உண்மையறியாத அதிரை-உண்மை
ஊடகங்களில் அதிரை பற்றிய மிகைப்படுத்தப்பட்டச் செய்திகளால் உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் அதிரைவாசிகள் கலக்கமும் குழப்பமும் அடைந்துள்ள இச்சூழலில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கலாம் என்றாலும் அதிரை-ட்ரூத் என்ற வலைப்பக்கத்தில் "பாவம் ஒருபக்கம்; பழி ஒருபக்கம்" பதிவுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாகச் 4-5 நாட்களாக அப்துல்லா என்ற பெயரில் ஒருவர் கூப்பாடு போட்டு வருவதால் எதிர்வினையைப் பதிவு செய்கிறேன்.
ஆப்கானிஸ்தானையும் இராக்கையும் தாக்குவதற்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W. புஷ் உலகநாடுகளைப் பார்த்து "BE WITH US OR AGAINST US" என்றார். அதாவது "எங்களோடு இணைந்து கொள்ளாதவர்களும் எங்கள் எதிரிகளே" என்றதைப்போலுள்ளது அதிரை-உண்மையின் பதிவும்!
நமதூரில் நடக்கும் மார்க்கத்திற்கு முரணான அனாச்சாரங்களுக்கு உள்ளூர் உலமாக்களே காரணமென்று எழுதி இருந்தனர். இவற்றை எதிர்க்கவில்லை என்பதால் ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமல்ல என்று SO CALLED அதிரை உண்மைக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது!
இத்தகைய அனாச்சாரங்கள் காலங்காலமாக நடந்துவருவதற்கு ஆலிம்கள் மட்டும் பொறுப்பல்ல என்பதையே "பாவம் ஒருபக்கம் பழி ஒரு பக்கம்" பதிவில் சுட்டிக்காட்டினேன். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நமதூரில் இருக்கும் இளம் மற்றும் மூத்த ஆலிம்கள் எதிர்த்ததே வந்துள்ளனர் என்றதற்கு தவ்ஹீதுவாதிகளுக்கே உரிய ஸ்டைலில் ஆதாரமில்லை என்று எழுதி இருந்தார். ஆதாரம் CD ஆகவோ அல்லது சாட்டிலைட்சானல் பேச்சாகவோதான் இருக்க வேண்டுமா என்ன? இதோ சில ஆதாரங்கள்....
* குஷ்தி போடும் சிஷ்தியிடம் "அல்லாஹ்விடம் தவ்பாச் செய்துகொள்" என்று கையைப்பிடித்து உரிமையுடன் சொன்ன அப்துல் காதர் ஆலிம்.
* கந்தூரி, சந்தனக்கூடு இவையெல்லாம் அனாச்சாரங்களென்று வாழ்நாள் முழுதும் சொல்லி வந்த மர்ஹும் முஹம்மது அலி ஆலிம் போன்றோர் தங்களைத் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளாமலேயே எதிர்த்து வந்துள்ளனர்.இந்த உண்மைகளை அதிரை-உண்மை அறியவில்லையா? அல்லது மூடிமறைத்தாரா என்பதைத் தெளிவுபடுத்தவும்.
* எனது உறவினர்களில் இரண்டு ஆலிம்கள் உள்ளனர். (அவசியப்பட்டால் பெயர்கள் தனிமடலில் கொடுக்கப்படும்)அவர்களில் எவரும் கந்தூரியையோ தர்ஹாவை ஆதரிக்கவில்லை.
நானறிந்தவரை ஆலிம்களில் எவரும் இவற்றைச் சரியென்று சொல்லக் கேட்டதில்லை. கந்தூரி, தர்ஹா வழிபாட்டை ஆதரிக்கும் ஆலிம்களை ஆதாரத்துடன் அடையாளம் காட்டவேண்டியது அதிரை-உண்மைதான்!
அன்பரே,
உள்ளூரில் ஓதிக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஆலிம்களைவிட அரசியல் செல்வாக்கு மற்றும் SINGLE SMS இல் ஆயிரக்கணக்கானோரைக் கூட்டமுடிந்த SO CALLED தவ்ஹீது ஆலிம்களே இவற்றை நேரில் களமிறங்கி தடுத்து நிறுத்தச் சக்தியிருந்தும்,இவையில்லாத அப்பாவி உலமாக்களைக் குற்றம் சாட்டுவது நியாயமல்ல என்பதையே சொன்னேன்.
எதையாவது எழுதியே ஆகவேண்டும் என்பதற்காக எதார்த்தத்தை மறந்து எழுதவேண்டாம் என்பதையே சுட்டிக் காட்டினேன். ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்! இணையத்தில் எழுதுவதோடு அல்லது மேடைகள் / தொலைக்காட்சிகளில் பேசுவதோடு தவ்ஹீது பொறுப்பு முடிந்து விட்டது என்று எண்ணாமல் இனி வரும் கந்தூரிகளின்போது, தவ்ஹீதுவாதிகளுக்கே உரிய ஸ்டைலில் தர்கா முற்றுகை,கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்று செய்து அனாச்சாரங்களைக் களமிறங்கித் தடுக்கலாமே!
பூனைக்கு மணிகட்ட அப்பாவி உலமாக்களை மட்டுமே எதிர்ப்பார்க்காமல் 'உண்மையை ஒளிந்து கொண்டு' சொல்லும் நீங்களே முன்வந்து கட்டவும்!
<<<அபூஅஸீலா-துபாய்>>>