அமெரிக்க முஸ்லிம்கள் ஓட்டு யாருக்கு?
அமெரிக்க தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாய கக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கவனம் செலுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சி யின் முன்னணிப் பிர முகர்கள் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் குறிப்பிடுகின்றது.
அமெரிக்க அரசியல் களத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதில் ஜனநாயகக் கட்சியே முன்னிலை வகிக்கின்றது. முன்னாள் அதிபர்களான ஜான் எஃப் கென்னடி, பில் கிளிண்டன் உள்ளிட்டோர் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றனர்.
இந்நிலையில், கென்ய வம்சாவளியைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னாள் அதிபர்களைப் போன்றே பெருவாரியான வாக்குகளை பெற வாய்ப்பிருந்தும் அதில் தீவிர கவனம் செலுத்தாமையினால் வாக்குகள் குறையும் அபாயத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க முன்னணி பத்திரிக்கையாளர் ஸகீப் ரங்கூன் வாலா தெரிவிக்கிறார்.
அமெரிக்க மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இடம் பெறும் முஸ்லிம்களில் 70 லட்சம் பேரில் 61 சதவீதத்தின் ஜனநாயகக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் என்றும் 11 சதவீதத்தினர் மட்டுமே அதிபர் புஷ்ஷின் குடியரசுக் கட்சி யினரின் ஆதரவாளர்கள் என அமெரிக்காவின் முன்னணி சமூக நல அமைப்பான கேர்ன் சிக்காகோ பகுதி அமைப்பாளர் அஹ்மத் ரெஹாப் குறிப்பிடுகிறார்.
முந்தைய தேர்தல்களைப் போல ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக முஸ்லிம் களின் ஆதரவை ஓருங்கிணைப்பது சற்று கடினம் என்றும் அவர் மேலும் தெரிவித்தனார்.
courtesy:www.tmmk.in