம்.
மேலும், முஸ்லிம்கள் அதிகம் வசித்த, வசிக்கும், ஆரம்பகாலத்தில் திமுக வளர்ந்த இடமும் தமிழக முஸ்லிம்களின் மானமும் மருவாதையையும் கட்டிக்காப்பாத்துற முப்பெரும் இஸ்லாமிய அமைப்புகளான முஸ்லிம் லீக், தமுமுக, ததஜ போன்ற இயக்கங்களின் தலைமை அலுவலகங்கள் வீற்றிருக்கி இடமும், சிங்காரச்சென்னையின் அசிங்கமான தொகுதிக்கு சொந்தக்காரரான இனமான பேராசிரியரின் மன்னடியில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நிற்க -2.
* நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிற விலைவாசி உயர்வுகளும் சாதாரண ஏழை எளிய மக்களை சொல்லெனா துயரத்தில் ஆழ்த்திக்கொண்டிருப்பதையும், வருங்கால இந்தியாவில் ஈரான் வழி கேஸ் பெறுவதை தடுக்கச்செய்யும் அமெரிக்க சதிக்கு கைக்கூலி பெற்றுக்கொண்ட மத்திய காங்கிரஸ் அரசின் பாராளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 600 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தீவிர எதிர்கட்சியான பாஜக, சிவசேனா போன்ற கட்சிகளைக் கூட வாங்க முடிந்திருக்கிறது.
* அமெரிக்க அனுஆயுத ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் ஏற்பட்டிருக்கிற எதிர்ப்பை குறைப்பதற்கு, மறைப்பதற்கு அமெரிக்காவின் அடிவருடிகளைக்கொண்டு அஹமதாபாத், பெங்கலூரில் வெடிகுண்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது.
* சுதந்திரதின விழாக்களில் சதித்திட்டம் தீட்டிய முஸ்லிம்கள் கைது என்கிற படலம் எல்லாவருடங்களும் காணலாம். இதன் பின்னனியில் முஸ்லிம்கள் சுதந்திரபோராட்டத்தில் ஈடுபட்டிருந்ததையும் முஸ்லிம்களுக்கு இந்திய சுதந்திரம், இந்தியாவின் இறையாண்மையில் நம்பிக்கை இல்லாதவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது. இப்போது நிகழ்ந்திருக்கிற சம்பவத்தை இதற்கு ஒப்பிடலாம்.
* பாஜக ஆளும் மாநிலங்களாக கர்நாடகாவும், குஜராத்தும் இருந்துவருகின்றன. தற்போது நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்புகள் இங்குதான் நடந்தன. இதில் அங்கு ஆளும் பாஜக அரசின் ஒத்துழைப்புடனேயே நிகழ்த்தபட்டிருப்பதாக வலைப்பதிவுகளில் கருத்துக்கள் பறிமாறப்படுகின்றன.
எது எப்படியாகினும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோடும் சம்பவமாக அமைதிப்பூங்காவான தமிழகத்தில் கருணாநிதியின் தயவில் காவல்துறை தமிழக முஸ்லிம் இளைஞர்களை குறிவைப்பது கண்டனத்திற்குறியது.
பத்திரிக்கை மலங்கள்:
திருநெல்வேலியில் கைது செய்யபட்ட அப்துல் கபூர் அவர் வீட்டிற்கருகில் இருக்கும் எலக்ட்ரீசியன் ஒருவரிடம் வயரை கோர்ப்பது பற்றி தெரிந்துகொண்டாராம். (இனி எலக்ட்ரீசியன் பக்கம் முஸ்லிம்கள் நெருங்க வேண்டாம்) ஆனால் இவர் தான் டைம்பாம் வைப்பதில் கில்லாடியாம்.
தீவிரவாதிகள் குறிவைத்த 11 இடங்கள்
1. சென்னை சென்ட்ரல் நிலையம்
2. சென்னை எழும்பூர் நிலையம்
3. சென்னை மவுண்ட் ரோடு
4. நெல்லை கலக்டர் அலுவலகம்
5. நெல்லையப்பர் கோவில்
6. நெல்லை சந்திப்பு நிலையம்
7. மதுரை மீனாட்சி கோயில்
8. மதுரை ரயில் நிலையம்
9. ௵ரங்கம் கோயில்
10. திருச்சி, கோவை, நெல்லை ரயில் நிலையங்கள்
(தமிழகத்தில் தீவிரவாதிகள் விடுபட்ட இடங்கள் பற்றி மேலும் தகவலறிய மாலைமலர் அலுவலகத்தில் சிறப்பு தொலைபேசி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம், தொலைபேசி இணைப்பு கிடைக்காதவர்கள், நிர்வாக ஆசிரியர்கள் வேறு 'லிஸ்ட்' கள் தயார் செய்வதில் பிஸியாக இருக்கலாம், அதனால் பொறுத்துக்கொள்ளவும்.
http://maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=279607)
எப்பொழுதும் போல் மலத்தை கக்கும் செயல்களில் தமிழ் செய்தித்தாள் தினமலம் நாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.
http://dinamalar.com/Topnewsdetail.asp?News_id=353&cls=
மூன்று பேட்டரிகளுடன் தமிழ்நாடு ஸ்காட்லாந்து இணையான போலீஸ் சிறுவர்களை மிரட்டி வாங்கிய விளையாட்டு சாமான்களிலிருந்து உருவிய வயர்களுடன் அப்துல் கபூர் நிர்பதாக தினமலம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் வேடிக்கை தெரியுமா? BACK என்கிற குறிச்சொல்லுடன் ஒரு குறுஞ்செய்தி SMS சென்னையில் பரவியதாகவும் அது தொடர்பாக போலீஸ் எச்சரிக்கை விடுத்ததாக தினத்தந்தியிலும் அதே செய்தியை தினமலம் பத்திரிக்கை திரித்து வெளியிட்டிருப்பதும். இது தினமலம் மீதான பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தினமலம் நிரூபரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.
1. தினத்தந்தி: தீவிரவாதிகளின் அடுத்தகுறி என்று மிரட்டல் சென்னையில் பரவிய `எஸ்.எம்.எஸ்.' பீதி போலீசார் எச்சரிக்கை
2. மாலைமலர்:உளவுத்துறை பலவீனம்: இதுவரை துப்பு துலங்காத 16 குண்டுவெடிப்புகள்
3. http://maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=279607
4. http://dinamalar.com/Topnewsdetail.asp?News_id=353&cls=
பத்திரிக்கை தர்மம் காக்க எழுத்தாணியை (பேனா) கையிலெடுப்போம்.