உதைப்பந்தாட்ட வீரர் இஸ்லாத்தை தழுவினார்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எரிக் அபிதால் என்ற உதைப்பந்தாட்ட வீரர் புனித இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.
ஈரான் சர்வதேச குர்ஆன் செய்தி;கள் ஸ்தாபனம்: அந்நாட்டு பத்திரிகையான எல் பெரிடிகோவில் அவர் கொடுத்த பேட்டியில், 'நான் என்னைப்பற்றி மதத்தைப் பற்றி அதிகமாக சிந்திக்கத் தொடங்கினேன். வேறுபட்ட மதங்களைப்பற்றி ஆராயத் தொடங்களினேன். இஸ்லாம் மதத்தை தெரிவு செய்து முஸ்லிமாகி விட்டேன்.
இஸ்லாம் மதத்தைப்பற்றி நன்றாக படித்தறிந்து உணர்ந்து ஏற்றுக் கொண்டேன். நான் எப்போதும் அல் குர்ஆனை என்னுடனே வைத்துக் கொள்வேன். தற்போது எவ்வித பிரச்சினையுமின்றி எனது வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
(மாற்று மதத்தினர் இன்று இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். நம்மில் பலரோ இன்று நஜாத்,ஜமாத் என்று பிரிந்தும், நீ சிறந்தவனா? நான் சிறந்தவனா என பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம் பெண்களில் சிலர் மாற்று மதக்காரர்களின் வலையில் விழுந்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒற்றுமை காத்து சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.அல்லாஹ் அணைவருக்கும் ஹிதாயத் அருள்வானாக.ஆமின்).
-முகம்மது தஸ்தகீர்.