தினத்தந்திக்கு ஒரு தந்தி கொடுக்கணும்
போறப்போக்கைப் பார்த்தால் ஜாவியா நார்சா மடிக்கக்கூட லாயக்கில்லாத நிலைக்கு தினந்தந்தி பேப்பரும் வந்துடும்னு நினைக்கிறேன். ஆனந்தராஜை மக்கள் நடுரோட்டில் உதைத்தனர்! சிம்புவுக்குக் கத்திக் குத்து!! சிம்ரனைச் சீண்டிய ரவுடியைப் புரட்டி எடுத்த விஜய்!!! என்று பரபரப்பான தலைப்பில் செய்தியைப் போட்டிருப்பார்கள்.ஆர்வத்துடன் வாசித்துப் பார்த்தால் ஏதாவது சினிமா சூட்டிங்கில் நடந்தது என்று உப்புச்சப்பில்லாத செய்தியைப் போட்டு பக்கங்களை வீணடிப்பது தினந்தந்தியின் யுக்தி!
இன்னொரு பக்கம் "ஆண்மையின்மை, குழந்தையின்மை குறைகளை ஒரே மாதத்தில் குணப்படுத்தும் அற்புத மருத்துவர்!!!" என்று தலைப்பிட்டிருக்கும். ஆர்வத்துடன் செய்தியைப் படித்துவிட்டு நிமிர்ந்தால் ஓர் மூலையில் "Advt." என்று விளம்பரத்தையே செய்தியாக்கும் மொள்ளமாறித்தனம் செய்வதும் தினத்தந்தியின் வாடிக்கை.இந்த விளம்பரத்தையே குளோசப்பில் TVயில் காட்டி பத்திரிக்கைகள் பாராட்டும் பிரபல மூலிகை வைத்தியர் என்று தான் கொடுத்த விளம்பரத்தே செய்திபோல் காட்டி லாட்ஜ் கிராக்கி மூலிமை டாக்டரும் மேலும் மக்களை மடையராக்குவார்..
ஒருகாலத்தில் அவசரத் தொடர்புகளுக்கும் செய்திப் பரிமாற்றங்களுக்கும் தந்தி, துரிதச் செய்தித் தொடர்புச் சாதனமாக இருந்து வந்தது. வாழ்த்துக்கள், அவசர அழைப்புகள் மற்றும் மரணச் செய்திகளை உடடியாகத் தெரிவிக்கப் பயன்பட்டதால் தபாலைவிட தந்திச் செய்திக்கு பரபரப்பு சற்று அதிகம்.
தந்தியைக் கொண்டுவரும் தபால்காரரும் சற்று பரபரப்புடன் "மாரிமுத்து அண்ணே உங்களுக்குத் தந்தி வந்திருக்கய்யா" என்று சொன்னதும் பக்கத்தில் நிற்கும் அப்துல் காதர் பாயும் கண்கலங்கியவாறு மாரிமுத்துவையும் தபால்காரரையும் மாறிமாறிப் பார்ப்பார். இன்றும் "சார் தந்தி" என்ற குரல் கேட்டதும் பலர் பரபரப்படைவதைக் காண முடியும்.
பரபரப்பான செய்திகள் என்பதற்காகவே 'தினத்தந்தி' என்று பெயரிட்டிருக்க வேண்டும்.ஐம்பதாண்டுகள் பழமையான பாரம்பரியுமுள்ள தினத்தந்தியில் ஆண்டியார், குருவியார் மற்றும் சிந்துபாத் போன்ற ஒன்றுக்கும் உருப்படாத விசயங்களுடன் சர்வசாதாரணமாக பக்கங்களை வீணடிப்பதில் தினத்தந்திகு நிகர் யாருமில்லை. கொலைக்குற்றவாளியானாலும் வாழ்க்கை வரலாற்றை எழுதாவிட்டால் தலை வெடித்துவிடும்!
பத்துப் பதினைந்து வருடங்களுக்குமுன் கோடிக்கும் அதிகமானப் பிரதிகள் வெளியாவதாகச் சொல்லப்பட்டது.வேலை வெட்டியில்லாதவர்கள், ஓசிப் பேப்பர் பேர்வழிகள் வாய்மெல்ல ஊர்ப்பட்ட அவல் கிடைக்குமென்பதால் தினத்தந்தி இல்லாத சலூன் மற்றும் டீக்கடை பெஞ்சுகளைக் காண்பது அரிதினும் அரிது.சேவிங் கிரீமைத் துடைக்கவும், போண்டா,வடை பார்சல் மடிக்கப் பயன்படுத்தலாம் என்பதே தினந்தந்தியின் மீதான மோகத்திற்க்கு மறைமுகக் காரணங்கள்!
ஏழை மற்றும் பாமரர்களின் செய்திச் சாதனமாக இருந்து வரும் தினத்தந்தி சமீபகாலமாக தினமலத்துடன் போட்டி போட்டு உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை தயக்கமின்றி வெளியிடுகிறது. சமீபத்தில் பெங்களூர் மற்றும் அகமதாபாத் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து சென்னை, கொல்கொத்தா நகரங்களும் தாக்கப்படக்கூடும் என்ற வதந்தீயை தினத்தந்தியும் தன் பங்குக்குப் பரப்பியது.
பிடிபட்ட சில முஸ்லிம் இளைஞர்களைக் காட்டி அண்ணா மேம்பாலத்தை குண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டிருந்ததாகப் பரபரப்புச் செய்திகளை பொறுப்பின்றி வெளியிட்டது. சென்னை அண்ணா மேம்பாலத்தில் ஓவர் லோடுடன் ஒரு மீன்பாடி வண்டியையை வேகமாக ஓட்டிச் சென்றாலே போதும் பொலபொலவென்று கொட்டும் நிலையில்தான் 30 ஆண்டுப் பழமையான மேம்பாலம் உள்ளது என்பது சிறுபிள்ளைகளுக்கே தெரிந்தது தினத்தந்தி நிருபருக்குத் தெரியாதோ?
இராம.கோபாலனைக் கொல்லத் திட்டம் தீட்டியதாகவும் வெட்கமின்றிச் சொல்கிறார்கள்! சுதந்திர தினத்தன்று கொல்லப்படுமளவுக்கு இராம கோபாலன் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகியல்லவே? இத்தகையக் குரோதச் செய்திகளால் இந்து- முஸ்லிம் கலவரத்திற்கு அடிகோலும் என்பதை தினந்தந்தி அறியாதா? தினமலம் வேண்டுமானால் இனப்பற்றில் இராம.கோபாலனுக்குக் காவடித் தூக்க எதை வேண்டுமானலும் எழுதலாம்; தினத்தந்திக்கு என்ன நேர்ந்தது?
வழக்கில் தேடப்படுபவர்கள் குஜராத்தில் நடந்தப் படுகொலைகளுக்குப் பழி வாங்குவதற்காக 6-7 வருடம் கழித்து திட்டம் தீட்டினார்கள் என்பது நம்பும் படியாக இல்லையே? பிடிபட்டவர்கள் பயங்கரக் குற்றவாளிகள் என்று செய்தி வெளியிட்டு சாதாணக் கடிகாரங்கள்,ஆணிகள், பாட்டரிகள் மற்றும் மின்சார ஒயர்களைக் பயங்கர ஆயுதங்களாகக் காட்டும் காவல்துறை சொல்வதை கிளிப்பிள்ளையாக அப்படியே பரபரப்பு செய்தியாக்கின்றனர்.
சாதாரனமாகவே இவை எல்லோர் வீடுகளிலும் இருப்பவையே என்பது ஒருபக்கமிருக்க இவற்றை வைத்து எப்படி பாலத்தையும் தமிழகத்தையும் தகர்க்க முடியும் என்று சிந்தித்து செய்தி வெளியிட்டிருக்க வேண்டாமா? அண்டப்புழுகுகளையும் அவதூறுகளையும் செய்தியாக்குவது தினந்தந்திக்கு அழகல்ல.
பரபரப்பிற்காக எதையும் எழுதுவதற்கு பத்திரிக்கைச் சுதந்திரத்தில் தடைகள் இல்லை; சம்பந்தப்பட்டவர் மறுக்கும்வரை/ மானநஷ்ட வழக்காடும்வரை எதையும் எழுதலாம்! எண்கவுண்டர் பயத்தில் ஓடிக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் நேரில்வந்து மறுக்கப் போவதில்லை. அப்படிச் செய்தாலும் அதனை வெட்கமின்றி தலைப்புச் செய்தியாக வெளியிட்டு மன்னிப்புக் கோரக்கூடிய நேர்மை எந்தப்பத்திரிக்கையிடமும் பத்திரிக்கைகளிடமில்லை.
இண்டெர்நெட்டும் ஈமெயிலும் கோலோச்சும் யுகத்திலும் பெயரில் தந்தி என்று வைத்துக் கொண்டிருக்கும் தினத்தந்தி, நேர்மைற்ற, உண்மைக்குப் புறம்பானப் பொய்ச்செய்திகளை வெளியிடுவதால் "தினவதந்தி" என்று பெயர் மாற்றிக் கொள்ளட்டும்!
நமதூர் பற்றிய அவதூறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை அலுவலங்களின் மின்முகவரிக்கு அதிரைவாசிகள் தங்கள் மறுப்பைப் பதிவு செய்யவும். இல்லா விட்டால் இதேபோன்று நமதூரைச் சார்ந்த யாரை வேண்டும் என்றாலும் தொடர்புபடுத்தி செய்தியாக்கக் தயங்க மாட்டார்கள்.
WWW.ஊர்சுத்தி.உமர்