கால்பந்து இறுதிப்போட்டி.
கடந்த ஒன்றரை மாதமாக நமதூரில் நடைபெற்று வரும் குல் முகமது நினைவு கால்பந்தாட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய தினம் (சனிக்கிழமை) இறுதி போட்டி நடைப்பெற உள்ளது. முன்னதாக நேற்று நடைப்பெற்ற சிறப்பு ஆட்டத்தில் ஆலத்தூர் மற்றும் கேரளா(கொல்லம்) அணியினர் விளையாடினார்கள். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இவ்வாட்டத்தில் எந்த அணியும் கோல் போட முடியாமல் ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது. இந்த இரு அணிகளும் இறுதி போட்டிக்கு ஏற்கனவே தகுது பெற்றுள்ள நிலையில் நட்பு ஆட்டம் ஒன்றில் இரு அணிகளும் நேற்று விளையாடியது.
நமதூரில் கால்பந்துக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு,ஆதரவு இருக்கின்றது என்பதை விளையாட்டரங்கில் காலரிகளையும் சேர்களையும் அலங்கரிக்கும் நம்மூர் கால்பந்தாட்ட ரசிகர்கள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மிக சிறந்த விளையாட்டு வீரர்களை இரு அணிகளும் தன்னகத்தே கொண்டு நிலையில் இன்று நடக்கும் இறுதி போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை நம்பலாம். கோப்பையை யார் தட்டி செல்வார்கள் என்று பொருந்திருந்து பார்ப்போம்.
படத்தொகுப்பு உதவி : அதிரையிலிருந்து ஹாஜா.
XPress செய்திக்காக சென்னையிலிருந்து அப்துல் பரக்கத்.