விழித்தெழுவார்களா?
கடந்த 03.08.2008 அன்றைய கல்ஃப் நியூஸ் (GULF NEWS) பத்திரிகையில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பெருமதிப்பிற்குரிய ஏ.எம். அஹமதி அவர்கள் டெல்லியில் கடந்த 02.08.2008 அன்று இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தால் (IICC) நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பேசியதாக சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பெருமதிப்பிற்குரிய ஏ.எம். அஹமதி அவர்கள் கூறுவது என்ன?
முஸ்லிம்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்த தவறி விட்டார்கள் அன்றியும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முஸ்லிம்களை கைவிட்டதில்லை. காரணம்,,
இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் எல்லா குடிமக்களுக்கும், இந்திய பிரஜைகளுக்கும் சரிசமமான அந்தஸ்து வழங்கி இருக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டம் முஸ்லிம்களாகிய நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை முறைப்படி நம் சமுதாய நன்மைகளை கருத்தில்கொண்டு தீர்க்கமாக சிந்தித்து சட்டரீதியாக அடைய முயற்சிக்க வேண்டும்.
அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்த முயற்சியுடன் அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை மற்ற சமுதாயத்திரைப்போல் பெற்று சமூக, பொருளாதார, அரசியலில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
தீர்வு : அனைத்து தரப்பு முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டு அரசியல் ரீதியாக நம் வாக்குகளை ஒன்றினைத்து சட்டம் இயற்றும் சபைகளில் நம் பிரதிநிதிகளை அதிகமதிகமான அளவில் தேர்தல் களத்தில் வெற்றிபெற்று அனுப்பி நம் இழந்த உரிமைகளைப் பெறவும், இருக்கின்ற உரிமைகளை தக்க வைத்துக்கொள்ளவும், கல்வி-உயர்கல்வி, குறிப்பாக அரசாட்சி செய்யும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ் போன்ற கல்வி இடங்களில் முஸ்லிம்கள் தங்கள் உரிய இடத்தை எட்டவும் அரசாங்க அதிகாரிகளாகவும், பொது நிறுவனங்களில் இயக்குநர்களாகவும் அமர்வதற்கான ஏற்பாடுகளை சமுதாயத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டும். இதற்கு முதற்படியாக அரசியல் சாசனத்தில் நமக்கு வழங்கிய உரிமைக்கு ஏற்ப, தலைமை தேர்தல்கமிஷனின் தக்க அங்கீகாரத்துடன் அமைத்துக்கொள்ள வேண்டும்.இதுவரை செய்யாத அமைப்புகள் விழித்தெழுவார்களா?
-முகம்மது தஸ்தகீர்.