சென்னை முழுவதும் 'கிழித்து எறியப்பட்ட' கண்டன சுவரொட்டி.
சமீபத்தில் பெங்களூர், அஹமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீவிரவாதிகள் நாசவேலைகளை செய்ய இருப்பதாக போலிசாரால் ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
சென்னையில் நடைபெற்ற தொடர் கொலைகளில் குற்றவாளிகளை பிடிக்க கையாளாகாத காவல்துறை, சைக்கோ கொலைகாரன் என்று புனைந்து செய்திகளை பரப்பி வந்த நிலையில் குண்டுவெடிப்பை சாதகமாக்கி பொதுமக்களை திசைதிருப்புவதற்காக கையாண்ட யுக்திகளில் ஒன்றுதான் 'முஸ்லிம் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட சதி'.
ஊடக விபச்சாரம் செய்யும் தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல் செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராயாமல் விபச்சார விளம்பரத்தில் விளையாடின.
இதனை கண்டித்து சென்னை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்ட கண்டன சுவரொட்டிகளை இரவோடு இரவாக கிழித்து எறியப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச்சிறுத்தைகள், இன்னும் பிற கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த கண்டன சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.